Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 19

வதைக்கும் அகிம்சையே! – 19

by Indhu

அத்தியாயம் – 19

திருமணம் ஆக வேண்டுமென்ற பலநாள் கனவு நிறைவேறியது, ஆனால் இப்படி ஒரு காட்டுமிராண்டியோடு தன் வாழ்க்கை பயணம் கடுமையாக மாறும் என கனவிலும் எண்ணியதில்லையே!

யாருக்காக இத்தனை தூரம் அவமானப்பட நேர்ந்ததோ, அவரே தன்னை தூங்கி எறிந்த அந்நிகழ்வில் இருந்து இன்னும் வெளிவரவே முடியவில்லை அவளால்.

“என்ன டி என் கையால தாலி ஏறுன சந்தோசத்துல ஒறஞ்சி நின்னுட்ட, புருசன் வீட்டுக்கு போவோமா” அவள் இடைஇறுக்கி தன் உயரத்திற்கு தூக்கி, உதட்டில் உதடு வைத்து சப்பு கொட்டி உறிஞ்சியவனை, கண்ணீரும் அதிர்ச்சியுமாக பார்த்த கோதை, விருட்டென அவனை தள்ளி விட்டு, தன் வீட்டை நோக்கி ஓட தொடங்கி இருந்தாள்.

“மச்.. கழுத வயசுல ரெஸ் குதிரை கணக்கா எப்டி ஓடுறா இவ” சலிப்பாக நினைத்தாலும், அவன் பாதமும் பெரிய பெரிய எட்டுடன் எடுத்துவைத்து கோதையை பின்தொடர்ந்து சென்றது.

பொழுது சாய்ந்த வேளையில் தான் அவள் அசோக்கை பார்க்க சென்றது, இப்போது நன்றாக இருட்டியே போயிருக்க, மகளின் வருகைக்காக வாசலையே பார்த்து காத்திருந்த செல்வி, பேயை பார்த்தது போல அரண்டு போய் மூச்சிறைக்க ஓடி வந்த கோதையை கண்டு, படபடப்பு வந்து விட்டது செல்விக்கு.

“அம்மாடி கோத.. என்னமா ஆச்சு.. எதுக்காக இம்புட்டு வேகமாக ஓடி வர்ற” என்ற செல்வி, அவள் தாலியை கண்டதும் மின்சாரம் தாக்கியதை போல அதிர்ந்து நின்ற வேலையில், பெரிய கரங்களால் கோதையை வளைத்து தன்னுள் அடக்கிய ஆனந்தபாலன்,

“எங்கிட்டையேவா ஆட்டம் காட்டுற, அதென்ன டி பழக்கம் கட்டுன புருசனையே தள்ளிவுட்டு ஓடி வர்றது” கடுமையாக மொழிந்து, அவள் தலையில் இரண்டு கொட்டு வைக்க, கண்ணீரில் திளைத்த கோதை, பலமாக அவனிடமிருந்து விலக முயல, அசைய விட்டான் இல்லை.

அதுவரையிலும் தாலியை பார்த்தே உறைந்து அதீத அதிர்ச்சியில் நின்ற செல்வி, ஆனந்தின் செயலில் மேலும் அதிர்ச்சியானவளுக்கு, இவன் தான் தாலிகட்டியவன் என மெல்ல மெல்ல மூளையில் உரைத்தாலும், ஆனந்தை பற்றி நன்கு அறிந்தவளுக்கு இதயம் திக்கென்றது.

“த்.தம்பி என் மகள விடுப்பா” குரல் நடுங்கி வந்த நிலையிலும் கோதையை தன் பக்கம் இழுக்க முனைந்தவளை, கங்கு பார்வையால் அனலை கக்கியதில் தேகம் நடுநடுங்கிப் போனது.

“உன் மக எல்லாம் பொழுதோட முடிஞ்சி போச்சி. இப்ப இவ என் பொஞ்சாதி மட்டுந்தா. உன் குப்ப ஒறவெல்லாம் இனிமே தேவையே இல்ல” முகத்தில் அடித்ததை போல் காட்டமாக கத்தியவனை, இயலாமையோடு பார்த்தனர் இருவரும்.

“எ.என்ன.. தம்பி பேசுறீய. அவ என் பொண்ணுப்பா. இம்புட்டு வருசத்துக்கு பொறவு இப்பதே அவளுக்கு நல்ல வரண் கூடி வந்துது. அதை கெடுத்திட்டியே. என் பொண்ணு ஒனக்கு என்ன பாவம் பண்ணினா..” அவனை எதிர்க்க முடியாது என்று தெரியும். ஆனால் பொங்கி வரும் ஆதங்கத்தை எப்படி கேளாமல் இருக்க.

முந்தானையால் வாய்ப் பொத்தி அழும் தாயைக் கண்டு கோதைக்கு நெஞ்சே வலித்தது.

“பாவம் பண்ணல, ஏமாத்திட்டா..” என்றவனை சட்டென தலைநிமிர்த்தி, சொல்லிவிடாதே என்பது போல் தவிப்பாக தலையசைக்க, அரக்கன் கேட்டான் இல்லை. மடமடவென அனைத்தையும் சொல்லி,

“இப்ப சொல்லு, ஏற்கனவே எங்கூட பணத்துக்காக அவளையே தந்துட்டா. அதுவும் ஒனக்காகதே. அப்ப ந்நா இவள கட்டிக்கிடுறதுல என்ன தப்பு இருக்கு” தெனாவட்டு பேசி நின்றவனை, இன்னும் எத்தனை எத்தனை அதிர்வோடு தான் காணுவது.

அதைவிட பேரதிர்ச்சி கோதை செய்த செயல். உயிரே போனது செல்விக்கு.

“என்ன காரியத்த டி பண்ணிட்டு வந்திருக்க. உன் ஒடம்ப வித்ததே என் உசுர காப்பாத்தினியா..” இத்தனை தூரம் ஆன பின்பு ஆனந்தை கண்டு என்ன பயம் இருக்கிறது. அவன் கைவளைவில் நடுங்கிக்கொண்டு இருந்தவளை, பாய்ந்து அடிவெளுத்த செல்வியை ஓர் நொடி அவனே சமாளிக்க முடியாமல் திணறி தான் நின்றான்.

“அம்மா மன்னிச்சுடு ம்மா.. அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியல” செல்வி அடிக்க அடிக்க , அடி வாங்கிக்கொண்டே கதறி அழுதவளை விட்டால் கொன்று போடும் வெறி செல்விக்கு.

“பாவி பாவி.. பணம் காசு இல்லைனாலும் மான மரியாதையோட மதிப்பா வாழ்ந்து வந்தேனே டி.. இப்டி ஒடம்ப வித்த பணத்துல எனக்கு மருத்துவம் பாத்து, நீ கெட்டதும் இல்லாம என்னையும் கலங்கப் படுத்திட்டியே டி.. நீ நல்லா இருப்பியா..” மேலும் மொத்து மொத்தென்று மொத்த, “ஏய்.. நிறுத்து” என்ற உருமலோடு, கோதையை இழுத்து தனக்கு பின்னே நிறுத்தியவன் கடும் பார்வையில், சர்வமும் அடங்கியது செல்விக்கு.

“இன்னொரு அடி அவமேல பட்டுச்சு தொலைச்சிடுவேன் பாத்துக்க” சினத்துடன் பெரிய விழிகளை உருட்டும் போதே, அவனையும் மீறி அவனிடமிருந்து மீண்ட கோதை, தன் அன்னையின் கால்களில் விழுந்தடித்து மன்னிப்புக் கேட்டு கதறி, மீண்டும் ஆனந்தனின் கோபத்திற்கு ஆளாகினாள்.

“ம்மா.. தயவுசெஞ்சி என்னைய அடி திட்டு ஆனா என்னைய தப்பா மட்டும் நினைச்சிடாதம்மா.. சத்தியமா எனக்கு எந்த தப்பான என்னமும் இல்ல” கோதை தன் பக்க விளக்கத்தை சொல்ல முயல, செல்வியின் விலகல் உயிரை வதம் பண்ணியது.

“நீ என்ன காரணம் சொன்னாலும் சரி. ந்நா சாகட்டும்னு விட்டிருந்தா கூட சந்தோசமா செத்து போயிருந்துப்பேன். ஆனா நீ பண்ண காரியம் இருக்கே, இப்பவே என்னைய ந்நா தீ வச்சி குளிச்சா கூட அந்த பாவம் தீராது. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ இன்னையோட எனக்கு நீ மகளே இல்ல. எனக்கு இருக்குறது ரெண்டு பசங்க மட்டுந்தே. என் மொகத்துலயே முழிக்காத போய்டு இங்கிருந்து..”

செல்வி ஒரேடியாக மகள் இல்லை என்று சொன்னதும் இல்லாது, குடத்தில் இருந்த குளிர்ந்த தண்ணீரை தலையில் ஊற்றி, தலை முழுகிகியதை கண்டு தொண்டை விக்கி, சொல்ல முடியாத வேதனையில் திக் பிரம்மை பிடித்து போனவளை, தன் வீட்டிற்கு தள்ளிக்கொண்டு வந்துவிட்டான் ஆனந்த்.

சீதாவும் மதுரனும், அக்கா.. அக்கா.. என கதறி அழுத அழுகுரல் எல்லாம் செல்வியின் அதட்டலில், கேவலாக மாறி இருந்தது.

ஆனந்தன் வீடு, கூடத்தை தவிர மற்ற இடங்களில் யாவும் இருலில் மூழ்கிக்கிடக்கும் போதே தெரிந்தது, இன்னும் தேவனும் தண்டாயிதமும் வீடு வந்து சேரவில்லை என்று.

நேராக தன் அறைக்கு அவளை இழுத்து வந்தவனை, கண்களில் உயிர்ப்பின்றி பார்த்தாள் கோதை.

“என்ன டி அப்டி பாக்குற. இனிமே இங்கனதே இருக்க போற, இம்புட்டு நாளா முறை இல்லாம ந்நா நெருங்கினத தப்புனு விலகி விலகி ஓடின. இனி அப்டி நீ ஓடத் தேவையில்ல சரியா..” பாரட்டையாக இருந்த தலையினை சிலுப்பிக்கொண்டு அவளை மேலிருந்து கீழாக பார்த்தபடி அதட்டலாக உரைக்க, பதிலில்லை அவளிடத்தில்.

“மச்.. இந்த கருமத்துக்குதே கண்ணாலமே பண்ணாம இருந்தது. பொண்டாட்டினு ஒருத்தி வந்துட்டா வெக்கங்கெட்டு போயி தானா கெஞ்சிக்கிட்டு ஓடணும். ஆனா ந்நா அப்படிலாம் கெஞ்சிட்டு வர்ற மாட்டேன் டி. ஒழுங்கா எனக்கு ஏத்த மாதிரி நடந்துக்க” கடுமையாக எச்சரித்து விட்டு படுக்கையில் அவளோடு சரிந்தவனுக்கு, நிம்மதியான உறக்கம் தழுவியது. ஆனால் அவள் உறக்கம் பரிபோய் இருந்ததே!

தண்டாயிதபாணிக்கு விசயம் தெரிஞ்சி வீட்டுக்கு வந்தா தான், சிறப்பான கலவரம் இருக்கு.

** ** **

இரண்டு மூன்று நாட்களாக என்ன வேலைக்கு செல்வது என தெரியாமல், காலையில் இருந்து மத்தியானம், பொழுது வரை தொடர்ந்து கடைவீதிகள் முழுக்க அலைந்து திரிந்து சோர்ந்து போன நாயகிக்கு, எங்கு சென்று யாரிடம் எப்படி என்ன வேலை கேட்பது என ஒன்றுமே புரியாமல், வியர்வை பூத்த முகத்தினை முந்தானை கொண்டு துடைத்தவளுக்கு கால்கள் வலித்து, இளைப்பாற இடம் தேடியது.

அருகில் உள்ள அம்மன் ஆலயத்திற்குள் தானாக கால்கள் நடந்து சன்னிதானம் அடைந்ததும், கடவுளை தரிசிக்க மனமின்றி அங்குள்ள அமைதியான சூழலை உள்வாங்கியபடி தூணில் சாய்ந்து அமர்ந்தாள் நாயகி.

அன்று எந்த விஷேச நாளும் இல்லை என்றாலும், மன நிம்மதி தேடி கடவுளை தரிசிக்க வந்த ஒரு சிலரும் கூட வந்த சிறிது நேரத்தில் புறப்பட்டு விட, இவள் மனநிலை மட்டும் நிம்மதியின்றி அலைபாந்தன.

“இந்த பாழா போன மனசு, எங்கே சுத்தினாலும் அவையலதே நெனச்சி கவலை படுது. அவையலுக்கு வேணும்னா ஆரம்பத்துல இருந்தே ந்நா ஆவாத பொண்டாட்டியா இருக்கலாம். ஆனா எனக்கு அவைய கைய புடிச்ச நாளுல இருந்தே, விருப்பட்டு தானே கூட வாழ்ந்தேன். எப்டி என்னைய அம்புட்டு ஈஸியா தூக்கி எறிய முடிஞ்சிது.

அப்ப இம்புட்டு வருச கண்ணால வாழ்க்கைய, நெசமாலுமே வேற வழி இல்லாமதே என் கூட வாழ்ந்து இருக்காவலா..” அப்படி நினைக்கும் போதே மென்நெஞ்சி வதைப்பட்டு, பெண்மனம் பலமாக வலித்தது.

தூணுக்கு நேராக பெரிதாக மாட்டப்பட்டிருந்த நிலைக்கண்ணாடியில் எதார்த்தமாக தன் உருவத்தை பார்த்த நாயகியின் கண்கள், வெறுமையாக இருந்த அவள் கழுத்தையே எத்தனை நேரம் வெறித்தனவோ!

கண்கள் கலங்கியவளின் நினைவில், தேவனே தன் கையால் ஆக்ரோஷமாக தாலியை பறித்த நிகழ்வே வந்து வந்து போக, கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.

ஒவ்வொரு முறையும் கணவனோடு சேர்ந்து ஆலையத்திற்கு வரும் போதும், கடவுளை தரிசித்த பின் அவனே தன் கையால், நெற்றி வகுட்டிலும் தாலிக்கொடியிலும் குங்குமத்தை வைத்து, சில கணங்கள் அதனையே கண்ணெடுக்காமல் பார்த்துவிட்டு, தன் கைகோர்த்து கோவிலை வளம் வரும்போது சிலிர்த்து போகும் தேகம்.

ஆனால் இன்று, கணவனும் அருகில் இல்லை, தாலியும் தன் கழுத்தில் இல்லை. பிறகு எந்த உரிமையில் அவனை நினைத்து நெற்றி வகுட்டில் குங்குமம் சூடுவது.

கடினப்பட்டு தன்னை நிதானித்தவள், வேகமாக அங்கிருந்து எழுந்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டாள்.

“என்ன நாயகி ஒனக்கு வந்த நெலம. வசதியான வாழ்க்க கெடச்சும் இப்டி முட்டாள்த்தன்மா தொலைச்சிட்டு, கந்ததுணிய கட்டிட்டு சுத்துறீயே” வழியில் ஒருத்தி சிறப்பாக வாய் திறந்தாள்.

“ம்ம்.. இனிமே ப்ரெசிடெண்ட்டு மனசு மாறி ஒன்னைய மன்னிச்சி, திரும்ப ஒங்கூட வாழுறது எல்லாம் நடக்காத காரியந்தே! நானும் கேள்வி பட்டேன் பெரிய ஐயா, அவையலுக்கு ரெண்டாங்கல்யாணம் கட்டி வைக்கிறதபத்தி ஊருக்குள்ள பேசிக்கிறதா” என்றாள் மற்றொருத்தி.

“ஆமா ஆமா டி, ப்ரெசிடெண்ட்டு ஐயாவும், எம்புட்டு நாளைக்குதே புள்ள குட்டி இல்லாம ஒத்தையாவே திரிவாக, வாரிசுக்காகவே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாகனு, அவைய அப்பாவே பாக்குற கேக்குற எல்லார்க்கிட்டயும் சொல்றதா, என் புருசனே கேட்டுட்டு வந்து எங்கிட்ட வந்து சொன்னாரு” அவரமாக பதில் தந்த ஒருத்தியை, உள்ளுக்குள் தோன்றிய அதிர்ச்சியோடு பார்த்தாள் நாயகி.

“சொல்றேன்னு தப்பா நெனைக்காத நாயகி, ஊருக்கெல்லாம் நல்லது செய்ற ப்ரெசிடெண்ட்டு ஐயாக்கு, அவர் பேர் சொல்ல ஒரு வாரிசு வேண்டாமா!

நிச்சயமா ஐயாக்கு எந்த குறையும் இருக்க வாய்ப்பு இருக்காது. ஒனக்குதே ஏதாவது பிரச்சனையா இருக்கும். ஏன்னா நீயி வயசுக்கு வந்ததே பெரிய அதிசயந்தே. இனிமே எல்லாம் பிள்ளை உண்டாவ வாய்ப்பில்லனு தோணுது. அதுனால உன் புருசனவுட்டு நீ மொத்தமா ஒதுங்கிடறதுதே எல்லாருக்குமே நல்லது. நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு”

போகும் வழியெல்லாம் பல வாய்கள் பலவிதமாக பேசி, அவளுக்கு ஆறுதல் கூறுகிறேன் என வஞ்சகத்தில் அவள் மனதை வார்த்தையால் குத்தி காயப்படுத்திட, விம்மி வந்த அழுகையை அடக்க முடியாது, யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணி இன்றி, வீட்டிற்கு ஓடி வந்து விழுந்தவளுக்கு அழுகை பீறிட்டு, கணவனை சுமந்த நெஞ்சம் முழுக்க அதீத பாரத்தில் அழுத்தியது.

“நெசமாலுமே என்னைய என்னைய மறந்துட்டு, வேற ஒரு கண்ணாலத்துக்கு சம்மதிச்சிடீயலா” நம்பமுடியாமல் பைத்தியம் போல் தனக்கு தானே கேட்டுக் கொண்ட நாயகிக்கு தான் தண்டாயிதபாணியை பற்றி நன்கு தெரியுமே!

எப்படியாவது தன்னை பத்திவிட்டு, தன் மகனுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்று இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக முயற்சித்துக் கொண்டு தானே இருந்தார். தேவன் தான் அந்த ஒரு விடயத்தை மட்டும் அவர் சொல்வதை கேட்க மறுத்துக்கொண்டே இருந்தான்.

“ஆனா ந்நா இப்டி வெளிய வந்ததும் சம்மதம் சொல்லி இருக்காவன்னா, அவையலுக்கும் குழந்தை வேணும்னு ஆசைபட்டு தானே சொல்லி இருக்காவ” விரக்தியாக எண்ணிய நாயகியின் ஈரவிழிகள், எங்கோ நிலைக்குத்தியது.

“எல்லாரும் சொல்றது போல, அவையலுக்கு எந்த ஒரு குறையும் இருக்க வாய்ப்பே இல்லதே. எனக்குதே ஏதோ குறை இருக்கு.. கண்டிப்பா இருக்கு.. அப்ப எனக்கு இனிமே குழந்தையே பிறக்காதா..” இரு கைகளாலும் தனது வயிற்றை மெல்ல வருடி, இறுக்கிப் பிடித்துக்கொண்ட நாயகியின் கண் மூக்கு வாயெல்லாம் பச்சை தண்ணீராக ஒழுகி தரையை நனைக்க, யாருமில்லா தனிமையில், அதீத மனஉளைச்சல் பெருகி, ஆஆஆஆ… என வாய் விட்டே கத்திக் கதறி இருந்தாள்.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!