அத்தியாயம் – 35
அனைத்து சிக்கலும் தீர்ந்து ஒருவழியாக நாயகியை உருட்டி மிரட்டி தன்னுள் அடக்கி சமாதானம் செய்த தேவன், மனைவியோடு எத்தனை நேரம் கட்டிக்கொண்டு அவளை நெஞ்சில் தாங்கி, உச்சியில் இதழ் பதித்துக் கிடந்தானோ!
“ஏய் பொறப்படலாமா டி” தேவனின் கேள்வியில், எங்கே என புரியாமல் விழித்தாள் நாயகி.
“என்ன அப்டி பாக்குற நம்பூட்டுக்குதே கூப்புடறேன். நீ இல்லாம அங்கன வெறுத்து போச்சி டி. ஒருபக்கம் நானா வந்து ஒன்னைய சமாதானம் செய்யணுமானு வீம்பு புடிச்சாலும், ஒருநாளாவது ஒன்னைய பாத்துட மாட்டோமான்னு தெனமும் மனசு ஏங்கும் பாரு.. அந்த அளவுக்கு என்னைய முழுசா ஒனக்குள்ள மூழ்கடிச்சி வச்சிருக்க டி நாயகி”
தொடர்ந்து அவள் பூ இதழில் தன் அதரம் உரசியபடியே சொன்ன கணவனை, இமைகள் படபடக்க அப்பாவியாக பார்க்கும் இந்த மனைவியின் அழகு தானே, தேவனை மதி மயக்கி வைத்திருக்கிறது.
“கண்ண அப்டி உருட்டாத டி, கடிச்சி தின்னுட போறேன்.. இப்டி பாத்து பாத்துதே என்னைய ஒனக்கு அடிமையாக்கி வச்சிருக்க” உதடு சுழித்து அவள் உதட்டிலேயே மீண்டும் இச் வைக்க, “ஆத்தி நானுங்களா..” இச் வைத்த உதட்டை பிளந்தாள்.
“ம்ம்.. நீயேதே.. அகிம்சை காத்தே இந்த தேவனை உன் இதயதக் கூட்டுல பூட்டி வச்சிப்புட்ட டி..” காலம் கடந்து மனதில் கொண்ட ஆசை வார்த்தைகளை மனைவியோடு பகிர்ந்தாலும், இப்போதாவது அதனை பகிர மனம் வந்ததே! உயிர் உள்ளவரை உவகையோடு வாழ்வாள் மாயோள்.
“என்னங்க ரொம்ப நேரமா தரையில படுத்து இருக்கீயலே, காயம் வலிக்க போதுங்க எந்திரிச்சி கட்டில்ல படுங்க” காற்றுக்கும் நோகாது மெல்லமாய் உரைத்த நாயகி, கணவனின் சரசப் பேச்சில் சிவந்து, விலகி எழப் பார்க்க, அவள் இடையில் கால் போட்டு அமுக்கிய தேவன், அவள் மார்பில் கிடந்த பொன் தாலியை ஒதுக்கி வைத்து அவ்விடத்தில் இவன் தலை சாய்த்தான்.
“இதை விட சிறந்த வலி நிவாரணி இந்த உலகத்துல வேற எந்த மூலைக்கு போனாலும் கிடைக்காது டி. இங்கன தலைய வச்சிக்காம தூக்கம் தொலைச்சி பைத்தியம் புடிச்சி திரிஞ்சேன் தெரியுமா!
ரெண்டு மாச பிரிவு, தூக்கம், துக்கம், காமம், கோபம், தவிப்பு, என் சந்தோசம், சாப்பாடு எல்லாமே பாக்கி கணக்கு இருக்கு. ஒன்னுவுடாம ஒன்னைய வதைச்சி என் கணக்க தீர்க்காம இம்மியும் நகர விடமாட்டேன். இப்பவே பொறப்படு வீட்டுக்கு”
கட்டளை இட்ட மன்னவன் கரம் பிடித்து பெற்றோர் ஆசியோடு தேவனின் இதயராணியாக, அடிமையாக, காதலியாக, மனைவியாக, அவன் சகலமும் கொண்ட நாயகியாக வலது பொற்பாதம் அடி வைத்து மீண்டும் புகுந்த வீட்டிற்குள் ஒலியாக வந்தாள் வேதநாயகி.
அண்ணனின் முகத்தில் வெளிச்சம் பார்த்த ஆனந்தபாலன் உள்ளுக்குள் நிம்மதி அடைந்து வெளிகாட்டிக் கொள்ளாமல் சென்றிட, நாயகி மீண்டும் வந்ததில் கோதைக்கு அளவில்லா மகிழ்ச்சி என்றால் தண்டாயிதம் முகம் இருளடைந்து போனது.
“அக்காஆ..” அடுப்பாங்கரையில் இருந்து ஓடி வந்த வந்த கோதையை அணைத்து விடுத்த நாயகி,
“எப்டி இருக்க கோத..? ஆஸ்பத்திரி போனியே டாக்டர் என்ன சொன்னாக? குழந்தையெல்லாம் நல்லா தானே இருக்கு? டிவி பொட்டில படம் புடிச்சி காட்டுவாங்களாமே அமுதா சொன்னா, அந்த படுத்துல குழந்தைய பாத்தியா..?”
வந்ததும் குழந்தையை பற்றி ஆர்வமாக ஆவலாக நலம் விசாரித்த நாயகியை, உள்ளுக்குள் திரண்ட வேதனையோடு தேவன் பார்த்து நகர, கோதைக்கும் இருவரது நிலை எண்ணி தர்மசங்கடம் தான்.
ஒவ்வொரு முறையும் நாயகி தனக்கு ஒரு குழந்தை இல்லையே என கலங்கும் போதும் உடன் இருந்து அவளை தேற்றி இருக்கிறாள். இப்போது தான் உண்டாகி அவள் இத்தனை ஆர்வமாக விசாரிப்பதில், தான் ஏதாவது கூட குறைய குழந்தையை பற்றி சொன்னால் ஏங்கிவிடுவாளோ என்ற தயக்கத்தில்
“குழந்தைக்கு என்ன க்கா ரொம்ப நல்லா இருக்கு” என்றாள் புன்னகையாக.
“சரி சரி.. கோத ரொம்ப சந்தோசம். இப்ப தானே நாலு மாசம் முடிஞ்சிருக்கு இதுக்கு மேல நல்லா சாப்ட்டு உடம்ப கவனமா பாத்துக்கிட்டாதே, குழந்தை பிறக்கும் போது வலி தாங்க முடியுமாம். இப்பதே ந்நா வந்துட்டேனே இனிமே ஒன்னைய நல்லா கவனிச்சிக்கிறதுதே எனக்கு முழுநேர வேலையே.
வா வா.. ஒனக்கு என்ன புடிக்கும் புடிக்காது எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லு, தெனமும் செஞ்சி அசத்திபுடுறேன்” உற்சாகமாக சொன்ன நாயகி, இன்னும் பெரிதாக வெளிதெரியாத கோதை வயிற்றை தடவிப்பார்த்து தடவிப்பார்த்து பெரிதாக ஆனந்தம் கண்டு தானாக புன்னகைத்தாள்.
தன் வீட்டிற்கு வாரிசு ஒன்று வர்றவிருக்கிறது. தான் பெற்றால் என்ன கோதை பெற்றால் என்ன? எல்லாமே ஒன்று தானே! எப்போது தன் கையில் பச்சிளத்தை ஏந்துவோம்! அதன் பிஞ்சி கை பற்றி முத்தமிடுவோம்! என்ற ஆசை தான் அதிகமாக பெருகி போனது.
நாயகிக்கு நடந்த அசம்பாவிதம் பற்றி அறிந்ததும் பதறிப் போன அமுதா, அவள் வீட்டிற்கு வந்து பார்த்து கண்ணீரோடு அணைத்துக் கொண்டவளால், அண்ணனை சென்று பார்க்க முடியவில்லையே அனைத்து பிரச்சனைகளும் தன்னால் தானே என அழுது புலம்பி தீர்த்தவளை, நாயகி சமாதானம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஆனது.
இப்போது அவளுக்கும் ஐந்து மாதம் எப்படி அழைத்து வைறாரா ஆக்கிப் போட்டு, பூ முடிப்பது என்ற பலத்த யோசனையில் குழப்பமாகவே சுற்றி வரும் மனைவியை தேவனும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான்.
முதலில் எல்லாம் எனக்கு எப்போது குழந்தை உண்டாகும்? என்ன பரிகாரம் செய்தால் குழந்தை பிறக்கும்? எந்த மருத்துவரை பார்த்தால் குழந்தை தங்கும்? வாய் திறந்தாலே மொத்த பேச்சும் குழந்தை வேணும் என்றே பேசுபவள், இப்போதெல்லாம் அதனை பற்றி துளியும் வாய் திறவாமல் இருப்பது, குழப்பத்தை உண்டு பண்ணியது தேவனுக்கு.
குழந்தை ஆசை யாருக்குத் தான் இல்லை. அதில் தேவனும் விதிவிளக்கு இல்லையே! ஆனால் தன் மனைவிக்கு அந்த பாக்கியமே இல்லை என்று அறிந்ததில் இருந்து அவன் ஆசை மறைத்து மனைவியை மட்டுமே முழுமனதாக நேசிக்கத் தொடங்கி, அவளே தனக்கு அனைத்துமாக வாழத் தொடங்கிய பிறகு குழந்தை ஆசை விலகி, மனைவி ஆசை மட்டுமே இப்போது வரை அவன் மனம் முழுக்க நிரப்பி வைத்திருக்கிறான் தேவன்.
திருமணமான சில மாதங்களில், கோவில் திருவிழாவிற்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்திருந்தான் தேவன். நல்ல வெயில் மண்டையை பிளக்க, புது மனைவியை அழைத்துக்கொண்டு அவள் தோளில் கைப் போட்டு சுற்றாத இடமில்லை.
அன்னதானம் வழங்கவும் அவளை முன்னிலையில் நிறுத்தி அவள் கையால் வழங்க சொல்ல, அதிக வெயில் தாக்கத்தில் மயங்கி விழுந்தவளை பதட்டமாக மடியில் தாங்கிய தேவனை சுற்றியும் இருந்த மக்கள், குழந்தையாக இருக்கும் என கதையை திரிக்க, அப்படித்தானோ என்ற பரவசத்துடன் மருத்துவமனைக்கு தூக்கி சென்ற தேவனின் தலையில் இடியை இறக்கி இருந்தனர்.
“ஏற்கனவே அவங்க லேட்டா தான் பருவம் அடஞ்சி இருக்காங்க. மாசம் மாசம் ரெகுலரா மாதவிடாய் வர்றதே பெரிய விஷயம். கர்பம் தரிக்கிற அளவுக்கு அவங்க யூட்ரஸ் சரியா பங்க்ஷன் ஆகல சார். குழந்தை பிறக்குறது 90 சதவிகிதம் சான்ஸ் கம்மி.
இந்த விஷயத்தை நீங்க முதல்ல அக்சப்ட் பண்ணி, முடிஞ்சா நாளடைவில உங்க வைஃப்க்கு புரிய வைங்க. இப்பவே இதைப்பத்தி சொன்னா அவங்க அதையே யோசிச்சி ஹெவி டிப்ரஷன்க்கு போவாங்க, இதுனால அவங்க உடல்நிலையில வெவ்வேறு பிரச்சனைகளை உண்டு பண்ண வாய்ப்பிருக்கு.
அவங்களா குழந்தைய பத்தி யோசிக்கும் போது, ரெண்டு பேர் மன திருப்திக்கும் வேற டாக்டர்ஸ கூட பாருங்க. ஆனா அதுக்கு முன்னாடி அவங்கள மனதளவுல நீங்க ஸ்ட்ராங் ஆக்குங்க. எந்த சூழ்நிலைலையும் உனக்காக நான் இருக்கேன்னு நம்பிக்கை கொடுங்க. ஏன்னா பெண்கள் குழந்தை விஷயத்துல ரொம்பவே அடமண்ட்டா இருப்பாங்க. குழந்தைக்கு பிறகு தான் ஹபாண்ட் எல்லாம்.
அதுல உங்க மனைவி எப்படினு முதல்ல புரிஞ்சிகிட்டு அதுக்கு ஏத்தது போல அவங்ககிட்ட நடந்துக்கோங்க”
நாயகியை முழு பரிசோதனை செய்த மருத்துவர் கூறி செல்ல, இடிந்து போன தேவனுக்கு “உண்மையை சொன்னால் மனைவி தாங்குவாளா..?” என்ற கலக்கம் அப்போதே அவன் நெஞ்சில் ஆழப் பதிந்து, நாயகி குழந்தை வேணும் எனும் போதெல்லாம் இதயத்தை சுற்றியும் பெருத்த வேதனை சூழ்ந்து போகும்.
எங்கே மருத்துவரை அணுகினால் உண்மை தெரிந்து நாயகி தன்னை தானே வெறுத்து போவாளோ! தன்னை விட்டு விலகி போவாளோ! என்ற அச்சம் பரவி, இதுநாள் வரை அவளிடம் இவன் வெறுப்பைக் காட்டி தன் பயத்தை போக்க முயற்ச்சித்து உள்ளம் நொந்து போய் மனைவியை விட்டு தூர விலகி போகும் தேவனுக்கு, மனைவி குழந்தை ஆசையில் துள்ளும் போதெல்லாம் ஆண்மனம் மௌனமாய் கதறிடுமே!
இதோ வந்து விட்டாள் தன் முன்னே தயக்கமாக! வாய் திறந்தால் எதை பற்றி பேசுவாள்? என்று யோசித்து யோசித்தே பதினைந்து வருடங்களை கடத்தி வந்தவன் தான் இப்போது அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகி, மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வருகிறான்.
“என்னங்க முக்கியமான விசயம் பேசணுமே பேசட்டுமா..?” என்றாலே குழந்தையை பற்றி தான் என அவளோடு வாழ்ந்த இத்தனை ஆண்டுகளில் அவதாணித்து வைத்தவன்,
“எனக்கு வேலை இருக்கு டி.. எதுவா இருந்தாலும் ந்நா சிலுவான பொறவு பேசுறேன்” என்ற தேவன் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு நடையை கட்டி இருக்க, எப்போதும் போல நாயகி முகம் வாடி நின்றாள்.
“என்ன க்கா மாமாகிட்ட அந்த விசயத்தை பேசிட்டீயலா..?” ஆர்வமாக கேட்ட கோதைக்கு இல்லை என்று தலையாட்ட, இவள் தலையும் தொங்கி போனது.
“இப்ப என்னக்கா பண்றது”
“ஆனந்து அத்தாங்கிட்டதே பேசி பாக்கணும் கோத” நாயகிக்கு தெரியுமே யாரிடம் பேசினால் வேலைக்கு ஆகும் என்று.
“ம்ம்.. சரிக்கா.. அப்போ நீங்களே அவையல்ட்ட பேசிடுங்க” நேக்காக நாயகியை கோத்துவிட்ட கோதையை சின்னதாக முறைத்தாள்.
“என்ன க்கா முறைக்கிறீய.. என்ன இருந்தாலும் பல்லு புடுங்காத பாம்பு வெசம் இருக்கதானே செய்யும். அடிக்கடி திட்டி மூஞ்ச காட்டிபுடுறாக க்கா. அந்த நேரம் அவைல்ட்ட பேசவே பயமா இருக்கு” பாவமாக சொன்னவளை, இவளும் அதே நிலையில் தான் பார்க்க முடிந்தது.
“சரி சரி புள்ளத்தாச்சி பொண்ணு சும்மா மூஞ்சிய சோகமா வச்சிக்காத, அத்தான் வரட்டும் நானே பேசுறேன்” இரு பெண்களும் பேசிக்கொண்டு இருக்கும் போதே, நாயகியின் நாயகனே இரவு வீடு திரும்பிவிட்டான்.
கணவனுக்கு ஆசையாக பரிமாறிய நாயகி, அவன் அறைக்கு சென்றதும் பாத்திரங்களை எடுத்து வைக்கத் தொடங்க,
“நாயகிஇ..” அவள் பெயரை நயனமாக அழைத்து விட்டு, மேல் சட்டையை கழட்டி மாட்டிய தேவன் குளியலறைக்குள் புகுந்திட, ஒற்றை அழைப்பில் அவசரமாக ஓடி வந்த நாயகி, தன் முந்தானை விலக்கி ரவிக்கையின் கொக்கிகளை ஒவ்வொன்றாக கழட்டிட தொடங்க, தலை துவட்டியபடி வெளியே வந்த தேவன் முதுகு காட்டி நிற்கும் மனைவியை யோசனையாக பார்த்தவனாக,
“அங்கன திரும்பி நின்னு என்னத்த டி பண்ணிட்டு இருக்கவ” கனீர் குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த மனைவியின் செழிப்பான தரிசனத்தில் கண் சொக்கிப் போனான்.
“என்ன டி இது கோலம்” கத்திக்குத்து காயத்தால் இல்லறம் காணாது மனைவியை அருகில் வைத்து தவிப்பவனுக்கு, அவளின் இக்கோலம் கண்டு சித்தம் கலங்கியது.
“இல்லைங்க நீங்க வந்ததும் கூப்பிட்டா இதுக்குத்தானே, அதே உங்களுக்கு சிரமம் வைக்க கூடாதுனு நானே.. இப்டி..” அவசரமாக உரைத்து திணறிய மனைவியின் பேச்சில் உள்ளம் அடிப்பட்டான் காளையன்.
இத்தனை ஆண்டுகளில் அறைக்குள் இருக்கும் போது கூப்பிட்டால், அதற்கு அர்த்தம் கட்டிலில் அவளோடு இணையத்தானே! மற்றபடி அவளோடு பேசி நேரம் செலவிட எல்லாம் அத்தனை பயம். தான் கொஞ்சம் இலகி பேசினாலும் இவள் குழந்தை என தொடங்கிடுவாளோ என்று.
அதற்காக கையில் எடுத்த ஆயிதம் மனைவியை அருகிலேயே வைத்து, அவளை கட்டிக்கொண்டே இல்லறம் கொண்டாடி அணுஅணுவாக அவள் முனகல் ஒலி ரசித்து, அவள் பொன்மேனி ரசித்து, அவள் கண் சொக்கல் ரசித்து, வலித்திடாமல் அவளுள் இணைந்து, அவள் நெஞ்சை முட்டி கருந்திராட்சையில் சுகம் காண்பது தான்.
ஆனால் அவள் புரிந்து கொண்ட விதம் வேறு எனும் நினைக்கும் போது மனம் ரணித்தாலும் தன்னுள் மறைத்த தேவன்,
“நீயா கழட்டிட்டு நின்னின்னா, எப்டி டி எனக்கு கிக்கா இருக்கும். ஒவ்வொரு கச்சையா நானே கழட்டி உன் அழக ரசிச்சி, எச்சில் முத்தம் குடுத்தே உன் கண் சொக்க வச்சி, நெஞ்சை நிருடி, தொப்புள் குழில விரல் சுத்தி, நா சுழட்டி, பொறவு கீழ ந்நா..” பச்சையாக அந்தரங்கம் பேசி போதையாக தன்னை நெருங்கிய கணவனை, குப்பென சிவந்த முகத்துடன் பார்க்க முடியாமல் தலை குனிந்து சிணுங்கிய நாயகிக்கு ஒரே வெக்கமாகி போனது.
லேசாக வாய் திறந்தாலும், உதடுகள் இரண்டும் தடித்த மீசை விழுங்கி களேபரம் செய்ய துடிக்கும், தேவனின் முகத்தை நூலிழை தூரத்தில் காண்பதே ஒவ்வொரு முறையும் மூச்சிமுட்டி போகிறது பெண்ணுக்கு. இதில் எங்கிருந்து அவன் பச்சை பேச்சிக்கு எசை பேச்சை பேச.
எப்போதும் போல தன்னவளின் கழுத்தை அலங்கரித்த பொன் தாலியில் தன் முத்திரை பதித்த தேவன், நேர் பார்வையால் அவள் நயனத்தில் தன் நயனம் கலந்தபடியே, உள்ளங்கை விரித்து அவள் கழுத்தை தடவி, தாடை ஏறி, கன்னம் கசக்கிய தேவன், பெருவிரல் கொண்டு அவன் முத்தமிட்டு சிவக்க வைத்த மென்உதடை அழுத்தி வருடிட, ஹப்பா.. தேகமே சிலிர்த்து சிவந்து போனது பெண்ணுக்கு.
“அமுதாவ கூப்ட்டு அவளுக்கு என்னென்ன செய்ய நீ ஆசை படுறியோ எல்லாமே செய் டி. எம்புட்டு நாளைக்கு கூட வச்சிக்க தோணினாலும் சரிதே. அவ நல்லபடியா குழந்தை பெத்து அவ புருசன் வீட்டுக்கு சந்தோசமா போவட்டும்”
அதுவரையில் கண்மூடி நின்று தன்னவன் ஸ்பரிசத்தில் லைத்து இருந்த நாயகி, மென்மையாக ஒலித்த கணவன் பேச்சில் முதலில் திகைத்து, பின் கலங்கிய விழிகளோடு மகிழ்ச்சியாக சிரித்தவள், தேவனை இறுக கட்டிக்கொள்ள, மனைவியின் உள்ளம் அறிந்த களிப்பில் அவன் உதடுகளும் மௌனமான புன்னகை பூத்தது.
தனக்கு கிட்டாத பாக்கியம் தன் தம்பி தங்கைக்கு கிட்டி இருக்கிறதே, அதுவே பெரும்பாக்கியம் தானே! எதுவாக இருந்தாலும் தன் ரத்தமும் கலந்தது தான். தனக்கும் குழந்தைகள் தான் அது எப்போதும் மாறாது. ஆனால் இதில் விதிவிளக்காக நாயகியும் தன் சொந்தங்களை ஆதாரித்து அளவுகடந்த அன்பை செலுத்துவது தான் எப்போதும் அவனுக்கு வியப்பாக தோன்றும் விடயம்.
தன் அன்னை மற்றும் மனைவி போல் தான் தங்கையையும் இதுநாள் வரை நடத்தினானே தவிர, திருமண விடயத்தை தாண்டி மற்றபடி அமுதாவை வெறுத்து ஒதுக்கி வைத்தது இல்லையே அமரதேவன்.
நாயகனின் அனுமதி கிட்டியது தான் தாமதம், நாயகியும் கோதையும் ஒன்றிணைந்து அமுதாவை அழைத்து வந்து, பூ முடிக்கும் விசேஷத்தை தடபுடலாக கொண்டாடி தீர்த்துவிட்டனர்.
இதில் எதிலும் முகம் கொடுத்து பேசி கலந்து கொள்ளாமல், முகம் சிடுசிடுத்து ஒதுங்கியே இருந்த மாமனாரை கண்டு தான் இரு பெண்களுக்குமே வருத்தமாகி போனது.
அடுத்த மாதமே கோதைக்கும் பூ முடிக்கும் விஷேசத்தை மகிழ்ச்சியாக நடத்திட, கணவன்மார்களின் மாற்றத்தில் இரு பெண்களும் நிம்மதி மூச்சி விட்டு, குழந்தைகள் வர்ற போகும் மகிழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வீடே விழாக் கோலமாக இருந்தது.
முதலில் அமுதாவிற்கு ஆண் குழந்தை பிறந்து, தாய்மாமன்கள் உவகையில் செல்ல மாப்பிளையாக கையில் தவழ்ந்த குழந்தைக்கு தங்கமும் வெள்ளியும் போட்டு அழகு பார்த்து, எனக்கு உனக்கு என குழந்தை தரையில் விடாமல் சண்டையிட்டுக்கொள்ளும் அண்ணன்களை, தழும்பும் கண்ணீரோடு சிரித்துக் கொண்டே பார்த்தாள் அமுதா.
தனக்கு கிடைக்காத அண்ணன்கள் பாசம், தன் பிள்ளைக்காவது கிடைத்து முத்தத்தால் குளிப்பாட்டி கொண்டாடுகின்றனறே அந்த களிப்பு போதாதா.. பெரிய மனதாக உள்ளே நினைத்தாலும், தனக்கு இந்த பாசம் கிடைக்கவில்லையே என்ற அப்பட்டமான ஏக்கம் அவள் கண்களில் இழையோட, அப்பாசத்தை காட்டவே தாய் வடிவில் தலை கோதி சிரித்தாளே நாயகி.
மறு மாதம் கோதைக்கு பிரசவம். குழந்தையும் பிறந்தது அனைவரின் உள்ளத்தையும் கனக்க வைத்து.
தொடரும்.