அத்தியாயம் – 12
மாலை பொழுது, தேவன் சொன்னது போல் மாப்பிளை வீட்டினர் வந்திருக்க, வந்தோறுக்கு தண்ணீர் கொடுத்து அவர்களை உபசரித்த நாயகி ஓரமாக ஒதுங்கி நின்றுகொள்ள, ஆண்களின் பேச்சி தொடங்கியது.
“சரி முத்துபாண்டி, நீயி கேட்டது போல இரநூறு சவரன் நகை, சீரு சட்டு, அம்பது லட்சத்துல ஒரு காரும், ரொக்க பணமா முப்பது லட்சத்தையும் எங்க பொண்ணுக்கு நாங்க செஞ்சிடுறோம்” தண்டாயிதபாணி சொன்னதை கேட்ட நாயகி அதிர்ச்சியாக விழிவிரித்து நிற்க, மேலும் பேச்சி ஓங்கியது.
“சரி சரிபா.. சொன்னதுக்கு மேலையே உன் பொண்ணுக்கு நீயி செய்வேன்னு எனக்கு நல்லாவே தெரியும்” சிரித்துக்கொண்டே மேலும் பணத்திற்கு அடிப்போட்டவராக,
“பொண்ணு நல்லா சமைக்கும் தானே தண்டாயிதோ, ஏன்னா எங்க வீட்ல பொம்பளைங்க யாரும் இல்ல, நானும் என் நாலு ஆம்பள பசங்களும்தே இருக்குறது. இம்புட்டு நாளா வேலைக்காரி இருந்ததால ஏதோ சமாளிச்சோம், இனிமே உன் பொண்ணுதே வீட்டு வேலையெல்லாம் பக்குவமா செஞ்சி, புருசன் மனம் கோணாம கவனிச்சி, குடும்பத்துக்கு மூத்த மருமகளா எங்கள எல்லாரையும் பொறுப்பா இருந்து பாத்துக்கிடணும்”
மாப்பிளையின் அப்பா பேசியதை கேட்ட நாயகி உள்ளுக்குள் குமைந்து போனாள்.
“ஏற்கனவே தான் ஒருத்தி இந்த வீட்டில் வாக்கப்பட்டு, வேலைக்காரியாக நாளை கடத்துவது போதாதா! தான் வளர்ந்த பிள்ளைக்கும் அதே நிலையில் ஒரு கொடுமையான வாழ்க்கையா?” அப்படி நினைக்கும் போதே மிகுந்த வேதனை ஏற்பட்டது.
“அதெல்லாம் நெனச்சி கவலையே படவேணா முத்துபாண்டி, என் மருமக நாயகி இருக்காளே, கண்ணாலம் கட்டி வந்து இம்புட்டு வருசம் ஆச்சுது, இன்னைய நாள் வரைக்கும் எங்களையும் எங்க குடும்பத்தையும் ஒரு குறையும் இல்லாம கவனிச்சிட்டு இருக்கா. அவ வளர்ப்புல வளந்தவதே என் மகளும் நிச்சயமா ஒங்க குடும்பத்தை நல்லபடியா கவனிச்சிப்பா. அப்பா சொல்றது சரிதானே தேவா”
தண்டாயிதபாணி பெருமையாக சொல்லி, மூத்தவனிடம் அபிப்ராயம் கேட்டிட,
“நீங்க சொன்னா சரிதேப்பா” அவனும் தந்தைக்கு தலைவணங்க, கணவனை கண்டு விரக்தி புன்னகை பூத்தாள் நாயகி.
ஆனந்தபாலனோ அங்கு கடமைக்கே இருந்தான். தண்டம் அவனிடம் அபிப்ராயம் கேட்டால், அவன் சொல்லும் ஏடாகூடமான பதிலில் இந்த சம்பந்தமே முறிந்து போக வாய்ப்புல்லதை, நன்றாக அறிவாரே தண்டாயிதம்.
“சரி தண்டாயிதோ, நீயே இம்புட்டு தூரம் நம்பிக்கையா பேசும் போது, வேற என்ன வேணும். பொண்ண கூப்புடு, இன்னைக்கே நல்லநாள் நல்ல நேரந்தே கையோட தட்ட மாத்திக்கிடுவோம்” என்றதும் திடுகிட்ட நாயகி, ஒரு பேச்சிக்கு கூட அமுதாவிடம் மாப்பிளையை பிடித்திருக்கிறதா என கேட்கவில்லையே என்ற கவலையில் மரமாக நின்றிருக்க,
“ஏம்மா சொன்னது காதுல விழல, வெரசா போயி அமுதாவ கூட்டியா” தண்டாயிதபாணி விரட்டியடிக்க, மனதில் சூழ்ந்த குழப்பதுடன் அமுதாவின் அறைக்கு வந்தாள்.
மாப்பிளையை பார்க்க ஒன்றும் சரியாக படவில்லை. சரி தோற்றத்தை விடு குணம் எப்படி என பார்வையால் ஆராய்ந்தால், பாக்கு போடும் கரைப்படிந்த பற்கள். மது குடித்து குடித்து முகம் வீங்கி சிவந்து போன கண்கள். 35 வயதுக்கு மேலாகியும் அப்பா சொல்லுக்கு மண்டையாட்டிக்கொண்டு, வயிறும் தொந்தியுமாய் அமுதாக்கு சித்தப்பா கணக்காக இருந்தவனை பார்த்தால் தான் இப்படி என்றால், அவன் தம்பிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாய் இருப்பதை கண்டு தலையே சுற்றியது.
“கடவுளே என்ன இது சோதன. அமுதாக்கு வேற நல்ல மாப்பிளையே கிடைக்கலையா என்ன! அவிங்க வீட்டு வேலைய பாக்கவா, பாலும் தேனுமா ஊட்டி நெய்யுருண்டையாட்டும் என் தங்கத்த வளத்தி வச்சிருக்கேன். அதுவும் இல்லாம ஒண்ணுக்கு நாலு பேத்துக்கு வாய்க்கு ருசியா ஆக்கி போட்டு கவனிக்கணுமாமே!” வருத்தமாக கலங்கிய நாயகி, சோகமே உருவாக அமர்ந்திருந்த அமுதாவை அழைத்துக்கொண்டு கீழே வந்தாள்.
அவளை கண்டதும் கரைப்பற்களை காட்டி அப்பட்டமாக சைட் அடித்த மாப்பிளையை கண்டு எரிச்சலாக தலை குனிந்த அமுதாவையும் அவனையும் அருகருகே நிறுத்தி, இரு வீட்டாரும் தட்டை மாற்றிக்கொள்ள, இரு பெண்களின் உள்ளமும் பதட்டமாக அடித்துக்கொண்டது.
எண்ணி இருபத்தி ஐந்து நாட்களில் வரவிருக்கும், சுபயோக தினத்தன்றே திருமணத்தையும் நடத்திக்கொள்ளலாம் என முடிவாக பேசி முடித்து, அனைவரும் இடத்தை விட்டு கலைந்திருக்க,
“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல அண்ணி..” கண்கள் கலங்கி வெம்பி அழுத அமுதாவை கண்டு, வளர்த்த உள்ளம் பிசைந்தது.
“அழாத தங்கோ” அவள் கண்ணீரை துடைத்து மென்மையாக அணைத்துக்கொண்ட நாயகி, “ந்நா ஒருத்தி தெனம் தெனம் அனுபவிக்கிற துன்பமெல்லாம் போதும் அமுதா. ஒனக்கு அப்டி ஒருநிலைய ஏற்படுத்த நான் விட மாட்டேன். கவலை படாதே எப்பாடுபட்டாவது இந்த கல்யாணத்தை நிறுத்தி, ஒன்னைய அன்பா அக்கறையா பாத்துக்குற நல்ல மாப்பிளையாக தேடி கண்டுபிடிச்சி அண்ணி ஒனக்கு கட்டி வைக்கிறேன்”
தீர்க்கமாக அவளுக்கு தைரியம் சொன்ன நாயகி, இந்த விடயத்தை பற்றி இன்றே தன் கணவனிடம் பேசியாக வேண்டும் என்ற முடிவோடு அறைக்கு வந்தாள்.
சட்டையை கழட்டி ஆங்கரில் மாட்டிய தேவனின் கட்டு மேனியை, வெள்ளை கட் பனியன் மார்பு புடைத்த தேகத்தை வடிவாக பிடித்துக்காட்ட, சன்னல் புறம் திரும்பி நின்று போன் பேச தொடங்கியவன் முதுகினை, அறைக்கு வந்தவள் எத்தனை நேரம் வெறித்து நின்றாளோ!
அவன் பேசி முடிக்கும் வரை, கையை பிசைந்தப்படி அமைதியாக நின்றிருந்த தேன்கொடியை, சட்டென பிடித்து இழுத்திருக்க, திடுகிட்ட நாயகியின் முகம் அவன் பட்டை மார்பில் புதைந்து, வேகமாக மூச்செடுத்து, மெல்ல முகம் மலர்த்தி கணவனை பார்த்தவளின் கண்கள் கலங்கி இருந்தது.
“என்னாச்சி டி, ஆ.. ஊ.. ன்னா மூஞ்சில சோக கீதம் வாசிச்சிட்டு இருக்கவ” வாய் பேச்சில் கவனமாக இருந்தாலும், கரம் என்னவோ அவள் சேலையை உருவுவதில் படு பிசியாக இருந்தது.
“க்.கொஞ்சம் பேசனுங்க” லவுக்கை அகற்றும் முன்னே அவசரமாக கருப்பு திராட்சையினை கண்டிட்டு அதன் சாற்றை உறுஞ்சிய கணவன் வேகத்தில் வார்த்தை திணறியது.
“எம்புட்டு வேணுமோ கொஞ்சி பேசுடி.. ந்நாபாட்டுக்கு என் வேலைய பாக்குறேன்” லவுக்கையில் வட்டமாக எச்சில் நனைந்து, பெண் அங்கத்தை மேலும் அழகூட்டி கிறங்க வைத்ததில், பித்தானான் தேவன்.
“க்.கொஞ்சவா.. அது க்.கொஞ்ச நேரங்க” அவன் சொன்னதில் விழித்து, மீண்டும் தெளிவுப்படுத்த முயற்சிக்க,
“கொஞ்ச நேரம் என்ன டி, எம்புட்டு நேரமானாலும் பரவால்ல கொஞ்சிக்க” கள்ளன், மனைவி சொல்லும் அர்த்தம் புரிந்துகொண்டே, வேண்டுமென்றே அவளை சீண்டி, குழப்பி விட்டதில், அல்ப ஆனந்தம் கொண்டு மனைவியின் மந்தாரை தேகத்தில் நா கொண்டு தேன் எடுத்தான்.
அவன் சீண்டல் புரியாது, கணவனின் அதிரடி தீண்டலில் உடல் கூசி, நாணி சிவந்து கிடந்த நாயகிக்கு, அவள் பேச வந்த விடயமே மறந்து போனது.
கூடல் தொடங்கி, அவள் மார்பை நிறைத்து அழகாக மின்னிய தாலி சரடில் முத்தமிட்டு, விதவிதமான கோணங்களில் அவளை புரட்டி எடுத்தவனை, இத்தனை வருடமாகியும் முத்தமிட்டு சாந்தி படுத்த தெரியாத மங்கையோ, சுருண்டு அவன் மார்பில் விழ, அள்ளிக்கொடியாக தன் தேகத்தில் சுருட்டிக்கொண்டான்.
திருமண நாளும் கிட்டத்தில் நெருங்க நெருங்க, பயத்தில் ஒவ்வொரு நாளும் அமுதாவின் திருமண விடயத்தை பற்றி தேவனிடம் பேச முயற்சித்து தோற்றவளாக, கடைசியில் கணவனிடம் வேலைக்கு ஆகாது என்று, ஆனந்தபாலனிடம் தவிப்பாக வந்து நின்றாள் வேதநாயகி.
“அத்தான், ஒரே ஒரு உதவி அத்தான். கொஞ்சம் பொறுமையா சொல்றத கேக்குறீயலா” கெஞ்சலாக கேட்ட அண்ணன் மனைவியை ‘என்ன’ என்பது போல் பார்த்தான்.
“அ.அது வந்து, அமுதாக்கு இந்த கண்ணாலம் வேணாத்தான். அவ பூ மாதிரி. அதிக வேலையெல்லாம் அவளை ந்நா செய்ய விட்டதே இல்ல.
பாவம் சின்னதா சூடு கூட அவ கைக்கு தாங்காதுத்தான். அப்டி இருக்க, இது பெரிய குடும்பம், அதுவும் நாலு பேத்துமே பெரிய பெரிய ஆம்பளைங்க. பாத்தா நல்லா சாப்பிடற மாறி தெரியிது. அவையலுக்கு ஆக்கி போட்டே இவ வாழ்க்கை முடிஞ்சிடும்.
அவளுக்கு பிடிச்ச மாதிரி எடத்துல, அமுதாக்கு ஏத்தமாறி அன்பா பாத்துக்குற நல்ல மாப்பிளையா பாத்து கட்டி குடுக்கணும்னு, என் பல நாள் கனவுத்தான். அமுதாக்கும் இதா ஆசை. இதைப்பத்தி அவையகிட்ட எம்புட்டோ பேச முயற்சி பண்ணேன், ஆனா அவைய ந்நா சொல்ல வரறத காது குடுத்தே கேக்கல. நீயலாவது கேளுங்கத்தான்”
கன்னம் தாண்டும் கண்ணீரை துடைத்தபடியே, கெஞ்சி அழுதவளை அப்பட்டமாக கைவிட்டான் ஆனந்தபாலன்.
“இது அப்பாவும், பெரியவனும் பாத்து முடிவு பண்ண கண்ணாலம். இத்தனைக்கும் மாப்பிள வீட்ல இன்னும் எட்டு தலைமுறைக்கு ஒக்காந்து சாப்பிடற அளவுக்கு சொத்துபத்து நெறைஞ்சி கெடக்கு. அமுதா ஒரு கொறையும் இல்லாம சந்தோசமா வாழலாம்.
பெத்தவருக்கே அது நல்ல சம்மந்தம்னு தோணினதால தானே இம்புட்டு தூரம் கல்யாணம் பேசி முடிச்சிருக்காவ. இதுல ஒனக்கு மட்டும் என்ன எங்கள தாண்டிய பெரிய இந்த அக்கறை வேண்டி கெடக்கு.
உன் எடம் எதுவோ அத்தோட நிறுத்திக்கோ நாயகி. இன்னொரு தரம் இப்டி லூசுத்தனமா பேசிட்டு திரியாத. போ.. போயி ஜோலியப் பாரு” கடுப்பாக திட்டி விட்டு ஆனந்தபாலன் இடத்தை காலி செய்திருந்தான்.
கையறு நிலையில், அடுத்து என்ன செய்வது என புரியாமல் நாளை கடத்திய நாயகி, திருமணத்திற்கு மேலும் இரண்டு நாட்களே இருக்க, அதிகாலை நலங்கிற்கு அனைத்தும் தயார் செய்து முடித்து, அமுதாவை பார்க்க அவளின் அறைக்கு வந்தவளின் மூச்சையே நிறுத்தும் விதமாக, பெரிய காரியத்தை செய்திருந்தாள் அமுதா.
“ஐயோ.. அமுதாஆஆ..” நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறி அழுத சத்தம், அந்நேரம் வீட்டில் யாரும் இல்லாததில், யார் செவியையும் அடைந்திக்க வாய்ப்பின்றி போனது.
தொடரும்.