அத்தியாயம் – 23
“இன்னும் எம்புட்டு நாளைக்கு இங்கனவே கஸ்டப்பட்டு கெடக்க போற நாயகி” அதிகாலையிலேயே எழுந்து அவசர அவசரமாக சோறு பொங்கி வைத்து கடைக்கு கிளம்பியவளை தடுத்தார் லட்சுமி.
“இதுக்கு ந்நா நிறைய தரம் பதில் சொல்லியாச்சும்மா..” இறுகிய நிலையில் சொன்னவளை பாவமாக பார்த்தார்.
“சொல்றேன்னு அம்மாகிட்ட கோச்சிக்காதமா.. மாப்ள தம்பி அன்னைக்கு இருந்த கோவத்துல அப்டி நடந்துகிட்டு இருக்கும். நீயா ஒருமுறை இறங்கி போயி மன்னிப்பு கேக்குறதுல என்ன கொறஞ்சிட போவுது. நம்ம மேல தப்பு இருக்கோ இல்லையோ அவங்க தகுதிக்கு நாமதாமா பணிஞ்சி போவணும்” என்ற தாயை கண்ணில் உயிர்ப்பின்றி விரக்தியாக பார்த்தாள் நாயகி.
“பதினஞ்சி வருசமா பணிஞ்சி போனதால மட்டும் தாம்மா இம்புட்டு நாளும் அங்கன ந்நா குடும்பம் நடத்தி இருக்கேன். என்னைக்குமே பணிஞ்சி போவ ந்நா தயங்கினது இல்ல. ஆனா அது என் கழுத்துல தாலி இருந்த வரைக்கும்தா. செத்தாலும் என் மொகத்துலையே முழிக்காதேன்னு தாலிய அத்துட்டு வெரட்டி அடிச்ச பொறவு, அர்த்தமே இல்லாத உறவுக்கு போராடி ஒண்ணுமே ஆக போறது இல்லமா..
இனி என்னைக்கும் ந்நா தனிதா.. கடைக்கு நேரமாச்சு கெளம்புறேன்” என்றவள் வேக நடையோடு அங்கிருந்து கிளம்பி இருந்தாள்.
மனம் முழுக்க ரணமும் வேதனையும். அவன் துரத்தி அடித்து இதோ மாதம் கடந்து போனது.
“உண்மையான அன்பும் பாசமும் இருந்திருந்தால் எப்போதோ தன்னை தேடி ஓடி வந்திரிப்பாரே. கடமைக்கு தாலி கட்டி ஊர் பெருமைக்காக குடும்பம் நடத்தியவர் எப்படி வருவார்” உள்ளுக்குள் குமைந்து,
“ஆமா இந்த மலட்டு கழுதைய தேடி போயி என்ன பிரயோஜனம்னு நினைச்சிருந்திருப்பார். அதே இம்புட்டு வருசமா சலிக்க சலிக்க என்னைய எல்லா விதத்திலயும் அனுபவிச்சுட்டாரே, இப்ப இந்த பாழாபோன வெறும் ஒடம்பு ஒண்ணுத்துக்கும் உதவாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு இருப்பாக”
சாலையில் நடந்தாலும் அவள் எண்ணங்கள் முழுதும் கணவனை எண்ணி தரிகெட்டு திரிந்திட, கண்ணீர் திரையிட்டு மறைத்ததில் கீழே மேலே என்ன இருக்கிறது என பாராமல் நடந்த நாயகி, பாதையில் கிடந்த கல்லில் ஓங்கி இடித்துக்கொண்டவளின் கால் விரலில் அடிபட்டு ரத்தம் கொட்டியதை கூட பல்லை கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாள்.
உள்ளே கொழுந்துவிட்டு எரியும் அதீத ரணத்தை விட, இந்த வலி பெரிதாக படவில்லையோ என்னவோ!
கைபிடி மணலை அள்ளி காயத்தில் தூவி ரத்தத்தை நிறுத்திக்கொண்டு மீண்டும் நடக்கத் துவங்கி விட்டாள் கடைநோக்கி.
** ** **
அடுப்பாங்கறையில் நின்று வேலை பார்க்கவே சங்கட்டமான நிலையில், ஒவ்வொரு நாளும் சமைத்து முடித்து வெளிவருவதற்குள் யுகங்கள் போல் கடக்கிறது கோதைக்கு.
வேலைக்காரியா இங்கு வந்த போது தன்னை ஆதரித்த நாயகி, இன்று இந்த குடும்பத்திற்கு ஆகாதவளாகி போயிருக்கும் இந்த நேரத்தில், அவள் இடத்தில் தான் வந்து இருப்பது என்னவோ மனதுக்கு உறுத்தலாகவே இருந்தது.
ஆனந்தபாலனை தவிர வேறு யாரும் அவளிடம் இந்த வீட்டில் பேசுவதில்லை. அனைவருக்கும் செய்து வைக்கும் உணவை மறுநாள் எடுத்து கனத்த மனதுடன் மாட்டிற்கு போடும் கோதை, மீண்டும் சமைத்து வைத்து தன் கடமையை சரியாக தான் செய்து வந்தாள்.
அன்றும் தீவிரமான சமையல் வேலை நடந்துகொண்டிருக்க, வீடு முழுக்க பரவிய கமகம மணத்தில் அவள் பின்னே வாள் பிடித்து வந்து விட்டான் ஆனந்தன்.
“ஓய்.. என்ன டி செஞ்சிட்டு இருக்கவ” செவியில் சூடான உதடு உரசி, இடை வழி கரம்விட்டு அடிவயிற்றில் இறுக்கிப் பிடித்திட, அக்.. மூச்சே நின்று போனது அவனது திடீர் செயலில்.
“ஏய் நான்தாந்டி.. யாரு வர்றானு இந்த பயம்” மொத்தமாக தன் மீது கோதையை சாய்த்துக்கொண்டவன், இன்னும் ஏகுவாக அவள் வயிறு பிசைய, கூச்சத்தை விட சங்கட்டம் தான் அதிகம் அவளை தாக்கியது.
“யாராவது வர்ற போறாங்க, தயவுபண்ணி தள்ளி நில்லுங்களேன்” நெளிந்துகொண்டே வாயிலை பார்த்தவளின் கன்னத்தில் எச்சில் கடியால் கவ்விப் பிடித்து, மேலும் நெருக்கிக்கொண்டவனாக,
“தள்ளிப் போன்னா, இந்த அளவுக்கு போதுமா டி” கிசுகிசுத்த ஆனந்த், அவள் கன்னத்தில் உள்ள மென்மையை நா கொண்டு ருசிக்க, ஐய்யோ என்றானது அவளுக்கு.
உதடு கடித்துக்கொண்டு அமைதியாக தலைகுனிந்த கோதையின் நாசியில், நன்றாக கொதித்துக்கொண்டிருந்த குழம்பின் வாசம் தீண்டவே, மெல்ல கை நீட்டி அடுப்பை அணைத்தவள், அருகில் வெந்துகொண்டிருந்த பொரியலை கிண்டி விட முயலுகையில், அவள் கரத்தை தானும் பற்றிக்கொண்டு அவளோடு கிண்டிட, “இது என்ன டா சோதனை” எனும் விதமாக தலை திருப்பி அவனை கண்ட நொடி, பச்சக்கென்று அவள் இதழை கவ்வியபடி அவன் வேலையை தொடர, அதிர்ச்சியில் கால்கள் பின்னியது பெண்ணுக்கு.
அவள் உதட்டுக்குள் உமிழ்நீரில் முட்டையிட்டு விளையாடி உறிந்து ருசிக்கும் அவசர விளையாட்டில், அடுப்பில் கிண்டிய பொரியலை அப்படியே மறந்து போக, தீய்ந்து போன வாசம் வீடு முழுக்க பரவியதில், அப்போதே வீட்டினுள் நுழைந்த தேவன் நாசிக்கும் பரவி, முகத்தை சுருக்கினான்.
“மச்.. இந்த அளவுக்கு தீஞ்ச வாட வருது, அப்டி என்னத்த கவனம் இல்லாம சமைக்கிது இந்த பொண்ணு” சலிப்பாக நினைத்தபடி வந்த தேவன் உடல், மனைவி இல்லாமல் பாதியாக போனதை அவனே கவனிக்கவில்லை போலும்.
நாயகியின் கை பக்குவம் என்றால் அவளை அருகில் நிறுத்திக்கொண்டே முப்பது இட்லியை கூட அசால்ட்டாக விழுங்கும் தேவனுக்கு, இப்போதெல்லாம் இரண்டு இட்லியை விழுங்குவதே மலையை முழுங்குவதை போன்ற வலியை கொடுக்கிறது.
என்னவோ மனசு தேடுது. அது அவதான்னு ஆழ் மனசு அடிச்சி சொன்னாலும், வீம்பு புடிச்சவனுக்கு எங்கே உரைச்சிது.
இங்கோ, தீவிர முத்த சுகத்தில், ஆழ்ந்து அனுபவித்து பெண் இதழை வன்மையாக சுவைத்தபடி, அவள் மேனியில் உள்ள சதை உருண்டைகளை, தனது வலிய கரத்தால் கரைக்கும் முயற்சியில் இறங்கிய கடோஜகன் முகத்தை, முன்னால் இருந்த பளிச்சிட்ட பாத்திரத்தில் கண்டு மிரண்டு துவண்ட கோதை,
வாடை வந்த திசை நோக்கி அவசரமாக வந்த தேவனை கண்டு மேலும் அதிர்ந்து போனாள் என்றால், அங்கு கண்ட முத்தக் காட்சியில் உறைந்து போன தேவனும், புத்தி பேதலித்தவனாய் வந்த வேகத்தில் இடத்தை காலி செய்திருந்தான்.
“அச்சோ.. பாத்துட்டாகலே..” படபடப்பாக உள்ளுக்குள் நினைத்து, அதே வேகத்தில் கணவனை எட்டி தள்ளிவிட்ட கோதை, எச்சில் உதட்டை துடைத்தபடி கலவரமாக அவனை பார்க்க, மோகத்தவிப்பில் வெந்து போனது ஆனந்தன் முகம்.
“இப்ப என்னத்துக்கு டி தள்ளிவுட்ட..” பாதியில் தள்ளி விட்டாளே கோவம் வந்தது அவனுக்கு.
“உ.உங்க அண்ணங்க..” அச்சத்துடன் உதடு நடுங்க சொன்னவளை கூர்ந்து பார்க்க,
“அவசரமா வந்தவரு நம்மள இப்டி பாத்துட்டு போய்ட்டாக.. என்ன நெனச்சாவலோ தெரியலையே” சங்கட்டமாக கையை பிசைந்தவளின் பயத்தை, கோபத்துடன் ரசித்த முரடன் அவள் கரம் பற்றி ஒரு சுற்று சுற்றி தன்னோடு அவள் முதுகினை இணைத்தவன், அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, வயிற்றை இறுக்கிக்கொள்ள, மீண்டும் மீண்டுமா என எச்சிலை விழிங்கினாள் கோதை.
“அவன் பாத்தா பாத்துட்டு போறான். நீயி அதைப்பத்தியெல்லாம் நினைக்காத டி.. ஏன்னா இம்புட்டு வருசமா, அவன் பொண்டாட்டி கூட பண்ண கூத்தை எல்லாம் நானும் அப்டித்தான் கண்டும் காணாம போயிருந்திருக்கேன்.
நாம இருக்குறது ஒண்டி குடித்தனம் இல்ல கூட்டு குடித்தனம், புருசன் பொஞ்சாதி ஒத்த அறைக்குள்ளே அவிங்க சந்தோசத்த பதுக்கிக்க முடியாது டி. இதுமாதிரி கிடைக்கிற எடத்துல அப்பப்ப குட்டி குட்டியா அனுபவிக்கிற சுகமே தனி..
அதையெல்லாம் எவன் பாப்பானோ.. ஐய்யோ ஆத்தேன்னு பயந்துட்டே தள்ளி போட முடியாது டி. கிட்டக்க வா பாதிலே தள்ளிவுட்டதுக்கு தண்டனைய தர்றேன்..”
எக்கி அடுப்பை அணைத்துவிட்டு, அவளையும் விடாபிடியாக அணைத்து பாதியில் விட்ட முத்தத்தை தொடர, படுபாவி பையலால கஸ்டப்பட்டு செஞ்ச பொரியல் வீணா போச்சேன்னு கவலையில் மூழ்கி போனாள் கோதை.
வேகமாக தனதறைக்கு வந்த தேவன், மெத்தையில் அமர்ந்து அழுத்தமாக தலைகோதி முகத்தை மூடிக் கொண்டான்.
“தனியா ரூம் எதுக்கு இருக்கு, அங்கன பொண்டாட்டிய கூட்டிட்டு போயி கொஞ்ச கூடாது. இப்பதே இளமை துள்ளுது போல அடுப்படில நின்னு அசிங்கம் பண்ணிட்டு இருக்கான் தடியன்” கண்ணை திறவாமல் தனியே பேசியவனை அவன் மனசாட்சியே எல்லளாக நகைத்து வைத்தது.
“ஏன் இம்புட்டு வயசாகியும் நீ உன் பொஞ்சாதியோட பண்ணாத அசிங்கத்தையா உன் தம்பி பண்ணிபுட்டான்.. அவன் இப்பதே புது பொண்டாட்டி கட்டி வச்சிருக்கான் கொஞ்சிறான், ஒனக்கு எங்க வலிக்குது. நீயும் போயி உன் பொண்டாட்டிய கொஞ்சி”
உள்ளிருந்து வந்த கேலிக் குரலில் எரிச்சலாகிப் போனான்.
“அட ச்சீ.. மூடிட்டு போ.. பெருசா வந்துட்ட அவள கொஞ்சி இவள கொஞ்சினு.. ஏதோ கட்டின பாவத்துக்கு அவளோட வாழ்ந்தேனே தவிர, மத்தபடி அவ மேல எனக்கு எந்த ஒரு அபிப்ராயமும் இருந்ததில்ல” வீராப்பு பேசியவன் வாயே, கண்ணாடியில் தெரிந்த அவன் முகத்தில் காரி உமிழ்ந்து கொண்டது.
“அபிப்ராயம் இல்லாத நாயி, தெனமும் என்ன மை*துக்கு அவள பாக்க ஏங்கி, அவ வீட்டுபக்கம் போய்ட்டு போய்ட்டு வர்றியாம்.. தாலிய புடிங்கி தொரத்திவுட்டதோட சரி இன்னவரைக்கு அவளை பாக்க முடியல. அப்டி என்னத்ததே உள்ள புகுந்துட்டு பண்ணுவாளோ..” மண்டையை பிடித்துக்கொண்டுவனுக்கு எப்படி தெரியும் அவள் படும் நகரவேதனைகளை பற்றி.
இவன் போகும் நேரம் அவள் கடையில் இருப்பாள் அல்லது வீட்டில் இருந்தாலும் வெளிவர்ற மாட்டாள். இவன் ஒவ்வொரு நாளும் மறைமுகமாக வந்து வந்து ஏமாந்து போக, இவள் வேலை தேடி அலைந்த நாட்களில் கூட வெறும் வீட்டையே நோட்டமிட்டு சென்றவனுக்கு, அவளை பற்றி யாரிடமும் கேட்டு தெரிந்துகொள்ள கூட முரண்டு பண்ணியது பிடிவாதம்.
கௌரவத்தை விட்டுக்கொண்டு மனைவியிடம் இறங்கி போக ஒற்றுக்கொள்ளாத அவனது இந்த வரட்டு பிடிவாதமே, அவனுக்கு எதிராகி போனதை என்ன செய்து சரி செய்வானோ!
சரி செய்ய நினைக்கும் போது, அனைத்தும் அவன் கைமீறி போயிருக்கும்.
** ** **
“ஒத்த சீல கூட சரி இல்ல. நீயா ரெண்டு எடுத்துக்கிறியா இல்ல, ஒனக்கு சீலை எடுக்கவே நானும் அப்பாவும் வேலைக்கு போகட்டுமா” லட்சுமியின் அதட்டலில்,
“சரி ம்மா.. எடுத்துக்குறேன். ஆனா என்ன அவசரம்” என்ற நாயகியை முறைத்து வைத்தனர் பெற்றோர்.
“இங்க பாரு நாயகி, எங்க பொண்ணா மட்டும் இருந்தா நீ எப்டி இருந்தாலும் எங்களுக்கு பரவால்ல. ஆனா இப்ப நீ பெரிய வீட்டு மருமக. கோவத்துல பெத்தவங்ககிட்ட வந்துட்டாலும், அங்கன நீ இருந்த பகட்டுக்கு கொஞ்சமாவது இங்கன இருக்க வேணாம். அம்மா சொல்றத கேட்டு நல்ல துணிய உடுத்து” என்ற தகப்பனை இயலாமையோடு பார்த்த நாயகிக்கு, ஒன்று மட்டும் தெளிவாக விளங்கியது.
ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட்டால் பிறந்த வீட்டை சொந்தம் கொண்டாட முடியாது என்று.
“அந்த பக்கமும் முட்டு. இந்த பக்கமும் முட்டு. பேசாம தனியா போய்டலாமா..!” என்ற யோசனை அடிக்கடி தோன்றினாலும், வயதான பெற்றோரை மேலும் மேலும் தன்னால் வருத்தம்கொள்ள வைக்க மனமில்லை.
அன்று மதியம் போல் கடையில் கேட்டு, கையில் கொஞ்சம் அட்வான்ஸ் பணமும் வாங்கிக்கொண்டு டவுனுக்கு சேலை எடுப்பதற்கு தாயை உடன் அழித்து சென்றிருந்தாள் நாயகி.
வருடக்கணக்கில் ஆனது பேருந்தில் பயணம் செய்து. பழைய நினைவுகள் ஆட்க்கொள்ள பின்னோக்கி போகும் மரங்கள், புள் மேயும் ஆடு மாடு, ஆங்காங்கே அகவும் மயில்கள் என சன்னலோரம் அமர்ந்து அனைத்தையும் பார்த்து வந்த நாயகி மனதில், சற்றே குதூகலம் ஒட்டிக்கொண்டது.
ஐநூறுக்கு குறைந்த ஒரு மூன்று சேலையினை மகளுக்கு பார்த்து பார்த்து எடுத்த லட்சுமிக்கு எடுப்பாக, இரண்டு சேலையை கொண்டு வந்த நாயகியை முறைத்து வைத்தார்.
“இந்த வயசுல புது சீலை உடுத்தி ந்நா எங்க போவ போறேன். வயசு புள்ள நீ நல்லதா கட்டிக்கிட்டா போதும்” என்ற தாயை இப்போது அவள் முறைத்தாள்.
“ஆமா இதையேதா வயசு இருந்த போதுல இருந்தே சொல்லிட்டு இருக்க. ந்நா மொதமொதல்ல சம்பாதிச்ச பணத்துல ஆசையா எடுத்து தர்றேன்ல, என் திருப்திக்கு ஒன்னாவது எடுத்துக்கோமா..” கெஞ்சலாக கேட்ட மகளிடம் நிராகரிக்க முடியாது, அத்தனை ஆசையோடு அந்த புடவையை எடுத்து தன் மேல் வைத்து அழகு பார்த்தார்.
மறக்காமல் தந்தைக்கும் ஒரு வேட்டி சட்டை துண்டை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியவர்களுக்கு, உள்ளே மயங்கி கிடந்த தங்கராசை கண்டு அதிர்ச்சியில் துவண்டு போயினர்.
பதறி அடித்துக்கொண்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, பிபி சுகர் கூடி இருந்தும் சரியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருந்ததால் ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றுவிட்டார் என்று கூறியதும், தாயும் மகளும் கண்ணீருடன் கையை பிசைந்து நின்றனர்.
சில மாத்திரைகளை வெளியே எழுதி கொடுத்திருக்க, கையில் அஞ்சி பைசா இல்லை. அனைத்து பணமும் துணியாக வீட்டில் இருக்க, மருந்துக்கு என்ன செய்வது என தெரியாமல் மீண்டும் கடைக்கு சென்று கேட்டவளுக்கு ஏமாற்றமே எஞ்சியது.
“வேணும்னா நாங்க வட்டிக்கு வாங்குற ஆளை காட்டிகுடுக்குறேன், எம்புட்டு வேணுமோ வாங்கிக்க ஆனா சரியா அதே தேதிக்கு பணத்த திருப்பி குடுத்துபுடனும் இல்லாட்டி வீடு புகுந்து அராஜகம் பண்ணுவாப்புல..” கடை முதலாளி சொல்ல, அவர் சொன்னதை கேட்டே எச்சில் விழுங்கியவளுக்கு வேறு வழியின்றி தலையாட்டி வைத்த நாயகிக்கு, வட்டிக்காரர் விலாசத்தை கொடுத்து அனுப்பினார்.
அளவான வீட்டு வாசலில் பெரிய கேட் போட்டு வாட்ச்மனை நிறுத்தி இருக்க, அவரிடம் விபரம் சொல்லி காத்திருந்த நாயகியை அப்பக்கமாக சென்ற ஆனந்தன் கண்கள் சுருக்கிப் பார்த்தான்.
“இங்கன என்ன பண்ற..” அவனது கனீர் குரலில் நிமிர்ந்து பார்த்த நாயகி, மௌனமாக வேறு புறம் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“ஒன்னையதே கேக்குறேன், அங்கன பாத்தா என்ன அர்த்தம்” என்றான் அழுத்தமாக.
“சொல்ல விருப்பம் இல்லைனு அர்த்தம்” முதல் முறையாக தன்னை நிராகரித்து பதிலுக்கு பேசிய அண்ணன் மனைவியை உற்று நோக்கினான் ஆனந்தன்.
“கொஞ்சம் எறங்கி போனா இவளுங்களுக்கு தலைல கிரீடம் முலைச்சிடும். இதுகளுக்கு எல்லாம் என் அப்பனும் அண்ணனும்தே சரி” உதட்டசைவில் முனகியது, அவளுக்கும் தெளிவாகவே கேட்க செய்தது.
“இப்ப என்ன விசயம்னு சொல்றியா இல்லையா” கீழ் உதட்டை கடித்துக்கொண்டு அடித்தொண்டையில் இருந்து ஒரே மிரட்டு தான், நடுங்கிய பள்ளி மாணவி போல அத்தனையும் ஒப்பித்துவிட்டாள்.
“பணம் வேணும்னு வாய தொறந்து கேட்டா என்ன.. அப்டியா கௌரவம் முட்டுது. இங்கன வட்டிக்கு வாங்க எந்த தகிரியத்துல வந்த. இவைன் எம்புட்டு பெரிய ரவுடிபயனு தெரியுமா.. பணம் குடுக்க ஒருமணி நேரம் தவறினாலும் உண்டு இல்லைனு ஆக்கிபுடுவான்” பற்களை கடித்தவனை கண்டு தலை தாழ்த்தினாள் நாயகி.
“எம்புட்டு வேணும்?” சட்டை சொக்காவில் இருந்து கத்தை பணத்தை எடுக்க,
“எனக்கு ஒங்க பணம் வேணா” என அவசரமாக தடுத்த நாயகியை, ஏன் என்பது போல புருவம் இடுங்க பார்த்தான்.
“என் கழுத்துல ஒங்க அண்ணன் கட்டின தாலி இல்ல”
“அதுக்கு”
“உறவே இல்லாத இடத்துல கை நீட்டி பணத்த வாங்கினா சரி வராது. என் அண்ணன் கட்டின தாலிதா இப்ப இல்லையே வட்டிக்கு இல்லைனா நீ இருக்கியேன்னு, என்னையும் மத்த பொம்பளைங்கள போல நீய நினைச்சிப்புட்டியன்னா செத்தே போவேன். அதுக்கு பதிலா இந்த ரவுடிங்ககிட்டக்கயே அடிஉதை பட்டுட்டு போவலாம்”
அவன் விரலை வைத்தே அவன் கண்ணில் சுருக்கென குத்திய நாயகியின் பேச்சில், ஆறடி தேகமும் அதிர்ச்சியில் ஆடிபோய் நின்றவனை உள்ளூர பொங்கி வழிந்த பயத்துடன் பார்த்துவிட்டு, விருவிருவென வீட்டிற்கு வந்திருந்தாள்.
தொடரும்.