Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 18

வதைக்கும் அகிம்சையே! – 18

by Indhu

அத்தியாயம் – 18

“ஹாய் பூவு” உற்சாகமாக அவள் முன் குதித்த அசோக்கை கண்டு மெல்லிய சிரிப்பை உதிர்த்த கோதை, அமைதியாக தலை தாழ்த்திக் கொண்டாள்.

“சாரி, ஈவினிங் டைம்ல ரெஸ்ட் எடுப்ப. இப்போ போய் உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேனா” மெல்ல பேச்சை தொடங்க, “ஆம் இல்லை” என இரண்டு பக்கமும் தலையாட்டி வைத்தவளை, சின்ன சிரிப்புடன் பார்த்தான்.

“ஓகே ஓகே கூல் பூவு. என்ன பாத்தாலே நர்வஸ் ஆகிடுறியே, நான் என்ன அவ்வளவு டெரராவா இருக்கேன்” மௌன விரதம் காக்கும் கோதையின் சிப்பி வாயை திறக்க வைக்க, அவனும் ஏதேதோ பேச்சி கொடுக்கிறான். அதற்கு கோதை மனமிறங்க வேண்டுமே!

“இல்லை” என மெல்லமாக தலையாட்டி வைத்தாள்.

“ஊப்ஸ்.. இவ்வளவு கூச்சம் ஆகாது பூவு. கல்யாணம் ஆனதுக்கு பிறகு, இந்த கூச்சமெல்லாம் போய்டும்னு நம்புறேன். இப்ப இந்தா இதை வாங்கிக்க” இன்முகத்துடன் அவன் நீட்டிய பார்சலையும், அவனையும் மலங்க மலங்க பார்த்த கோதையின் கரங்கள் நடுங்க, அதனை வாங்க முற்படும் வேலையில், மின்னல் வேகத்தில் பார்சல் வான் நோக்கி பறந்து சென்று, அதே வேகத்தில் கீழே விழுந்து சிதறியதில், அதிலிருந்த குங்கும பட்டு சேலை அளங்கோலமானதை கண்ட கோதை அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“ஹேய் யார் டா நீ” கோபத்தில் சினத்த அசோக், அவர்கள் எதிரே திடகாத்திர உடலுடன், நெஞ்சை நிமிர்த்தியபடி விரைப்பாக நின்றிருந்தவன் சட்டையை பாய்ந்து பிடித்திருக்க, கோதையின் மூச்சே நின்று போனது.

“நீ யார் டா டுபுக்கு, அவளுக்கு சீல வாங்கி குடுக்க” பாய்ந்து பிடித்த அசோக் கரத்தை, அவன் எலும்பு நசுங்க பிடித்து ஒரே முறுக்காக முறுக்கி இருக்க, ஆஆ… என்ற அலறல், அசோக்கிடமிருந்து வரும் முன்னமே, அச்சத்தில் நடிங்கிய கோதை அலறிக் கத்தி இருக்க, எதிர்நின்றவனின் கூர்பார்வை அவளை வதம் பண்ணியது.

“அவள நான் கட்டிக்க போறவன் டா. சேலை என்ன அவ ஆசைப்பட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பேன். நீ யார் டா அதை கேக்க” அவன் கரத்தில் இருந்து லாவகமாக தன் கரத்தை உருவி, ஓங்கி விட்டான் ஆனந்தன் முகத்தில் ஒரு குத்து.

அசோக் விட்ட குத்தில் மனிதன் அசருவான், அரக்கன் அசருவானா? சாதாரணமாக துடைத்துப் போட்டு எம்பி அவன் தலையில் ஒரு அடி போட்டவன், “ந்நா யாரா.. ஒனக்கு முன்னாடியே அவளை தொட்டு, அணுஅணுவா அனுபவிச்சவன் டா. ஏன் இந்த உத்தம பத்தினி உன்னாண்ட எதுவும் சொல்லையா” தரையில் மடிந்து விழுந்தவனை கண்டு, ஏளனமாக இதழ் கோணினான் ஆனந்தபாலன்.

“அய்யோ, ஏன் இப்டி அராஜகம் பண்றீய” பதறித் துடித்த கோதைக்கு, ஆனந்தனின் செயலில் அவமானத்தில் உள்ளம் வலித்தாலும், மல்லாக்க விழுந்து கிடந்த அசோக்கை தூக்கிட குனிந்தவளின் கொத்து முடியினை ஆத்திரத்துடன் பற்றி தன் பக்கம் இழுத்தவனை, வலியில் முகம் சுணங்கி பீதியாக பார்த்தாள்.

“ஏன் டி, இந்த சொம்புகிட்ட என்னைய பத்தி எதுவும் சொல்லலையா நீயி..” அவன் முகமும் குரலில் அத்தனை இறுகி இருந்தது.

“தயவுசெஞ்சி என் மானத்தை வாங்காதீய. அவைல்ட்ட நானே நேரம் பாத்து பக்குவமா சொல்லதே தவிச்சு கெடக்கேன். ஒங்கள கெஞ்சி கேட்டுக்குறேன் இனிமே என் வாழ்க்கைல குறுக்க வராதீய. என் விசயம் என் அம்மாக்கு தெரிஞ்சா செத்தே போவும்”

கைக்கூப்பி அவள் அழுவதை சுவாரசியம் பொங்க பார்த்தான்.

“உன் அம்மா செத்தா எனக்கு என்ன வந்துச்சி. நீ இவைங்கிட்ட உண்மைய சொன்னா சொல்லு சொல்லாட்டி போ. என் கேள்வி எல்லாம் ஒன்னுதே.. எனக்கு குடுத்தியே பணம் அது எப்டி டி வந்துச்சி” காட்டமாக விழுந்த கேள்வித் துளையில், தேகம் உதறல் எடுத்தது.

“ம்.முன்னவே ஸ்.சொல்லி இருக்கேனே” அச்சத்தில் குரல் பின்னின.

“ஆமா நல்லா உதார்வுட்ட. இப்ப நெசத்த சொல்லு” என்றவனின் மற்றொரு கரம் தனது பட்டாபட்டியில் இருந்து நாயகியின் தோட்டை எடுத்து அவள் முகத்தின் நேரே ஆட்டிட, சர்வமும் அடங்கியது கோதைக்கு.

“ம்.. சொல்லு தங்கோ.. பணம் எப்டி வந்துது” குனிந்து அவள் கன்னத்தோடு கன்னம் இழைக்க, சிங்கத்திடம் மாட்டிய இரையாக வசமாக மாட்டிக்கொண்ட திகைப்பில், தப்ப வழியறியாமல், இறுக்கமாக கண்களை மூடி அவனது வரம்பு மீறிய தொடுகையில் துடித்துப் போனாள்.

“ம்..மன்னிச்சுடுங்க. பணத்த குடுத்துட்டா என்னைய நீய தொல்லை பண்ண மாட்டீயனு நாயகி அக்கா சொல்லி, கட்டாயமா எங்கிட்ட குடுத்துட்டாக. எனக்கும் அந்த நேரத்துல ஒங்ககிட்ட இருந்து தப்பிக்க வேற வழி தெரியல.

இதுக்கு நீய என்ன தண்டனை வேணாலும் குடுங்க ஏத்துக்குறேன். ஆனா என் கற்பை மட்டும் திரும்ப திரும்ப கலங்கப்படுத்தாதீய” என்ற கோதை அவன் பிடியையும் தாண்டி, ஆனந்தனின் தடித்த கால்களை பற்றி, பரிதாபமாக அழ, இலகும் ஆளா அவன்?

முதலில் இவர்கள் பேசுவதை கேட்டு, வலியில் புரியாமல் குழம்பிய அசோக், கோதையின் கடைசி வார்த்தையில் ஓரளவுக்கு விபரம் புரிந்தவனுக்குக் கூட அவள் நிலை கண்டு நெஞ்சி கனிந்தது போலும். ஆனால் கனிய வேண்டியவனோ கல்லாக நின்றானே!

“இப்ப என்ன அவ உங்கிட்ட வாங்கின பணம் வேணும். அதுக்காக தானே இந்த அளவுக்கு அந்த பொண்ண போட்டு டார்ச்சர் பண்ற. அவ வாங்கின பணத்துக்கு மேல மூணு பங்கு உன் மூஞ்சில விட்டெறியிறேன். இதோட பூவுகிட்ட நெருங்குற வேலை வச்சிக்காத.

அவ எப்டி இருந்தாலும் அவளை உண்மையா நேசிச்சவன் நான் என் பூவை கல்யாணம் பண்ணி, அவளை சந்தோசமா வாழ வைப்பேன்”

கரத்தில் இருந்த மண்ணை தட்டிவிட்டபடி எழுந்து நின்ற அசோக், உறுதியாக கூறி, தான் பேசியதை கேட்டு தன்னையே மிகுந்த அதிர்ச்சியோடு பார்த்திருந்த கோதையை தன் பக்கம் இழுக்க வர்ற, அவளை தொட்டு இழுக்க வந்த கரத்தை வளைத்துப் பிடித்து, முரட்டுத்தனமாக தூர தள்ளி இருந்தான் ஆனந்தபாலன்.

“உன் சுண்டு விரல் இவமேல பட்டாலும், மவனே உன் ஒடம்புல இருந்து உசுர எடுத்திடுவேன்” ஆங்காரமாக விரல் நீட்டி கண்களை உருட்டிவனை, கிட்டத்தில் கண்டவளின் இதயம் நின்று துடித்தது.

“ஏய்.. அவன என்ன டி பாக்குற.. என்ன கொஞ்சம் சிரிச்சி பேசி, டிப்டாப்பா துணி உடுத்துறவன பாத்ததும் அப்டியே மயங்கிடுவியா.. என்னைய பாத்தா எப்டி டி தெரியிது ஒனக்கு”

இப்போது கோதையிடம் எகிற,

“இது என்ன டா எனக்கு வந்த சோதன” எனும் விதமாக, பாவமாக முழித்தது பூஞ்சைபெண்.

“எம்புட்டு தகிரியம் இருந்திருந்தா எவனோ பரிசம் போட வந்தான்னு, மறுப்பு சொல்லாம நீயும் பல்ல காட்டிட்டு கூட நின்னு இருப்ப” நரநரவென பற்களை கடித்தவனுக்கு நேற்று செல்வி எதார்த்தமாக அவன் தந்தையிடம் சொல்லப் போய்தான், கோதைக்கு பரிசமான செய்தி தெரிய வந்தது.

அதிலிருந்தே என்னவோ போல் முரட்டாக திரிந்தவனுக்கு, எப்போது கோதை வெளிவருவாள் என காத்திருந்து, இதோ அசோக்கை பார்க்க வந்து, வசமாக சிக்கிக் கொண்டாள் அவனிடத்தில்.

“எம்புட்டு தரம் ஒன்னைய தொட்டு இருப்பேன், ஏன் தொடறேன் எதுக்கு தொடறேன்னு உன் மரகழன்ட மண்டைக்கு வெளங்கள ஹான்..” அவள் மண்டையில் கொட்டி, காட்டுப்பையன் கத்த, “ஐய்யோ ம்மா..” தலையை பிடித்துக் கொண்டவளுக்கு, “இப்ப இவன் எதுக்கு கிறுக்கு போல கத்துறான்” என்று தான் தோன்றியது.

“சொல்லு டி.. எதுக்கு தொட்டேன்னு வெளங்கள” மீண்டும் கத்தி பெண்ணை உளுக்க,

“அட வெளங்காதவனே.. சொன்னா தானே டா வெளங்கும்” என்பது போல மலங்க மலங்க விழித்த கோதைக்கு, காது ஜவ்வு கிழிந்தது.

“இப்பவும் வெளங்களைல.. சரிதே.. என்ன தண்டனை வேணாலும் குடுத்துக்க சொன்னேல்ல. இப்ப தர்ற தண்டைல இருந்து, நீ காலத்துக்கும் மீள முடியாது டி. என்ன அப்படி பாக்குற”

நக்கலாக புருவம் ஏற்றி, அவளின் குழப்பம் கலந்த பயந்த முகத்தை பார்த்துக்கொண்டே, தனது சட்டை பாக்கெட்டில் கை விட்டு சர்ரென மஞ்சள் கயிற்றை தூக்கி அவள் முகத்தின் நேரே ஆட்டிட, அதிர்ச்சியில் நயனங்கள் விரிந்தது கோதைக்கு.

தன் முகத்தின் நேரே ஆடிய தாலிக் கயிற்றையும், முரட்டுப் பீசையும் மாறி மாறி படபடப்பாக கோதை பார்த்து நிற்கும் போதே, அவள் கழுத்தில் மஞ்சள் கயிறு பாந்தமாக பொருந்தி உரிமையாக அவள் மார்பில் தொட்டு உறவாடியதை குனிந்து பார்த்து, மீள முடியாத அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் கண்ணீரோடு.

“மீள முடியாத தண்டனை இது” என தாலி கட்டியவன் சொல்லாமல் சொல்லி விட்டான். ஆனால் மீள முடியாத தண்டனையின் கொடிய வேதனை எப்படி இருக்கும் என்பதை, பாவம் அவன் உணராது போனானே!!

மீள முடியாத தண்டனை அவளுக்கு அவன் கொடுத்தது அல்ல. இனி வதைக்கும் அகிம்சை வழியில் காலத்திற்கும் மீள முடியாத தண்டனையாய், அவளே அவனுக்கு மாறவிருப்பது.

அங்கு நடந்த கலவரத் திருமணத்தை அதிர்ச்சி மாறாது பார்த்த அசோக்கு அதற்கு மேலும் அங்கு நிற்க தெம்பில்லை. கோதையை பார்த்ததும் பிடித்தது, ஆனால் இப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாள் என முன்பே தெரிந்திருந்தால், அவளுக்கு நிச்சயம் உறுதுணையாக நின்றிருப்பான்.

ஆனந்தபாலன் முந்தும் முன், எதைப்பற்றியும் கவலை படாமல் இவன் முந்திக் கொண்டு இருப்பான். ஆனால் இப்போது அனைத்தும் கை மீறி போனது.

மஞ்சள் கயிறு பளிச்சிட்ட வன்னம், பூங்கோதை ஆனந்தபாலனின் முரட்டுக் கைக்குள், மிரட்சியாக அடங்கி நின்றிருந்தாள்.

“இப்பவாது வெளங்குச்சா டி” குனிந்து அவள் செவிமடல் கவ்வி கிசுகிசுத்தவன் கரம், இப்போது புருசன் முறையோடு அவள் இடையினை இறுக்கி தழுவி இருந்தது.

கலங்கிய விழிகள் நிமிர்த்தி, அடாவடியாக தனக்கு புருசனான புது புருசன் முகம் பார்க்க, “பாழா போன இந்த கண்ண பாத்துதே, இவமேல காதல் நோய் தாக்கி தொலஞ்சிது போல” கடுப்பாக உதட்டுக்குள் முணுமுணுத்து தலையை சிலுப்பிக் கொண்டவனை வெறுமையாக வெறித்தன அவள் அம்பகம்.

“ம்க்கும்.. இன்னுமும் வெளங்களையா.. ஹெவி பெர்பார்மன்ஸ் பண்ணி இன்னைக்கு ராத்திரியே ஒனக்கு வெளங்க வச்சிப்புடறேன்.

அப்புறம் ப்..பூவுஉஉஉ.. புருசன் வீட்டுக்கு போவோமா டி” பூவு என்றதை மட்டும் அசோக்கை பார்த்து அழுத்தமாக கூறி நக்கல் செய்ய, கோதையை ஒருமுறை பார்த்த அசோக், அவள் தெளியாத முகத்துடன் அரண்டு இருப்பதை கண்டு, ஆனந்தனை முறைத்து விட்டு, விறுவிறுவென அங்கிருந்து சென்று இருந்தான்.

மாற்றான் தோட்டத்து மல்லிகை ஆன பின்னும் அங்கிருந்து வீண்வாதம் செய்வதில் இனி பலனில்லை என உணர்ந்திருப்பான் போலும்.

அதிலும் ஆனந்தபாலனின் முரட்டு பலம் கண்டே தெரிந்து போனது, இவனை எதிர்த்து போராடுவது சிரமம் என்று.

ஆனந்தபாலனை எதிர்க்க நிச்சயம் மற்ற யாராலும் முடியாது தான். ஆனால் அகிம்சையாய் வதைக்க அவன் மாலையிட்ட மனைவி, இதோ அவன் வீட்டில் தனது முதல் காலடியை எடுத்து வைத்தாள்.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!