Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 24

வதைக்கும் அகிம்சையே! – 24

by Indhu

அத்தியாயம் – 24

பள்ளிக்கூடம் விடும் வேளையில், பெரிய கேட்டை பிடித்துக்கொண்டு ஆவலாக காத்திருந்த கோதை, மதுரன் பையை மாட்டிக்கொண்டு ஓடி வருவதை பார்த்து ஆசையோடு அவனிடம் ஓடிட, அக்காளை பார்த்த மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை அவனுக்கு.

“அக்காஆஆ..” குதூகலமாக ஓடி வந்தவனை மண்டியிட்டு அமர்ந்து கண்ணீருடன் அவன் நெற்றியில் முத்தம் வைத்த கோதையை, ஆசையோடு தழுவின மதுரனின் பிஞ்சி கைகள்.

“எம்புட்டு நாளாச்சு டா ஒன்னைய பாத்து.. தெனமும் ஒன்னைய பாக்க பள்ளிக்கூடத்துக்கு வந்துடுவேன், ஆனா காணலையே மதுமா.. வீட்ல ஏதாவது பிரச்சனையா” ஏற்கனவே மதுரன் உடலும் சரிஇல்லை, இப்போது செல்விக்கு சரியான வேலையும் இல்லை. வீட்டின் நிலவரம் என்னவோ என்ற கவலையே ஒவ்வொரு நாளும் பெண்ணை வதைக்கிறது.

“அம்மாக்கு வேல இல்ல க்கா.. சாப்பாட்டுக்கே கஸ்டம். எனக்கு திடீர்னு குஞ்சாமணி வலிச்சி ஆஸ்பத்திரிக்கு போனா நெறைய ஊசி போட்டு மாத்திரை குடுத்துவுட்டாங்க.

அம்மா காசு இல்ல, வேலை இல்ல, உங்க அக்கா இப்டி ஏமாத்திட்டு போய்ட்டாளேனு ஒரே அழுகை. ஒன்னைய பாத்தா பேச கூடாதுனு சொல்லிருக்கு க்கா..”

பாவமாக உதட்டை பிதுக்கிய குட்டி தம்பியை கரைபுரண்ட கண்ணீருடன் வேதனையாக பார்த்தாள்.

“மன்னிச்சுடு மதுமா.. அக்கா எந்த தப்பும் பண்ணல.. எல்லாமே என் நேரம் இம்புட்டு அசிங்கப்பட்டு உங்க எல்லாரையும் பிரிஞ்சி தவிக்கணும்னு. என்னால அம்மாவும் வேலைக்கும் வரமுடியாம போச்சி” வருத்தமாக கண்ணை துடைத்த கோதை,

“மதுமா அக்காவ பாத்ததை பத்தி அம்மாகிட்டக்க எதுவும் சொல்லிக்காத டா, அக்கா தெனமும் ஒன்னைய வந்து பாக்குறேன். சாப்பாடு கொண்டாந்து தர்றேன் நீயும் சாப்ட்டு அம்மாக்கு தெரியாம சீதாக்கும் கொண்டு போயி குடு என்ன.

இப்ப வா சுட சுட மீன் குழம்பு வச்சி கொண்டாந்தேன் நானே ஊட்டி விடுறேன்” என்ற கோதைக்கு மதுரன் என்றால் அப்படி ஒரு இஸ்டம்.

மதுரன் பிறந்ததில் இருந்து செல்வியை விட, அதிக அன்பும் அறைவனைப்பும் கொடுத்து வளர்த்தது முழுக்க இவள் தானே!

மதுரனும், அம்மா என்று அழைத்ததை விட அக்கா என்று வாய் ஓயாமல் அழைத்தது தான் அதிகம். அப்படி இருக்க அம்மா ஸ்தானத்தில் இத்தனை நாளும் உடன் இருந்து வளர்த்தவளிடம் பெற்றவளே பேசாதே என முட்டுக்கட்டை போட்டால், பிஞ்சி மனதுக்கு என்ன தெரியும்!

இதோ அக்காளை பார்த்ததும் அம்மா சொன்ன அனைத்தையும் மறந்து விட்டு, நிழலான மாமரத்தின் அடியில் அமர்ந்து, அவள் ஊட்ட ஊட்ட மொட்டு வாய் திறந்து அபக் அபக் என பசியோடு உண்ணும் தம்பியை, கன்னம் வழியும் கண்ணீரை துடைத்தபடி வேக வேகமாக ஊட்டினாள் கோதை.

“அக்கா இதுமாதிரி சாட்டு எம்புட்டு நாளாச்சு தெரியுமா.. அம்மாகிட்டக்க கேட்டாக்க காசில்ல கண்ணா கொஞ்சம் பொறுத்துக்கோ, அம்மா வேலைக்கு போயிட்டு நல்ல சாப்பாடு செஞ்சி தர்றேன்னு கஞ்சிய சூடு பண்ணி தரும். குடிக்கவே கஸ்டமா இருக்கும் க்கா..”

வயிறு முட்ட உண்டு முடித்த மதுரன், திருப்தியாக குட்டி வயிற்றை தடவிக்காட்டிட, கோதைக்கு கண்கள் கரித்தது.

“சரி மதுமா அக்கா ஒனக்கு விதவிதமா சாப்பாடு செஞ்சி கொண்டாறேன் திருப்தியா சாப்புடு என்ன” மென்மையாக அவன் தலை வருடி வாயை துடைத்து விட்ட அக்காளின் அன்புக்கு தானே, அவன் அடிமையாக இருப்பது.

“இந்தா இது சீதாக்கு, பரிட்சைக்கு லீவு விட்டதால அவள பாக்க முடியல. பைல வச்சி பத்திரமா எடுத்துட்டு அவள்ட்ட குடுத்துடு மதுமா” தான் செய்த வேலைக்கு எப்படியும் செல்வியின் கோபம் தீராது என்று தெரியும், ஆனால் சிறு பிள்ளைகளை எப்படி பசிக்கு ஏங்க வைக்க முடியும். தன்னால் முடிந்த வரை ஒருவேளை வாய்க்கு ருசியாக தம்பி தங்கைக்கு செய்து கொடுத்து அவர்களையாவது திருப்தி படுத்த நினைத்து விட்டாள்.

தானே அவன் பையில் உணவை வைத்து பூட்டி தம்பியிடம் நீட்டிட, மதுரன் வாங்கும் முன் அந்த பையினை ஆனந்த் வாங்கி இருக்க, சிறுவன் முகம் கருத்துப் போனது.

“ந்.நீங்களா..” திகைத்த கோதை, சாப்பாடு கொடுத்ததிற்கு ஏதாவது சொல்லி விடுவானோ என்ற பயத்தில் எச்சிலை விழுங்கினாள்.

“ம். ஹா..மீன் குழம்பு வாசம்.. கும்முனு வீசுது டி.. மத்தியானம் ந்நா சாப்புடும் போது இல்லையே. இது என்ன இந்த பொடியனுக்கு மட்டும் ஸ்பெசலா” அவனை முறைத்துக் கொண்டிருந்தவன் தலையில் லேசாக ஒரு தட்டு தட்ட, சிலுப்பிக்கொண்டு ஆனந்தன் கரத்தை தட்டி விட்டான் மதுரன்.

“பார் டி பொடியனுக்கு எகத்தாலத்த.. என் வீட்டு சோத்த தின்னுபுட்டு என் கையையே தட்டிவுடுறத” மீண்டும் அவன் தலையை தட்டப் போக, பட்டென தன் பக்கம் மதுரனை இழுத்துக்கொண்ட கோதை,

“அவனுக்கு தலைல தட்டினா புடிக்காதுங்க. தயவுசெஞ்சி என் தம்பிய எதுவும் சொல்லிடாதீங்க” கைக்கூப்பி இறைஞ்சிய மனைவியை கண்கள் இடுங்க பார்த்தான்.

“ஓ.. தொறைக்கு தலைல தட்டினா புடிக்காதோ.. பெரிய மைனர் குஞ்சி இவரு டேய்.. இங்க வாடா..” அதட்டலாக அழைத்த மாமனை, ஏன் கண்டு பயந்தான் அவன்.

“அக்கா உடுக்கா.. இவரு பெரிய ஆளு அப்டி என்னைய என்ன பண்ணிபுடுவாருன்னு பாக்குறேன். உடு என்னைய..” கோதையின் பிடியில் இருந்து நழுவி வந்து ஆனந்தன் முன்னே தில்லாக நிற்க, அச்சத்தில் பதறியது என்னவோ அந்த பாவப்பட்ட பெண்தான்.

“மது பெரியவைங்கள அப்டிலாம் பேச கூடாது அமைதியா இருடா..” அவனை அடக்க முயன்ற அக்காளை இவன் அடக்கினான்.

“நீயி சும்மா இருக்கா.. இந்த ஆளால தானே அம்மா உங்கூட எங்கள பேச விடாம பண்ணுச்சி.. நீயும் எங்கள விட்டுட்டு போய்ட்ட.. எங்கூட வா போலீஸ்ல இவர புடிச்சிட்டு குடுத்துட்டு ஒன்னைய வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்”

அடங்காமல் சீரிய சிறுவனின் ஆவேசம் கண்டு, மிரண்டு போன கோதை,

“தப்பு மதுமா.. இப்டிலாம் பேசக்கூடாது நீ வீட்டுக்கு போ.. நாளைக்கு அக்கா ஒன்னைய பாக்குறேன்” எப்படியாவது அவனை அடக்கி அனுப்ப முயல,

“பாத்தியா.. பாத்தியா.. இப்ப கூட நீயி இந்தாளுக்காக என்னைய போவ சொல்ற.. அப்ப ஒனக்கு என்னைய விட இவர்தா முக்கியமா” குட்டி நெஞ்சை நிமித்திக் கத்த, அந்நெஞ்சை வாஞ்சையாக நீவிவிட்டவளாக,

“அப்டி இல்ல மதுமா, என்னைக்குமே எனக்கு நீதா முக்கியம். ஒன்னையதா இந்த அக்காக்கு ரொம்ப புடிக்கும். ஆனாலும் அவைய ஒன்னைய விட வயசுல பெரியவங்க இல்லையா மரியாதை இல்லாம பேச கூடாது மது” மெதுவாக அவனுக்கு புரியும்படி எடுத்து சொல்ல, எங்கே அவன் கேட்டான்.

“போக்கா.. எனக்கு இந்தாள சுத்தமா புடிக்கல..” அடம் செய்ய தொடங்கிய மதுரனை அடக்க வழியறியாது கணவனை பார்க்க, இதுவரை அவன் பேசியதெல்லாம் கேட்டுவிட்டே உஷ்ன மூச்சி வெளியேற, கோபத்தில் கைமுஷ்டி இறுக நின்றிருந்தான் ஆனந்தபாலன்.

“அச்சோ.. இவைய வேற கோவமா இருக்காவலே” உள்ளே கலவரமாக நினைத்த கோதை, “எ.ஏங்க சின்ன பையன் பேசினது எல்லாம் மனசுல வசிக்காதீய. ஏதோ எம்மேல உள்ள பாசத்துல அப்டி பேசிட்டான்..”

அவசரமாக உரைத்தவளை ஒவ்வொரு அடியாக நெருங்கி வர்ற வர்ற, தொண்டையின் நடுவே பெரிய உருண்டை அடைத்து மூச்சி விடவே சிரமமாகி போனது.

“அப்போ ந்நா ஒனக்கு முக்கியமில்ல” கூரிய விழிகளால் அவளை துளைத்து எடுத்தவன் பேச்சில், பின் நோக்கி அடி வைத்த கோதை, ஸ்தம்பித்து நின்று விட்டாள்.

“என்ன உளறல் இது” புரியாமல் நிற்கும் போதே, அவள் நெஞ்சை அழுத்திய பாரத்தில் அதிர்ச்சியாக கணவன் முகம் பார்த்து விட்டு, குனிந்து மதுரனை பார்க்க, அவனோ அக்காளிடம் ஆனந்தை நெருங்க விடாது தடுப்பதில் மும்புரமாக மாமன் கால்களை பற்றி பலமாக இழுக்கும் முயற்சியில் இருப்பதை கண்டு, நொந்து போன கோதை,

“மதுஉஉஉஉ..” தம்பியை தடுக்க நினைத்தவளின் சுவாசம், காற்றாக அவன் உள்ளங்கைகுள் இறங்கியது.

“அவங்கெடக்கான் பொடியன், நீ சொல்லு டி. ந்நா ஒனக்கு முக்கியம் இல்ல” அழுத்தம் திருத்தமாக கேட்டு அவளின் படபடக்கும் விழிகளை ஆழ்ந்து பார்க்க, உடல் வெடவெடத்துப் போனது கோதைக்கு.

“அவன் சின்ன பையங்க. அவனை சமாதானம் செய்ய அப்டி சொன்னது” இவனை சமாளிக்க முயற்சித்தவளை இதழ் கோணி பார்த்தான்.

“அவன் சின்ன பையன்தே. ஆனா நான் சின்ன பையன் இல்ல டி. கேட்டதுக்கு பதில் வேணும். நான் முக்கியமா? இல்ல இவன் முக்கியமா?” பெரிய பெரிய மூச்சுடன். அவளை பொசுக்கித் தள்ள, இது என்ன டா புதிய வம்பு என்ற மனநிலையில்,

“ந்.நீயலும் முக்கியம் தாங்க” உதடு தாண்டி வெளிவர முடியாது தவித்தது மோன சொர்கள்.

“நீயலும்னா என்ன டி அர்த்தம். ஏதோ வேண்டா வெறுப்புக்கு சொல்ற மாதிரி பிச்சி பிச்சி சொல்ற” சிடுசிடுவென முகத்தை காட்டியவனிடம் வசமாக மாட்டி நின்றாள் கோதை.

“வ்.வீட்டுக்கு ப்..போய் சொல்றேனே..” கோதை இறைஞ்சும் போதே,

“அக்காவ விடு.. என் அக்காக்கு நாந்தா முக்கியம்.. ஒன்னைய கண்டாலே என் அக்கா பயப்படும். போ.. போ.. நீ வேணா” ஆனந்தன் காலை பிடித்து நறுக்கென கடித்து வைக்க, குட்டி பையனின் ப்ளேடு பற்கள் ஆழப் புகுந்து, ஆஆஆ… என அலறிய அலறலில் கோதைக்கே கணவனை நினைத்து பாவமாக தோன்றியது.

“மது.. மது.. விடுடா அவையல.. டேய்.. அக்கா சொல்றேன்ல அவையல விட்டு வா..” கட்டாயமாக இழுத்துக்கொண்டு நான்கடி தள்ளி வந்தவள், முகம் கருத்த நிலையில் தீவிரமாக அவன் முறைப்பதை எண்ணி உள்ளுக்குள் நடுங்கினாலும், நிலைமை தீவிரம் அடையும் முன் மதுரனை முதலில் அனுப்பிவிடவே நினைத்தாள்.

“அக்கா நாளைக்கு வர்றேன், நீ முதல்ல இங்கிருந்து போ..” சற்றே கண்டிப்புடன் சொன்னதை கேட்டு, தன்னை முறைத்து நின்ற ஆனந்தை வெறித்தனமாக பார்த்து சென்ற மதுரனின் பார்வையில் உள்ள கொடும் வீரியத்தை, ஆனந்தும் பார்க்க தவறவில்லை.

“ஏங்க மன்னிச்சிடுங்க.. எம்மேல உள்ள பாசத்துல மது கால கடிச்சிட்டான்..” படபடப்பாக சொன்னவளின் புயத்தை பற்றி ஆவேசமாக இழுத்த வேகத்தில் அவன் கட்டிமார்பில் முட்டிய மங்கையின் மென்நெஞ்சம், பாறையில் பட்டு நசுங்கியதை போன்ற உணர்வை தந்தது.

“உம்மேல அம்புட்டு பாசமாக அந்த கொடுக்குக்கு.. இப்பசொல்லு டி ஒனக்கு அவன் முக்கியமா இல்ல ந்நா முக்கியமா.. இந்த ஒட்டு சேர்த்து பாவப்பட்டு என்னைய சொல்றது எல்லாம் வேணா, ஒழுங்கா தெளிவா சொல்லு.. நானா? அவனா?” பொடியனோடு போட்டி போட்டு தடியன் மனைவி பாசத்திற்கு விடாபிடியாக ஏங்கி நிற்க, கோதைக்கும் அது புரியாமல் இல்ல.

முரட்டு செயலானாலும் அவனோடு வாழும் அவளுக்கு கணவனின் உணர்வுகள் அறியாதா..! சிரிப்பை மறந்திருந்த கோதையின் குண்டு கன்னங்கள் நீண்ட நாட்கள் பிறகு செம்மை பூசி விரிந்ததை, இமைகள் சுருக்கி அழுத்தமாக பார்த்தான் அவன்.

“நீய கேக்குறது பெத்த பிள்ளை முக்கியமா இல்ல புருசன் முக்கியமான்னு கேக்குறது போல இருக்கு. எனக்கு ரெண்டு பேத்துமே முக்கியம்தா, கால்ல ரத்தம் கசியிது வீட்டுக்கு வாங்க மருந்து வச்சி விடுறேன்”

அப்போதும் தம்பியை விட்டுக்கொடுக்காது பேசிய மனைவியை கடுப்பாக கண்டவனுக்கு, ஏமாற்றத்தில் முகம் சிறுத்துப் போனது.

“மச்.. உன் வெளக்க ம*று எவனுக்கு டி வேணும். நாந்தே முக்கியம்னு வாய தொறந்து சொல்ல கூட அம்மணிக்கு அம்புட்டு அசிங்கமா இருக்குதுல்ல.. ஒனக்காக கொஞ்சங் கொஞ்சமா என்னைய மாத்திட்டு நிக்கிறேன் பாரு என்னைய சொல்லணும்”

பிடித்திருந்த அவள் புயத்தை உதறிவிட்டு விருவிருவென நடந்து போனவனை பெருமூச்சு விட்டு கண்டவளுக்கு, இத்தனை தூரம் மதுரன் அவனை காயப்படுத்தி மரியாதை குறைவின்றி பேசியதை எதையும் பெரிது படுத்தாமல் சென்றதே சற்று நிம்மதியும், பெருத்த ஆச்சிரியத்தையும் ஒருசேர தந்தது.

** ** **

“அதே ஒன்னைய புடிச்ச சனி தொலஞ்சி போச்சே இனியாவது அடுத்த கண்ணாலம் கட்டி புள்ள குட்டிகளை பெத்து போட்டு நிம்மதியா இரு தேவா..” என்ற தகப்பனை மௌனமாக பார்த்து நின்ற தேவனின் முடிவு என்னவோ வேண்டாம் தான்.

“இப்ப நீ முடிவா என்ன தேவா சொல்ல வர்ற..” தொடர்ந்து பேசி பேசி அலுத்து போனவருக்கு, கோபம் எட்டிப்பார்த்தது.

“அவள எனக்கு ஆவுதோ ஆவலையோ, இந்த ஜென்மத்தில அவதே என் பொஞ்சாதி” என்றவனின் தீர்க்க பதிலில் புசுபுசுவென நெஞ்சி வீங்கியது அவருக்கு.

“இம்புட்டு சொத்தும் அப்ப யாருக்காக தேவா கட்டி காத்து வச்சிருக்கேன். ஒனக்கு அடுத்து உன் வாரிசு அதை ஆள வேணாமா.. உன் பேரை உரிமையா நாளைக்கு உன் புள்ள மார் தட்டி சொல்லிக்க வேணாமா.. வயசு என்ன கொஞ்சமா ஆவுது இன்னைக்கு இல்லனா நாளைக்கு பாத்துக்க. இளமை காலமெல்லாம் அந்த மலட்டு சிறுக்கியோட வீணா போச்சேடா..

இனிமேலும் அப்டி விடமுடியாது, உன் மூலியமா எனக்கு ஒரு வாரிசு வந்தே ஆவணும்” எப்படியாவது அவனை தான் பார்த்த பெண்ணோடு கட்டி வைத்திட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் இறங்கி விட்டார் தண்டாயிதம்.

“புள்ளைக்காக இன்னொரு கண்ணாலம் கட்டிக்கிடணும்னா இந்த முடிவை ந்நா என்னைக்கோ எடுத்திருப்பேன் ப்பா.. ஆனா எனக்கு தேவை என்னனு எனக்கு நல்லாவே தெரியும்.

அதா ஆனந்துக்கு கண்ணாலம் முடிஞ்சிடுச்சே, கண்டிப்பா உங்க ஆசைப்படி அவனுக்கு வாரிசு வரும். அவனுக்கு குழந்தை பொறந்தா அது எனக்கும் குழந்தை மாறிதே, அதை பாத்து வளத்தி சந்தோசப் பட்டுப்பேன்”

இறுகிய முகத்துடன் தெளிவாக சொன்ன தேவன், தகப்பன் பேசிய பேச்சில் கோவம் வந்து அவர் முகம் பாராது அங்கிருந்து நகர முயல, தொப்பென்ற சத்தத்தில், வேகமாக திரும்பிப் பார்த்த தேவன், தண்டாயிதம் நெஞ்சை பிடித்துக்கொண்டு இழுத்து கிடந்ததை கண்ட அதிர்ச்சியில்,

அப்ப்பாஆஆ.. என பதறிப் போனான்.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!