அத்தியாயம் – 11
“மது போதும் பட்டாசு வெடிச்சது, மீதியை வீட்டுக்கு போன பொறவு வெடி. இப்ப அமைதியா வா” மதுரனின் சேட்டையை தாங்க முடியாமல் அவனை அழைக்க,
“இன்னும் ஒன்னே ஒன்னு க்கா..” கெஞ்சி கேட்டு அலம்பு செய்தவனை, முறைத்து நின்ற கோதை முன்பு, நெடுநெடுவென பெரிய உருவத்தில் வந்து நின்ற ஆனந்தபாலனை கண்டு திகைத்து விழித்தாள்.
“இங்கன என்ன டி பண்ணிட்டு இருக்கவ” ஏதோ தாலி கட்டியவன் போல அதப்பாக கேட்டவனை கண்டு மிரண்டு போன கோதை, வேகமாக பொடியனிடம் செல்லப் போக, இறுக்கமாக அவள் கரத்தைப் பற்றி தன் பக்கம் நிறுத்தினான் ஆனந்தன்.
“பதில் சொல்லாம எங்க டி ஓடுற” மென் கரத்தை வளைத்து திருப்பியவன், அவள் முதுகை தன் கட்டுமேனியில் மோதி நிறுத்த, அதிர்ந்து போனாள் கோதை.
“இது நாலு பேத்து வந்து போற ரோடு. இங்கன போயி எங்கிட்ட நீய இப்டி நடந்துக்குறது முறையா! ஒங்கள கெஞ்சி கேட்டுக்குறேன், யாரவது பாக்குறதுக்குள்ள தயவுசெஞ்சி என்னைய விடுங்க” துடிக்கும் இமைகளில் நீர் கோர்த்து, கன்னம் தண்டவா வேண்டாமா என்ற நிலையில், அச்சத்தில் குரல் கம்மி சுற்றும் முற்றும் பதட்டமாக பார்க்கும் அவளை, கண்கள் சுருக்கி ஸ்வாரிசியமாக பார்த்தான் அவன்.
“தனியா கைய புடிச்சாலுந்தே பெரிய இவ மாறி சாபம் குடுக்குறியே! சரி அத்தவுடு, உன் சாபமெல்லாம் இந்த கட்டுக்கடங்கா காளைய அப்டி என்னத்த செஞ்சிட போவுது” மிதப்பாக நகைத்து,
“சொல்லு டி, இங்கன என்ன பண்ணிட்டு இருக்கவ” என்றவனின் பார்வை, ஆர்வமாக பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த மதுரனை வருடி மீண்டது.
“எ.என் தம்பிக்கு திடீர்னு ஒடம்புக்கு முடியாம போச்சுது. அதே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய்ட்டு வரேன்” கலக்கமாக உரைத்த கோதை, எப்படியோ அவனிடமிருந்து அவசரமாக பிரிந்து நிற்கவும், “அக்கா.. வெடி காலி” என்றபடி மதுரன் அவர்கள் புறம் திரும்பவும் சரியாக இருந்தது.
“பொடியன் பாக்க நல்லா தானே இருக்கான். இவனுக்கா ஒடம்புக்கு முடியல” யோசனையாக தாடை நீவியவனிடம், விளக்கம் சொல்ல விருப்பம் இல்லாது அவள் நிற்க,
“அக்கா இது யாரு” என கேட்டுக்கொண்டே ஆனந்தனை பார்வையால் அளந்தப்படி வந்த மதுரன், கோதையின் கரம் பற்றி அவள் அரண் போல் நின்றவனை புருவம் ஏற்றி நக்கலாக பார்த்தான் நெடியவன்.
“ஒன்னையத்தாக்கா கேட்டேன், யாரு இவைய” அவள் கை பிடித்து இழுக்க, “ஹா.. அ.. அது.. இவைய பஞ்சாயத்து தலைவரு மயன்” தயக்கமாக சொன்னதும், ஆனந்தனை பார்த்த சிறுவனின் கண்களில் கிஞ்சித்தும் பயம் இல்லை.
“ஓ.. சரி வா வீட்டு போலாம்” பெரிய மனிதன் அக்காளை அழைத்து செல்ல முனைய, பட்டென அவன் தலையில் தட்டிய ஆனந்தபாலன்,
“டேய் பொடிசு நில்லுடா..” என்ற அதட்டலில் நடை தடைப்பட்டு சீற்றமாக திரும்பியவனை, “அதே பேசிட்டு இருக்கேனுல்ல, அப்டி என்ன அவசரமாக நீப்பாட்டுக்கு அவள இழுத்துட்டு போற. போ.. போயி அப்டிக்கா நில்லு உன் அக்காகாரிகிட்ட முக்கியமான விசயம் பேசிட்டு அனுப்புறேன்”
ஒற்றை கரத்தை இடுப்பில் ஊன்றி, மறு கரத்தால் காலரை இழுத்து விட்ட ஆனந்து, வலது காலை ஆட்டியபடி அதிகாரம் செய்ய, கோதை போல் மிரண்டு பதுங்கும் சாது, மதுரன் இல்லையே!
“என்ன விசயமா இருந்தாலும், என்னைய கூட வச்சே பேசுங்க. பழக்கம் இல்லாத ஆம்பளைங்க கூட தனியா அக்காங்கள பேச வைக்க கூடாதுனு என் அம்மா சொல்லிருக்கு” முறைப்பாக நேர்எதிர் நின்று தைரியமாக குரல் கொடுத்த குட்டிப்பயலின் தோரணையில் அத்தனை திமிர் வாட்டம் நிறைந்திருக்க, கோபத்தில் கை முஷ்டி இறுக்கியவனை கண்டு எப்போதும் போல் அஞ்சியது கோதை தான்.
“என்னா ஒரு எகத்தாலம் டா ஒனக்கு பொடிப் பயலே.. மொலைச்சி மூணு எல விடல என்னையவே மொறச்சி பாக்குறியா.. இதுல வ்.வாய்.. வாய் வேற பேசுற திமிரா” சிறியவன் தலையில் மேலும் நாலு தட்டு தட்ட..
“அச்சோ அடிக்காதீய.. சின்ன பையன் அவனுக்கு ஒன்னும் தெரியாது” பதறி போய் மதுரனை தன்னோடு இழுத்த கோதை, தன் பின்னே அவசரமாக மறைத்து கொள்ளவும்,
“யாரு டி இவனா சின்ன பையன். ஆளும் மூஞ்சியும் பாரு இஸ்திரி பொட்டிய கவித்தி வச்ச மாறி உர்ர்ருனு..” வேட்டியை ஏத்திக் கட்டியபடி கத்திய ஆனந்து, அக்காளின் பின்னிருந்து தலையை எட்டிப்பார்த்து தன்னை முறைத்த மதுரனின் தலையில் மீண்டும் எக்கி அடிக்க,
“ஐயோ வேணாங்க.. அடிக்காதீய” மீண்டும் பதறி தன் பின்னோடு தம்பியை மறைத்துக்கொண்டவளை முறைத்து. “என்னாடி உன் தொம்பிக்கு இள ரத்தம் சீறுதோ..!” கோபத்தில் பற்களை கடிக்க, பயத்தில் கரங்கள் நடுங்க பின்னிருந்து மதுரனின் கரங்களை பிடித்துக்கொண்டாள் கோதை.
“பாத்து அடக்கி வையி டி.. இன்னொரு தரம் எம்முன்னாடி இவைன் இப்டி திமிரா மொறச்சிட்டு நின்னா, கோழி கழுத்த திருவி போடற மாறி, இந்த பொடியன் கழுத்த ஒரே திருவா திருவி வீசுப்புடுவேன் பாத்துக்கோ..” அச்சிறுவனின் கண்களில் கிஞ்சித்தும் பயம் இல்லாமல் ஒருவித திமிர்த் தன்மை நிறைந்திருப்பதை உணர்ந்தவனுக்கு ஏனோ, மதுரனை பார்க்கப் பார்க்க அத்தனை வெறுப்பாக வந்தது.
‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பார்களே! அப்படி ஒரு இளந்திமிர் மதுரனின் சுடர் விழிகளில் நிரம்பி வழிந்ததை உணர்ந்து, ஆத்திரம் மூண்டது முரடனுக்கு.
பின்னாலில் இந்த பொடியனால் தான் இந்த நெடியவன் அல்லோல் பட போகிறான் என்பதை அறியாத ஆனந்தபாலன், தன்னிடமிருந்து தன் உடன்பிறப்பை பரிதவிப்புடன் காத்து நின்ற கோதையை, அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு தனது புல்லட்டை கிளப்பிக்கொண்டு புழுதி பறக்க அங்கிருந்து புறப்பட்டு இருந்தான்.
கண்ணை மறைத்த மணல் புழுதியை கரத்தால் விசிறிவிட்ட கோதைக்கு, ஆனந்தனின் செயலை எண்ணி விக்கிக்கொண்டு வந்தது.
“அக்கா.. எதுக்கு அந்தாளு உங்கிட்ட வம்பு பண்ணிட்டு போறான்” இளம்குருத்து மீண்டும் எகிறிக்கொண்டு வந்ததும், மிரண்டு போய் சுற்றி முற்றி பார்க்க, நல்லவேளையாக கிராதகன் அங்கில்லை.
“டேய் மது.. என்ன டா இது பழக்கம், எதுக்கெடுத்தாலும் பெரியவன் போல நெஞ்ச நிமித்திட்டு வரறது. அவைய எல்லாம் பெரிய ஆளுங்க. கொஞ்சம் அப்டி இப்டிதே இருப்பாக.
அவையல போயி சரிக்கு சமமா எதிர்த்து நிக்கலாமா..! அதுவும் இல்லாம நாளபின்ன அவைய வீட்டுக்குதே வேலைக்கு போயாகனும். இனிமே இப்டி முரண்டிட்டு நிக்காம அடக்கமா இரு மது” கண்டிப்பான குரலில் மதுரனை கண்டித்த அக்காளை நிமிர்ந்து பார்த்தான் பொடிசு.
“எனக்கு இந்த ஆள பாத்தாலே சுத்தமா புடிக்கல க்கா. இனிமே நீயி அந்தாள் வீட்டுக்கு வேலைக்கு போவாத” பெரிய மனுசன் தொனியில் சொன்ன தம்பியை சட்டென குனிந்து பார்த்தாள் அவள்.
“திடீர்னு இப்டி சொன்னா, நாம எல்லாரும் சோத்துக்கு என்ன டா பண்றது. நீ சின்ன பையன் ஒனக்கு ஒன்னும் தெரியாது மது. அவைய எல்லாரும் பணவசதி அந்தஸ்து படைச்ச பெரிய ஆளுங்க, இல்லாத நாமதே அவையலுக்கு அடிபணிஞ்சி போவணுமே தவிர, பதிலுக்கு நாமலும் அவைய மரியாதை தரணும்னு எதிர்பாக்க கூடாது” விரக்தியாக சொன்ன கோதை, ஒருவழியாக வீடு வந்து சேர்ந்திருந்தாள்.
ஆனால் மதுரனின் மனதில், பணம் படைத்தவர்களை பற்றி கோதை சொன்ன ஒவ்வொரு சொற்களும், பசுமரத்து ஆணி போல ஆழமாpக பதிந்து விட்டதை, அவளே அறிய தவறிவிட்டது தான் பெரிய பிழையாக மாறத் துவங்கி இருந்தது. இதனால் துன்பப்பட காத்திருப்பது எவரோ!?
(ஆனந்தபாலன் கண்ணுல விரலை விட்டு குடைய போறவன் இவன்தான். இந்த பொடியனை நல்லா நோட் பண்ணி வச்சிக்கோங்க)
** ** **
எப்போதும் இல்லாமல் இன்று மிகவும் பரபரப்பாக காணப்பட்ட கணவனை கவனித்தபடியே, காலை உணவை சமைத்துக்கொண்டிருந்த நாயகியின் மனதில் ஒரே குழப்ப அலைதான்.
“என்னாச்சி இந்த மனுசனுக்கு, திடீர்னு தனியா போன எடுத்துட்டு வெளிய போராக, உள்ள வராக. ஏதாவது சொன்னா தானே தெரியும்” மனதில் எண்ணியபடி, தேவனுக்கு பொடி இட்லியை பரிமாற, அதனை பிட்டு வாயில் வைக்கும் போதே அழைப்பு மணி வந்தது.
உடனே ஏற்று காதில் வைத்தவனாக, “எத்தனை மணிக்கு?
எத்தனை பேர் வராக?
சரி சரி.. அவையலுக்கு தேவையானது என்னவோ, தயார் பண்ணி வைக்க சொல்றேன்”
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அழைப்பை துண்டித்து, இட்லியை உண்ணத் துவங்க, உரிமையானவனிடம் சட்டமாக வாய் திறந்து என்னவென கேட்க முடியாத அந்த அப்பாவிப் பெண்ணோ, எப்போதும் போல் அமைதியா தான் நின்றாள்.
உண்டு முடித்து ஏப்பம் விட்ட தேவன், நாயகி நீட்டிய துண்டை தட்டி விட்டவனாய், சட்டென அவள் இடையில் சொருகி இருந்த முந்தானையை கை விட்டு இழுத்து, வல கரத்தை துடைத்துக்கொண்டவன், உதட்டில் இருந்த ஈரத்தையும் இதமாக ஒற்றி எடுக்க, கணவனின் செயலில் நாணமுற்றாள் நாயகி.
“கண்ணாலம் முடிஞ்சி இம்புட்டு வருசம் ஆச்சி, இன்னுமும் இந்த வெக்கம் மட்டும் ஒன்னைய விட்டு போவல டி. நம்ம மொத ராத்திரி அன்னைக்கு எப்டி ஒடம்பு செவந்து கூச்சப்பட்டு எம்முன்னாடி நின்னியோ, அதேபோலதே இப்பவும் இருக்க” தன்னவளை நெருங்கி தேகம் நசுங்க நின்ற தேவன், மீண்டும் இடையினுள் விரல் நுழைத்து முந்தியை சொருக, “ஹக்..” நெஞ்சிக்கூடு தூக்கி போட்டு துள்ளிய மனைவியின் கூச்சம் தானே, இன்றளவும் அவள்மீது பித்துக்குளிக்க வைக்கிறது.
“என்னங்க இது இங்க நின்னு அலம்பு பண்றீய. மாமா அத்தான் யாராவது பாத்துட போராக” இரவெல்லாம் தொடை முட்டி சேட்டை செய்த நீள்கொம்பு, மீண்டும் அவள் சேலை இடுக்கில் புகுந்து இம்சை செய்திட, கூடத்தில் நின்று வம்பு செய்த கணவனை தடுக்க முடியாது தவித்து போனாள்.
“அதே யாரும் இல்லையே டி. தொட்டா கரஞ்சிடாது, பேசாம காட்டு” மோனக்குரலில் கட்டளை இட்டு, அவள் மென்மையை வன்மையாக பிழிய, திக்.. திக்.. இதயத் துடிப்புடன் அவன் கரத்தில் துவண்டு மடிந்தாள் நாயகி.
“பொழுக்கா, அமுதாக்கு சீலை கட்டிவுட்டு தயாராக்கு டி, அப்டியே சுடசுட பஜ்ஜி சுட்டு டீ போட்டு வையி. அவள பொண்ணு பாக்க மாப்பிள வீட்டுல இருந்து வராக” எச்சில் உதடு மின்ன தூணை பிடித்தபடி மூச்சிறைக்க நின்ற மனைவியிடம், தகவல் சொன்னவன் தன் சட்டையை நீவி சரி செய்துகொள்ள,
“என்னங்க சொல்றீய. அமுதாவ பொண்ணு பாக்க வராகளா?.. அவ சின்ன பொண்ணுங்க அதுக்குள்ள என்ன அவசரம், அவளுக்கு கண்ணாலம் பண்ணி குடுக்க” சொந்த மகள் போல் வளர்ந்த பிள்ளையை அதற்குள் வேறொரு வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமா! என்ற கலகத்தில் சட்டென கணவனிடம் கேட்டுவிட்டு அவனது கோப முறைப்பையும் பரிசாக பெற்றுக்கொண்டாள்.
“யாரு அவ சின்ன பொண்ணா.. அமுதா விசயத்துல அதிகபடியான உரிமைய எடுத்துக்க நீ யாரு டி. அவளை பெத்தவரு எங்க அப்பா இருக்காரு, கூட பொறந்தவைங்க நாங்க இருக்கோம், எங்களுக்கு தெரியாதா அவளுக்கு எப்போ கட்டி குடுக்கணும்னு.
நேத்து வந்தவ அவளை சோறூட்டி வளர்த்துட்டா நீ பெத்தவளா மாறிடுவியா டி.. அனாவசியமா வாய தொறந்து வாங்கி கட்டிக்காத. இது எங்க அப்பா முடிவு. ஒழுங்கா சொன்ன வேலைய மட்டும் செய் டி..”
அதுவரை இருந்த இலகு தன்மை மாறி, அவளை வார்த்தையால் வதைத்து விட்டு சென்ற கணவனை, புறங்கையால் கண்ணீரை துடைத்தபடி வேதனையாக கண்டாள் நாயகி.
மாலை வேலை, தேவன் சொன்னது போலவே அமுதாவிற்கு பட்டு புடவை கட்டிவிட்டு, மிதமான அலங்காரம் செய்து முடித்த நாயகி, எழிலோவியமாக தலை குனிந்து நின்ற அழகு பெண்ணை, “என் தங்கமே” திருஷ்டி சுற்றி நெட்டி முறித்தாள் புன்னகையாக.
“எதுக்கு அண்ணி இவ்ளோ அவசரமா எனக்கு கல்யாண ஏற்பாடு பண்றாக. இன்னும் கொஞ்ச நாள் உங்களோட ஜாலியா இருந்துட்டு போறேனே! ப்ளீஸ் அண்ணாகிட்ட சொல்லுங்க அண்ணி”
பாவமாக கெஞ்சிய அமுதாவை என்ன சொல்லி சமாளிப்பது.
“ஏன் டி நான் சொல்லி ஏதாவது மாறும்னு நெனைக்கிறியா.. அவங்க மூணு பேத்துமா முடிவ எடுத்துட்டு தானே எனக்கும் இந்த விசயத்தை தகவலா சொன்னாக” வருத்தமூச்சி வெளியிட்ட நாயகி,
“சரி சரி எதையும் நெனச்சி கண்ண கசக்கிட்டு இருக்காம, சமத்து பொண்ணா ஒக்காந்திரு. ந்நா கீழ போயி எல்லாத்தையும் தயார் பண்ணி வைக்கிறேன். மாப்பிள வீட்ல இருந்து வர நேரமாச்சி” என்றவள் அவள் தலை வருடிவிட்டு சென்றாள்.
தொடரும்.