Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 20

வதைக்கும் அகிம்சையே! – 20

by Indhu

அத்தியாயம் – 20

மனதில் ஆயிரம் ஆயிரம் தீராத கவலைகளை சுமந்துகொண்டு, ஒவ்வொரு ஜீவனும் தனித்தனி திசையில் பிளவுப்பட்டு கிடந்தன!

எதையுமே மனசு விட்டு பேசினால் தீராதது இல்லை. ஆனால் இங்கு பேசவே வாய்ப்பளிக்காமல், தானும் நொந்து, உடன் இருப்பவர்களையும் நோகடித்தால் என்ன செய்வது!

வேட்பு மனு பரிசீலனை முடிவு வந்த நாளன்று, சக்கரபாண்டி மீதிருந்த கடுப்பில் வீட்டிற்கு வந்த தேவனின் கண்கள் அவனையும் அறியாது, மனைவி முகம் தேடி அலைந்ததை உணர்ந்து தலையில் தட்டிக்கொண்டவன், செல்வி கொடுத்த தேநீரை வேண்டா வெறுப்பாக குடித்துவிட்டு அறைக்கு வந்தவனுக்கு எதை கண்டாலும் வெறுப்பு தோன்றியது.

மனைவி வேண்டாம் அவள் நினைப்பும் வேண்டாம் என உறுதியாக தனக்கு தானே எத்தனை முறை சொல்லிக்கொண்டாலும், கேடுகெட்ட மனம் மட்டும் “மனைவி வேணும்” என அடம் பண்ணியதை உணர உணர, பைத்தியம் பிடிக்கும் உணர்வு தான்.

“ச்ச.. அவ பண்ண தப்பாலதே, கண்டவனும் என்னைய தேடி வந்து அசிங்க படுத்திட்டு போறான். ஆனா ஒனக்கு அவ கேக்குதா. வேணான்னு தானே வெரட்டி அடிச்ச. திரும்ப திரும்ப எதுக்கு ஒனக்கு அவள தேடுது”

கண்ணாடியில் தன் பின்பம் பார்த்து கன்னத்தில் அறைந்துகொண்ட தேவன், ஆழ மூச்செடுத்து படுக்கையில் விழுந்தவன் நெஞ்சி சொக்காயில் இருந்து, அவன் முகத்தில் சரிந்து விழுந்த மனைவியின் தாலிகொடியை கையில் எடுத்துப் பார்த்தவன் உதடு, தானாக அதனை தீண்ட, பார்வையோ சுவற்றில் மாட்டி இருந்த திருமண படத்தில் பதிந்தன.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்,

முதல் முதலாக வேட்பாளர் மனு தாக்கல் செய்து விட்டு, தேர்தல் பிரச்சாரம் என்று கத்துக்குட்டியாக அலைந்து கொண்டிருந்தான், 26 வயதான இளங்காட்டுக் காளை அமரதேவன்.

பெண்களை நிமிர்ந்து பார்த்திடா கூரிய விழிகளும், மைக் பிடித்து பேசும் கம்பீரப் பேச்சும், முருக்கான தேகமும், வெள்ளை வேஷ்டியின் நுனியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு நடக்கும் வீர நடையும், அவனது வசீகரமும் என அவன் ஆண்மையின் அழகில் மயங்கி, ஊரில் உள்ள பாதி பெண்களின் கண்களும் அவனை வட்டமடிக்க, இவன் கட்சி கூட்டம் என்று படு பிஸி.

“தேவா ஒனக்கு பொண்ணு பாத்திருக்கேன், தேர்தல் முடிஞ்ச மறு வாரம் கல்யாணம்”

பொண்ணு பாத்திருக்கேன் பிடிக்குதா சொல்லு என அவன் விருப்பம் கேளவில்லை. மாறாக உனக்கு கல்யாணம் மட்டும் தகவல் சொல்ல, தந்தை சொல் தட்டாதவன், “சரிப்பா” என்றதோடு அவன் வேலையை பார்த்தானே தவிர, பெண்ணை பற்றி ஒரு வார்த்தை வாய் திறக்கவில்லை.

தந்தை எது செய்தாலும் தங்கள் நல்லதுக்கு தான் என்ற நம்பிக்கை அவனுக்கு.

“தேவா.. தேவா.. நீ கட்டிக்கிட போற புள்ளைய பாத்தியானு கேட்டதுக்கு, இதுவரைக்கும் பாத்ததில்லைனு சொன்னியே! அந்தா பாருடே நீயி கட்டிக்கிட போறவ நிக்கா” நாயகி வீட்டின் பக்கம் ஒரு வேலையாக நண்பனை அழைத்து வந்த தேவனை சுரண்டி காட்டிட,

“யாருடே அது” என கேட்டபடி திரும்பிய தேவன், அப்போது தான் முதல் முறையாக நாயகியை பார்த்தான்.

21 வயது தொடக்கத்தில் பிஞ்சான பருவச்சிட்டின் வசீகரிக்கும் அழகு முகம் பார்த்ததும், வாலிப வயது தேவனை அசைத்து விட்டது என்று தான் சொல்லவேண்டும்.

“ஓட்டு கேக்கும் போது இவ வீட்டுக்கும் தானே வந்து கேட்டோம், எப்டி இவள மட்டும் நம்ம பாக்காம விட்டோம்” ஆராய்ச்சியை மனதில் ஒட்டினாலும், சில்லென்ற காற்று முகத்தில் மோத, அழகியின் அழகினை முதல் பார்வையிலேயே அமிர்தமாய் பருகினான் அமரதேவன்.

படபடவென நிறுத்தாமல் துடிக்கும் மீன் இமைகளில், சிறிதே சிறிது அஞ்சனை தீட்டி இருந்தது, தூரத்தில் நின்றிருந்த இவன் துப்பாக்கி பார்வையில் சரியாக சிக்கிக்கொள்ள, பாவையின் சிக்கென்ற உடல் வனப்பில் மயங்கி, எதை ரசிக்க எதை விட எனும் அளவுக்கு, ஒன்று விடாமல் அணுஅணுவாக ரசிக்கும்படியாக பாவாடை தாவணியில், வெண்பற்கள் பளிச்சிடும் ஆளை மயக்கும் சிரிப்போடு, வீட்டின் அருகே உள்ள பிள்ளைகளோடு சில்லு விளையாடிக் கொண்டிருந்த இளம் சிட்டை, பார்வையாலே கொத்தித் தின்று சென்றான்.

அடுத்தடுத்து நாட்கள் அவளை பார்க்க என்றே, இல்லாத வேலைக்கு இருக்குனு சொல்லி அங்குட்டும் இங்குட்டும் நாயாய் அலைய வைத்தது அவன் வாலிப வயசு. ஆனால் அன்னக்கிளியின் தரிசனம் தான் தொடர்ந்து கிட்டவில்லையே!

அங்குள்ள வாலிபர்கள் பார்வைக்கு பயந்து, அவளே என்றாவது ஒருநாள் தான் அத்திப் பூத்தார் போல் வெளி வருவாள். அது தெரியாமல் இவன் வந்து வந்து ஏமாற்றத்தில் கடுப்பாகி,

“இனிமே வரக்கூடாது” தெளிவாக முடிவெடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றவன், மறுநாளும் தவறாது வந்து விட்டான் தேவியின் தரிசனம் வேண்டி.

அவன் ஏக்கம் உணர்ந்தாளோ பாவை. அன்று என்னவோ அதிசயம் போல் வெளிவந்த அழகு பைங்கிளியை, குறுகுறுப்பாக பார்த்தவன் இடை அவஸ்தையாக நெளிந்தது.

பாவாடை ஒரு நிறம், லவுக்கை ஒரு நிறம் என்று மங்கி வெளுத்த பழைய தாவணியை தான் உடுத்தி இருந்தாள்.

ஆனாலும் அவளின் தீராத அழகு அவையெல்லாம் தோற்கடித்து இருக்க,

“தாலிய கட்டிபுட்டு, நாளுக்கு ஒரு பட்டுல அழகு பாக்கணும்” அப்போதே மனதில் ஆழப் பதிந்து போக, காத்திருந்த திருமண நாளும் கைகூடி வந்தது.

ஜோசியர் சொன்னதை போல், நாயகியை மகனுக்கு முடிக்கும் முன்னமே, நல்லயோகமாக மகன் ப்ரெசிடெண்ட் பதவியை ஏற்றத்தில் ஏகபோக மகிழ்ச்சியில் இருந்தார் தண்டாயிதம்.

தேவன் தேடி தேடி வாங்கிய குங்குமப்பட்டில், அவனே பிரத்தியேகமாக செய்து வாங்கிய தங்கநகைகளில் ஜொலிக்க, தன் அருகில் தலைகுனிந்து அமர்ந்திருந்த மெழுகுசிலையை, அவன் முரட்டு பார்வையால் விழுங்கி ரசித்த தருணங்கள் எல்லாம், மாண்டாலும் மறையாது அவனது நினைவுகளில் இருந்து.

மயில் போல் பளபளத்த நீண்டு வளைந்த வெண்கழுத்தில் அவன் சூடிய மாங்கல்யத்தை, தலை நிமிர்ந்திடாமல் கண்ணீருடன் ஏற்ற அவள் மதிமுகத்தை காணும் ஆவலில் குனிந்து பார்க்க, ம்க்கும்.. விட்டால் தலையை கொண்டு போயி அக்னி குண்டத்தில் விட்டுக்கொள்வதை போல அமர்ந்திருந்தவளை கண்டு சலித்துக்கொண்டான் தேவன்.

நாயகியின் பெற்றோர் மகளை கட்டிக்கொடுத்த இடத்தில் தங்க சங்கடப்பட்டு, நாயகிக்கு பல அறிவுரைகளை வழங்கி முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தவர்கள் அன்று இரவே தங்கள் வீட்டிற்கு புறப்பட்டு இருந்தனர்.

சந்தனப் பட்டு சுற்றி அதன்மேல் பொன்தாலி மின்ன, உச்சிக் குங்கும வாசனையோடு தன் முன்பு குனிந்த தலை நிமிராது, மலங்க மலங்க விழித்தபடி கலக்கமாக நின்ற தங்கசிலையை, ஆறஅமர கிட்டத்தில் பார்த்து சொக்கிப் போனான் அமரதேவன்.

“பேரென்ன..?” பள்ளி வாத்தியார் போல் விரைப்பாக கேட்ட முதல் கேள்வியிலேயே கண்ணீர் பொலபொலவென கொட்டியதை கண்டு, உள்ளுக்குள் பதைத்தாலும், தந்தை வழி பின்பற்றுபவனாயிற்றே! எப்படி மென்மையை காட்டுவான்.

“ஏய்.. ஷூ.. இப்ப என்ன கேட்டேன்னு அழுது நாடகம் நடிக்கிற. புருசன் கேள்விக்கு ஒடனே பதில் சொல்ல தெரியாது” கீழ் உதட்டை மடக்கிக் கடித்து முதலிரவு அறையில் மனைவியை மிரட்டிக் கொஞ்சிய கணவன், இவனாக தான் இருப்பான்.

“வ்.வேதநாயகி..” பேசினாளா.. ஆம் பேசினாள். அதுவும் தென்றலாக அவன் மனதை தொட்டு இதயத்தை குடைந்ததில், கட்டுமஸ்து உடம்பு என்னவோ பண்ணியது.

“ஏன் தலைய நிமித்தி என்னைய பாத்தா ஆவாதோ.. ந்நா என்ன பாக்க பூதம் போலவா இருக்கேன்” கடுப்பாக கேட்டவனுக்கு, “என்னையும் இவ மூஞ்சிய பாக்க விடமாட்டேங்கிறா.. இவளும் என்னைய பாக்க மாட்டேங்கிறா.. எம்புட்டு நேரந்தே இவ மொகத்த பாக்க கெடையா கெடக்குறது. குனிஞ்சி குனிஞ்சி இந்த கழுத்து வலி வேற” தனக்குள் முனகிய தேவன், தனது நீண்ட கழுத்தினை அழுந்த தேய்த்து கொண்டான்.

தேவன் அதட்டிய சத்தில் அதிர்ந்து, அச்சத்தில் கால்கள் உதறி நின்ற சிறுத்தயிடைக்காரி, அவன் சொன்னதற்காக மின்னல் வேகத்தில் தலை தூக்கி அவனை பார்த்துவிட்டு மீண்டும் தலை தாழ்த்திக்கொள்ள, அவள் செயலில் சிரிப்பு வந்தது அவனுக்கு.

“ஏய்.. என்ன டி பண்ணிட்டு இருக்க. இப்டியே நீயி தலைய நட்டுட்டு இருந்தா, குனிஞ்சி பாத்தே சீக்கிரத்துல எனக்கு கூனு வந்திடும். இங்கன வந்து ஒக்காரு” சற்றும் யோசிக்காமல் அவள் இடைபற்றி இழுத்து தன்னருகில் ஒட்டி அமர்த்திக்கொள்ள, அவளுக்கும் அதிர்ச்சி மின்சாரம் தாக்கியது. அவனுக்கும் இன்ப மின்சாரம் தாக்கியது.

“ஆக்..” அமர்ந்த வேகத்தில் துள்ளி எழுந்த கோழியை ஒரே அமுக்காக அமுக்கி, தன் மடியில் அவளை சாய்த்து புது மனைவியின் வதன அழகையும், தன் நெஞ்சை இடித்து பிரளயம் உண்டாக்கிய  வனப்பு அழகையும் ஒருசேர நோக்கிய தேவனுக்கு, அவள் பிஞ்சி தேகத்து ஸ்பரிசத்தில் மூச்சி முட்டியது.

“ஏன் டி என்னைய பாத்தா இம்புட்டு பயம், ந்நா என்ன கடிச்சாபுடுவேன்” ஒருமாதிரி கிறக்க குரலில் கேட்டவனுக்கு, தன் நெஞ்சை குத்திய அமுதகலசங்ளை உடனே கடிக்க தான் ஆசை.

முட்டை கண்களை அகல விரித்த பாவைக்கு, தேவனின் தடாலடியான நெருக்கத்தில் உடல் நடுங்கினாலும், அவன் கத்தலுக்கு பயந்தே அசையாமல் கிடந்தவளின் நெஞ்சிக்கூடு மட்டும், பலமாக ஏறி இறங்கி, அவன் தாபத்தை கூட்டியது.

“நமக்கு இன்னைக்கு முதலிரவு ஒனக்கு தெரியும் தானே” துடித்த அவள் வரி உதடுகளை பார்வையால் அளந்துகொண்டே கேட்டிட,

“ம்ம்..” மட்டுமே கொட்டிய பெண்கிளியை, அவன் மடியில் முளைத்த நீள்கொம்பு, இவள் பின்னழகில் முட்டி மேலும் அதிர்ச்சியில் திளைக்க வைத்தது.

“அப்டினா என்னனு தெரியுமா?” அவள் மிரட்சியை காண காண சுவாரசியம் கூடினாலும், மார்பு சேலை ஒருபக்கமாக ஒதுங்கி, பெண்ணவளின் தாராள அழகினை அவனது மோக விழிகளுக்கு வஞ்சனை இன்றி காட்டிக்கொண்டு இருப்பதில், பொறுமை காற்றில் கரைய தொடங்கின.

அவன் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது, கீழ் உதட்டை கடித்து, அவஸ்தையாக நெளிந்ததிலேயே புரிந்தது, ஓரளவு முதலிரவை பற்றிய விபரம் அவளுக்கு தெரிந்திருக்கிறது என்று.

அவள் பற்களில் சிக்கித் தவித்த உதட்டை பிரித்து, பெருவிரல் கொண்டு அழுத்தமாக வருடி, அதன் மென்மையில் கிளர்ந்து நசுக்கிப் பிடிக்க, இமைகள் படபடத்து கருவிழிகள் அலைமோதி தேகம் சில்லிட்டுப் போனது, ஆண் தொடுகையில்.

அதற்கு மேலும் பொருக்கமாட்டாமல் துடிக்கும் செம்மாதுளை இதழ்களை, ஒரே கவ்வாக கவ்வி தன் உதட்டில் பதுக்கி இருக்க, மொத்த உடலும் அதிர்ந்து வெட்டி வெட்டி துடித்தது, கணவனுடனான முதலிரவு போர்க்களத்தில்.

தேவனை பற்றி அரசல் புரசலாக சிலது தெரியும். நல்லவன் வல்லவன் என்று. ஆனால் மனைவியான பின்புதான் மொத்த குடும்பத்தின் சுயரூபமே அறிந்தாள்.

இதுதான் வாழ்க்கை. இதுதான் கணவன். இதுதான் குடும்பம் என்று ஆனபின்பு அவர்களை பழகி போனது. கணவனை மேலும் பிடித்து போனது.

அவளின் சின்ன சின்ன அசைவு கூட தேவனை பித்து குளிக்க வைக்க, ஒவ்வொரு நாளும் புதுபுது கலைகளை கண்டறிந்து அதனை மனைவியோடு பயின்று, தீராத மோகத்துடன் சுற்றி வந்த காலமெல்லாம், மீண்டு கிடைத்திடாத பொற்காலங்கள் தான்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்டவனுக்கு “மனைவி வேணும்” சின்னத்தம்பி துடித்து அடம் பண்ணியதில் அவஸ்தையாக எழுந்தவன், படம் எடுத்தவன் தலையில் ஆத்திரமாக இரண்டு தட்டு தட்டி,

“இனிமே அவ வேணா.. ஒழுங்கா மூடிட்டு போடா” மனைவி மீதுள்ள கோவத்தில் தன்னவனிடம் கத்தியவன், கட்டில் மீது பரவிக்கிடந்த அவள் சேலையில் படுத்து, அதனுள் மூழ்கிவனுக்கு தூக்கம் தான் வருவேனா என்றது.

அவள் இல்லாத வீடு வெறுமையில் பொலிவிழந்து கிடப்பதை போல, அவள் அருகாமை இல்லாத மன்னவன் கூடு, ஜீவன் பிரிந்த வெறும் கூடாக அலைமோதியது.

“நாயகி வேணாம்.. நாயகி இனி வேணவே வேணாம்..” ஒவ்வொரு நாளும் தினுசு தினுசாக தனக்கு தானே சொல்லிக்கொள்கிறான். “அவள எங்கே..?” அடுத்த நொடியே குரங்காய் தேடி அலையும் மனதை, எதை கொண்டு அடிக்க என ஒன்றும் புரியாமல், இதோ தனது பள்ளிப் பருவ பாலிய நண்பனை காண வந்து விட்டான் தேவன்.

“தேவா.. என்னடே உன் முகரையே பாக்கவே சகிக்காம கெடக்கு. என்ன பிரச்சனை” காட்டுக்குரல் கரகறக்க, தேவன் தோளில் தனது இரும்பு கரம் பதித்தான் வீர்புத்திரன். (யார்னு தெரியிதா மக்களே)

“என்னைய சுத்தி எல்லாமே பிரச்சனதே.. நீ எத கேக்குற” மது உடனான மகிழ்ச்சி வாழ்க்கையில், சால்ட் பெப்பர் லுக்கில் மேலும் கட்டழகு வீரனாக, தேகம் முறுக்கேறி பளபளப்பாக மின்னிய நண்பனை மேலிருந்து கீழ் வரை நோக்கினான் தேவன்.

“நீயி பாக்குற பார்வைல ஆம்பள எனக்கே கூச்சமா இருக்குடே. ஆமா என்ன புதுசா இந்த பக்கம் ப்ரெசிடெண்ட்டு ஐயா..” நக்கலாக காட்டுக்குரல் கத்திட,

“மச்.. எதுக்கு டா என் காத செவிட்டாக்குற தடிப்பயலே” உரிமையாக கடிந்த தேவன், வலப்பக்க செவியை நீவி விட்டுக்கொண்டான்.

“எதே கத்துறேனா.. என் கதைல இந்த குரலுக்கு எத்தனை பேன்ஸ் இருக்காய்ங்க தெரியுமா.. என் மது கூட என் குரல பாத்துதே எங்கிட்டக்க மயங்கினா” பெருமையாக காலரை தூக்கி விட்டவனை, ஏற இறங்க பார்க்க,

“சரி சரி என் கதையவுடு. இப்ப உன் கதைக்கு வரேன். என்னாச்சி ஒனக்கு” இப்போது சீரியஸ் மோடிற்கு வந்திருந்தான் வீர்.

அதற்குள் இருவருக்குமாக தேநீர் கொண்டு வந்த மது, “இந்தாங்கண்ணா டீ எடுத்துக்கோங்க” மங்களகாரமான சிரித்த முகத்துடன், டீயை நீட்டிட, சின்ன தலையசைப்புடன் டீயை கையில் எடுத்த தேவன்,

வீருக்கும் டீயை நீட்டிய மதுவிடம், தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் ஆன பின்னும், அவளை ரகசிய பார்வையால் சீண்டி சிவக்க வைக்கும் வீரை இடைக்கண்ணால் கண்டு, தொண்டையை செருமினான்.

“ம்க்கும்.. நீயும் வாழ மாட்ட, வாழுறவனையும் விடமாட்ட” நண்பனிடம் அலுத்துக்கொண்ட வீர், மது மீண்டும் உள்ளே போகும் வரையில் கூட, முரட்டு பார்வையால் அவளை கலிபரம் செய்ய, தேவன் அருகில் இருக்க சங்கட்டபட்டு ஓடிவிட்டாள் மது.

“என்னடே இம்புட்டு வயசாகியும் பொண்டாட்டிய இப்டி பச்சையா பாக்குற” உதடு சுழித்த தேவனை, இப்போது வீர் ஏற இறங்க பார்த்தான்.

“என் பொண்டாட்டிய ந்நா பச்சையா பாப்பேன் இல்ல செவப்பா பாப்பேன். ஒனக்கு எங்கடே வீங்குது. ஏன் உன் பொண்டாட்டிய நீ பாக்க மாட்டியா..” என்றான் கடுப்பாக.

வீர் எதார்த்தமாக தான் எப்போதும் போல நண்பனை சீண்டினான். ஆனால் தேவனின் முகம், பீஸ் போன பல்பாக தொங்கி போனதை கண்டே ஏதோ சரி இல்லை என்று தோன்றியது.

“மச்.. அவளுக்கு ந்நா இதுநாள் வரைக்கும் என்னத்தடே செய்யல. கடைசில என் மானம் மரியாதை மொத்தத்தையும் ஒரேடியா குலைச்சிட்டா..” என்ற தேவன், நாயகி செய்த அனைத்தையும் சொல்லி முடித்து, நண்பனை பார்க்க,

கருமமே கண்ணாக தன் மனைவி கொடுத்து சென்ற தேநீரை, “உர்ர்ர்..” என்ற சத்தம் எழுப்பி ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த வீரை கண்டு கொலைவெறியானான் தேவன்.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!