அத்தியாயம் – 4
சுற்றியும் அடர்ந்த மரங்கள் சூழ, இயற்கையின் தனிமையில் வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் பசுமையான செடிகளுக்கு நடுவே, சிறிதாக அமைக்கப்பட்டிருந்த அந்த தோப்பு வீட்டைப் பார்க்க ரம்மியமாக தெரிந்தாலும், உள்ளிருக்கும் வக்கிரனின் ஆளுமையில் அவ்விடமே ஒவ்வாமையை ஏற்படுத்தி முகம் சுளிக்க செய்தது.
கையில் பணத்துடன் மலங்க மலங்க விழித்து நின்ற கோதையை கண்டு, சுற்றி இருந்த சில ஆண்கன் “இவளா..” என்பது போல் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள, அவமானத்தில் தேகம் கூசி போனாள்.
சிவப்பு நிற ஓடுகளால் ^ கூரை போல கட்டிய வீடு, குனிந்து செல்லும் அளவிற்கு தாழ்வாக இருக்கும். சரியாக கதவு மூடப்படாத வீட்டில் இருந்து வெளிவரும் முணுகள் சத்தத்தில் செவிகள் கூசி அருவருப்பையே தந்தது.
உள்ளே ஆனந்தபாலன் என்ன செய்துகொண்டு இருப்பான் என அச்சத்தமே திரை விலக்கி, படம் போட்டுக் காட்டிட, “கேவலம் இப்படி ஒரு நாசக்காரனிடமா தன் பெண்மை பரிபோக வேண்டும்” என்ற வேதனையில் தன்னையே நொந்துக் கொண்ட கோதை, கலங்கி நின்றாள் கலக்கமாக.
“ஏம்மா நீயி ஆனந்து வீட்ல வேலை பாக்குற செல்வி மவ தானே?” அங்கிருந்த ஒருவன் வேட்டியை மடித்துக் கொண்டு அவளிடம் வர,
“சரியாக தன்னை அடையாளம் கண்டு கொண்டானே” என்ற பயத்தில் கோதையின் கால்கள் இரண்டும் கிடுகிடுவென ஆடினாலும், “ஆம்” என்பது போல் மெல்ல தலையசைத்தாள்.
“ஓஹ்.. ஆமா ஒனக்கு இங்கன என்ன வேல?” யோசனையாக அந்த ஆள் கேட்டிட,
“அ. அது.. உ. உள்ள.. அவையல பாக்கணும்” தோப்பு வீட்டின் பக்கம் விரலை நீட்டி, தயக்கமாக சொன்ன கோதையை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவன், மீண்டும் ஏதோ கேட்க வாய் திறக்கும் போது சட்டென வாய் மூடிக்கொண்டது, சோம்பல் முறித்தபடி மேல்சட்டை இல்லாமல் கசங்கிய கைலியோடு வெளியே வந்த ஆனந்தனை கண்டதும்.
“ஏலேய்.. இங்கன என்ன சத்தம்” பெரிய கொட்டாவி விட்ட ஆனந்த், தலை குனிந்தபடி பதட்டமாக நின்றிருந்த கோதையை புருவம் உயர்த்திப் பார்த்தான்.
“அது ஒன்னும் இல்ல ஆனந்து, இந்த புள்ளைய இங்கன புதுசா பாக்கவும் என்ன ஏதுனு விசாரிச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள நீயே வந்துட்ட” பணிவாக அவன் சொன்னதும்,
“அதே இப்ப நான் வந்துட்டேனுல்ல, நீயி கெளம்பு” நக்கலாக சொன்ன ஆனந்தபாலன், அவன் தோள்பட்டையை பிடித்து தள்ளி விட்டு துரத்தியவனாக, தலையை மட்டும் அவனுக்கு பின்னால் திருப்பி,
“ஏய் இப்ப நீயி போ.. அடுத்த தரமும் வட்டி பணம் நேரத்துக்கு குடுக்கலைனா இங்கனதே வரணும். புரிஞ்சிதா..” அதே தோப்பு வீட்டில் இருந்து அளங்கோலமாய் வந்தவளிடம் அதட்டலாக கேட்டிட, “சரி” என்பதாய் சொல்லி விட்டு ஓடி விட்டாள் அந்த பெண்.
அவள் போனதும் தலை நிமிராது இருந்த கோதையின் முன்பு, திடகாத்திரமாய் ஆனந்தபாலன் நிற்பதைக் கண்டு இதயம் படபடத்தாள் கோதை.
“என்ன விசயமா வந்த?” அதட்டலாக கேட்டவன், குனிந்தே இருந்த அவள் பால் முகத்தை, கரம் நீட்டி நிமிர்த்தப் போக, சட்டென தலையை பின்னுக்கு இழுத்து அவன் தொடாதவாரு நகர்ந்துகொண்டவளை, அலட்சியமாக நோக்கினான்.
“இதெல்லாம் எம்புட்டோ பாத்தாச்சி டி. மொதல்ல புடிக்கல புடிக்கலன்னு நடிக்கிறவளுங்கதே, ஆனந்தா உன் சுகம் இல்லாம உடம்பு முறுக்குதுடானு எம்மேலையே வந்து விழுவாளுங்க. இதோ ஒன்னைய கூட தொட்டு ஒரு நாலு நாள் இருக்குமா? அதுக்குள்ள என்னைய தேடி வந்துருக்கியே! திரும்பவும் சுகத்தை அனுபவிக்க தானே”
கேலியாக இதழ் வலைத்தவன், சட்டென கோதையின் சதைப்பற்றான இடுப்பில் கரம் பதித்து வெடுக்கென தன் தேகத்தோடு இறுக்கி நிறுத்திக்கொள்ள, இறுக்கிய அதே வேகத்தில் அவன் கரத்தை உதறித் தள்ளிவிட்டு விலகி நின்ற கோதை அரண்டு போனாள்.
“ப்பா.. என்னா வேகம். அன்னைக்கும் இப்டிதே மொதல்ல தொடும் போது, ஓட்ட பந்தயம் காட்டின. பொறவு பொட்டி பாம்பா அடங்கி, என் அசைவுக்கு தகுந்தாப்புல கண்ண மூடிட்டு படுத்துக் கெடக்கல. அதுமாதிரி இப்பவும் வெரசா வாடி ஜோலி கெடக்கு”
ஏற்கனவே அவள் அதிர்ச்சி மாறாமல் அஞ்சி நிற்க, மீண்டும் தாவி அவளின் திடம்வாய்ந்த இடையினை பற்றி இழுத்தவன், சட்டென அவள் முந்தானை சரித்து தளதளவென அலைபோல் ஆடிய மென்வயிற்றை உள்ளங்கையால் கசக்கியபடியே, பெண்ணவளின் முகிழ்ந்து பருத்த கொங்கையில் முகத்தை புரட்டி, ரவிக்கையோடே சிகரத்தின் கூர் முனையை கடித்து எச்சில் செய்ததில், கண்ணீர் ஊற்றெடுக்க நிலைக்குலைந்து போனாள் கோதை.
சொல்ல முடியாத அவமானத்தில் திளைத்துப் போனவள், கடினப்பட்டு ஆனந்தபாலனை தன்னிடமிருந்து தள்ளிவிட்டு, அவசரமாக முந்தானையை சரி செய்த கோதை, மேல்மூச்சு கீழ்மூச்சி வாங்க தீட்சண்ய விழிகளால் அவனை குத்திக் கிழித்தாள்.
“ச்சீ.. என்ன மனுசன்யா நீயி. ஒன்னைய தேடி வரவ எல்லாம் சுகத்துக்காக தான்னு நீயலா நினைச்சிட்டு இப்டி கேவலமா நடந்துகிறது ஒனக்கே அசிங்கமா இல்ல” கண்ணீர் நிற்காமல் வடிய, அவன் நடந்து கொண்ட விதத்தில் கோபம் எல்லை கடந்து அருவருப்புல் சிதைந்து போனாள்.
“கஸ்டத்துக்கு உன்கிட்ட கை நீட்டி வட்டிக்கு பணம் வாங்கினா கூட படுக்கணும். அதோட அந்த பொண்ணோட வாழ்க்கை எப்டி நாசமா போனாலும் ஒனக்கு கவல இல்ல. நீப்பாட்டுக்கு வேசிகளோட சந்தோசமா கூத்தடிச்சிட்டு இருப்ப.
ஏய்யா ஒரு மரியாதையான குடும்பத்துல பிறந்துட்டு இப்டி ஒரு ஈன புத்தியோடு இருக்க. இதுக்கு நீயி நாண்டுக்கிட்டு சாகலாம்”
இதுவரை அதிர்ந்து கூட யாரிடமும் பேசாத கோதை, தன் பெண்மை பரிப்போன ஆத்திரமும், பணத்தை கொடுக்க வந்த இடத்திலும் தகாத முறையில் ஆனந்தபாலன் நடந்து கொண்ட விதமும் ஒருசேர, கோபத்தில் உக்கிரமாகி எதிரே நிற்பவனின் அரக்க குணம் அறியாமல் கத்தியவளின் குரவலையை அவன் அழுத்தமாக பற்றி இருக்க, கருவிழிகள் இரண்டும் மேலேறியது.
“என்ன டி கொஞ்சம் விட்டா ஓவரா துள்ளுற. ஒன்னும் இல்லாத கழுதைக்கு என்கிட்டிருந்து வந்துது இம்புட்டு வாயி. அதுவும் எங்கிட்டையே எதிர்த்து பேச எம்புட்டு தகிரியம் இருக்கணும் ஒனக்கு” ஆக்ரோஷமாய் அவன் உருமியவன் பிடி அழுத்தம் கூட, அவள் கண்கள் சொருகி கால்கள் அந்திரத்தில் தொங்கியது.
“எங்கிட்ட பணம் வாங்கினா கூட படுக்கணும்னு தெரிஞ்சே துணிஞ்சி வரவளுங்க கூட நான் ப*க்கறேன் இல்ல கூத்தடிக்கிறேன். அவளுங்களுக்கே வெக்கம் மானம் இல்லாத போது, ஒனக்கு மட்டும் எங்கே டி வலிக்குது.
நீயும் என் அப்பன ஏமாத்தி பணம் பறிக்க பாத்தவ தானே. நான் கண்டு பிடிச்சதும் தப்பிக்க முடியாம வசமா மாட்டிக்கிட்ட. நியாயப்படி பாத்தா, என் குடும்பத்துல யார்கிட்ட பணம் வாங்கினாலும் அதுக்கு சந்தாவா, எங்கிட்ட சரணடையணும்னு நல்லா தெரிஞ்சிகிட்டு துணிஞ்சி என்னையத்தேடி வர நீங்க எல்லாரும் தான்டி நாண்டுக்கிட்டு சாகனும்”
சீற்றமாக உரைத்து விட்டு அவளை உதறி தள்ளிவிட, பலமான இருமலுடன் மண் தரையில் விழுந்து, கழுத்தை நீவியபடி வேதனையாக அவனை பார்த்தவளின் கண்கள் ஏகத்திற்கும் கலங்கி இருந்தது.
“எம்முன்னாடி கேவலம் ஒரு பொம்பள குரல உசத்துறதா? அடிச்சி கொண்டேபுடுவேன் பாத்துக்க. இன்னொரு தரம் உன் சத்தம் வெளிய கேட்டுச்சி, அதே எடத்துல ஒனக்கு சங்குதே” விரலை ஆட்டி நாக்கை மடித்துக் கடித்து கத்தியவனை கண்டு, நெஞ்சிக்கூடு தூக்கிவாரி போட நடுங்கி விட்டாள் கோதை.
“ஏய் இந்த நீலிக்கண்ணீர மொதல்ல நிப்பாட்டிட்டு எந்திரிச்சி நில்லு டி. பாக்கும் போதெல்லாம் கண்ண கண்ண கசக்கிட்டு” கசங்கிய கைலியை பிரித்து மீண்டும் கட்டியபடி ஆனந்தபாலன் கத்த, படபடப்பாக கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து நின்ற கோதை, தரையில் விழுந்த பணப்பையையும் வேகமாக எடுத்துக்கொண்டாள்.
அதுவரை அவள் கையில் கெட்டியாக வைத்திருந்த கவனிக்காதவன், தற்போது அதனை அவசரமாக கோதை தேடி எடுக்கவும் யோசனையாக கண்டு, “கைல என்ன டி பையி?” என்றபடி வேகமாக பிடிங்கி பிரித்தவன் கண்கள் இடுங்கியது.
“ஏது டி இம்புட்டு பணம்?” கட்டு பணத்தையும் கையில் எடுத்து ஆட்டியவனை எச்சில் விழுங்க பார்த்தாள்.
கண்ணாயுதபாணியிடம் இருந்து கைமாத்தாக வாங்கிய பணத்திற்கே பெண்மையை பறித்துக்கொண்டான். இதுவும் நாயகி கொடுத்த பொருளை விற்று வாங்கிய பணம் என தெரிய வந்தால் என்னென்ன செய்வானோ என்று நினைக்கும் போதே உள்ளம் பதைபதைக்க, அடிவயிற்றில் பயப்பந்து உருண்டது.
“ஏய் ஒன்னையத்தே கேக்க.. வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க. சொல்லு ஏது இம்புட்டு பணம்?” துளைக்கும் பார்வையால் அவளை அளந்தவனுக்கு ‘திடீர்னு எப்படி இவளிடம் இவ்வளவு பணம்’ என்ற சந்தேகம் தோன்றியது.
“அ.அது.. பணம்.. அ.அம்மா.. அம்மா என் கல்யாணத்துக்காக சீட்டு போட்டது.. உங்க கடனை அடைக்க வேற வழிஇல்லாம, அவசரதேவைனு வாங்கிட்டு வந்துட்டேன். இதை குடுக்கதே இம்புட்டு தூரம் வந்தேனே தவிர, வேற எந்த எண்ணமும் எனக்கு இல்ல.
வட்டியோட சேத்து பணத்தை குடுத்துட்டேன். தயைசெய்து இனிமே என்னைய தொந்தரவு பண்ணாதீய”
கையெடுத்து கும்பிட்டவளின் குரல் நடுங்கி, கண்ணீர் திரள திணறலாக சொல்லி முடித்த கையோடு விருவிருவென அங்கிருந்து ஓடிய கோதையை கண்ட ஆனந்தபாலன், தாடையை தேய்த்தபடி அந்த பணத்தை திருப்பிப் பார்த்தான்.
** ** **
அதிகாலை நேரம் சேவல் கூவும் சத்தத்தில் கண் விழித்த நாயகியின் மனதில் வெறுமை மட்டுமே குடிகொண்டிருந்தது.
பக்கவாட்டில் அவள் கணவன் அசந்து உறங்கிக் கொண்டிருக்க, ஒருக்களித்து படுத்து அவன் முகத்தை பார்த்தாள் வேதநாயகி.
“ஊருக்கெல்லாம் நியாயம் தர்மம்னு வியாகானம் பேசி, எல்லார்கிட்டயும் மரியாதையா நடந்துக்க தெரியும். ஆனா எங்கிட்ட மட்டும் எப்பவும் முசுடா நடந்துக்க வேண்டியது”
மெல்லிய முணுமுணுப்போடு உறங்கும் போது சற்றே கனிந்த முகமாக கண்மூடி இருந்த கணவனை நெருங்கி, இரவு கூடலின் போது கலைந்து போன அவன் கேசத்தை வருடிவிட்டு, அவன் முகத்தினை ஆசையோடு தடவிப்பார்த்தாள்.
அவன் முழித்திருக்கும் போது நிமிர்ந்து பார்க்கவும் அத்தனை பயம். மற்ற நேரங்களில் சாதாரணமாக இருக்கும் முகம் கூட, இவளை கண்டாள் முறைப்பது போலவே கடினம் கூடிப்போவதை கண்டு பெண்மனம் பதறிப் போகுமே!
“காத்தால ஆனா கண்விழிச்சி, குளிச்சி தயாராகி வெளிய போற வரைக்கும், நாயகி.. நாயகின்னு ஏலம்விட்டு, என்னைய உங்க கண்முன்னாடி வச்சி ஏதாவது வேலை வாங்க வேண்டியது.
வீட்டுக்கு திரும்பினதும் திரும்பவும் என்னத்தையாவது சொல்லி உங்க முன்னாடியே என்னைய அலைய விடவேண்டியது. கொஞ்சம் நான் காணம போனாலும் வீடே அதிர கத்தி அலம்பல் பண்றது. ராத்திரி கட்டில்ல சேர்ந்த பிறகுதே கொஞ்சமாவது இந்த வாய் மூடும்.
இதுக்கெல்லாம் அர்த்தம் எம்மேல உள்ள பாசமா இல்ல காமம் மட்டுந்தானான்னு இதுவரைக்கும் என்னால புரிஞ்சிக்க முடியலைங்க.
15 வருசமாச்சி நமக்கு கல்யாணம் முடிஞ்சி. ஒருநாள் கூட எங்கிட்ட சிரிச்சி பேசினது இல்ல. ஆசையா ஒங்க அணைப்புல வச்சிக்கிட்டது இல்ல. ஒடம்புக்கு முடியாம கெடந்தாலும் அக்கறையா கவனிச்சிக்கிட்டது இல்ல. நமக்கு குழந்தை இல்லையேன்னு ஒரு கவலை இல்ல.
எப்பவும் பாக்கும் போதெல்லாம் வள்ளு வள்ளுனு விழுந்து, என் மனசை எதுக்குங்க கலங்கடிக்கிறீங்க” கண்ணீரோடு அவனது வெற்று நெஞ்சில் ஒன்றியவள், சீராக துடிக்கும் அவன் இதயத்துடிப்பில் மென்முத்தம் வைத்து முகத்தை புரட்டினாள் நாயகி.
தனிமையில் யாரிடமும் தன் குமுறலை சொல்ல முடியாது வாடுபாவளுக்கு தினமும் கிடைக்கும் ஒரே ஆறுதல், உறங்கும் கணவனின் மென்மையை ரசித்து அவன் நெஞ்சில் புதைந்துகொள்வது தான்.
“நீங்க என்னதே எங்கிட்ட கடுமையா நடந்துகிட்டாலும், ஏதோ ஒன்னு உங்கள வெறுக்க முடியாதபடி என் மனசை கட்டிபோடுது. எம்புட்டு கோவப்பட்டாலும் சின்ன புள்ள போல எல்லா விஷயத்துக்கும் என்னைய நீங்க தேடுவீய பாருங்க, அப்போ உங்க முகத்தை பாக்கவே அழகா இருக்கும். என்ன ஒன்னு வெளிய சொன்னா என் பல்லு கழண்டு போகும். சரியான முசுடு புருசன்”
சோகமாக நினைத்த நாயகி, மெலிதாக சிரித்துக்கொண்டாள்.
இன்னும் ஏதேதோ எண்ண அலைகலோடு, விழித்திருக்கும் போது கணவனிடம் மனசுவிட்டு பேச முடியாதவற்றை எல்லாம், உதட்டசைவில் முணுமுணுப்பாக பேசியபடி சில நிமிடங்கள் அவன் மார்பில் புதைந்திருக்கும் சுகமோ சுகம். அடுத்த 20 மணி நேரத்திற்கு ஓயாமல் வேலை செய்ய இதுதான் அவளுக்கு எனர்ஜி பூஸ்ட்டும் கூட.
கணவனின் சூடான அணைப்பில் மீண்டும் கண்சொக்கி உறக்கம் கண்ணை மறைக்க துவங்கியதும், சட்டென சுதாரித்து எழுந்துகொண்ட நாயகிக்கு உறங்கும் கணவனை விட்டு பிரிந்து எழ மனமே இல்லை. அவன் விழித்துக்கொண்டால் இப்படி ஆறுதலாகவும் மனநிறைவாகவும் அவனோடு ஒன்ற முடியாதே!
தரிகெட்டு அலையும் மனதை கடிவாளமிட்டு அடக்கிக் கொண்டவளாய், குளித்து முடித்து உடைமாற்றிக் கொண்டு மங்களகரமாய் சமையல்க்கட்டிற்கு வந்த நாயகி, அன்றாட வேலையில் மூழ்கிப் போனாள்.
தொடரும்.