Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 15

வதைக்கும் அகிம்சையே! – 15

by Indhu

அத்தியாயம் – 15

“இந்த உறவை நீட்டிக்கிற தாலி, நீ எனக்கு பொஞ்சாதியே இல்லைனு ஆன பொறவு, இனிமே ஒரு நிமிசம் உன் கழுத்துல இருந்தாலும், அது எனக்கு தான் டி அசிங்கம்”

ஆங்காரமாக கத்தி, அவள் என்னதென உணரும்முன் தாலியை அறுத்து வீசிய தேவன், “இனி ஒரு காலம் ந்நா செத்தாலும், என் முகத்துல நீ முழிக்கக் கூடாது. வெளிய போடிஇஇ..” கட்டுக்கடங்கா கோபத்தில் அவள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி இருந்தான்.

என்ன நடந்தது? எதையுமே நிறுத்தி நிதானிப்பதற்குள் அனைத்துமே நடந்து முடிந்திருந்தது. பதினைந்து ஆண்டுகால.திருமண பந்தத்தை வேரோடு வெட்டி முறித்து, ஒட்டுமொத்தமாக துரத்தி அடித்துவிட்டான்.

ஒவ்வொரு நாளும் கூடலின் பொழுதில் தொடக்கத்திலும் முடிவிலும், அவள் கழுத்தில் ஊர்ந்து கிடக்கும் தாலிக்கொத்தில் அவன் அதரம் தீண்டாது தவறியதே இல்லை.

“உன் நெஞ்சில சுமக்குறதால தான்டி, இந்த தாலி கொடிக்கே அழகு கூடுது.

காலைல இருந்து ராத்திரி எங்கூட இந்த கட்டில்ல கட்டி உருலுர வரைக்கும் எத்தனையோ தங்க நகைங்க ஒன்னைய அலங்கரிச்சி இருந்தாலும், அதுல எல்லாம் தெரியாத அழகு. இந்த ஒத்த தாலில, சொல்லுல வடிக்க முடியாத அளவுக்கு நீ அம்புட்டு அழகா இருக்க டி”

தாலியோடு சேர்த்து கட்டிக் கனிகளையும் உதட்டால் உரசி முத்தமிட்டு, நா தீண்டி கரு திராச்சை குழைத்து உறிஞ்ச, நாணத்தில் ஜீவன் துடித்து, தன்னோடு இறுக்கிக்கொள்வாள் நாயகி.

“இந்த நெஞ்சிக்குழில பதிங்கிக் கெடக்குற தாலிக்கொடி எனக்கு எப்பவுமே கர்வத்தை தரும். ஏன் தெரியுமா?” கொடியை தன் முகத்தில் பரவவிட்டு அதனோடே, அவள் மலைகளில் மோத, “ஏன்” என்பது போல பார்க்கும் அந்த போதை ஏற்றும் கருவண்டு விழிகளுக்கு, வாரி இறைப்பான் முத்தத்தை.

“இந்த தாலிகொடிதா நானு. நானு எப்பவும் இங்கன பாதுகாப்பா பதுங்கி கதகதப்பான உணர்வுல, எப்பவும் ஒன்னைய உரசிக்கிட்டே கெடக்கக்கேன்ல”

கூடல் பொழுதில் ஒவ்வொரு நாளும் அவளை விதவிதமாக ரசித்து, அந்த தாலிக்கொடியோடு சேர்த்து அள்ளிக்கொடியை வர்ணனை செய்து, மேலும் அவளை அழகூட்டி வெட்கத்தில் சிவக்க வைத்த மன்னவன், இன்று அவன் கரம் கொண்டே அப்பெண்ணின் உயிரை பிடிங்கி எடுத்த அக்கொடுமையான நிகழ்வினை நினைக்க நினைக்க, உயிர் வதை கண்டாள் நாயகி.

திருமணம் முடிந்த கையோடு புகுந்த வீடு வந்தது தான். அதன் பிறகான நாட்களில் தாய் வீட்டு பக்கம் எட்டிப்பார்க்க கூட அனுமதித்தது இல்லை தண்டாயிதபாணி. வருடத்திற்கு ஓரிரு முறை ஒற்றை மகளை காண அடித்துப்பிடித்து ஓடி வரும் பெற்றோரை கண்டு நெகிழ்ந்து போவாள் நாயகி.

மற்றபடி அவள் வாழ்ந்த குடிசை வீடு, பதினைந்து வருடங்களில் இப்போது ஓட்டு வீடாக மாற்றப்பட்டு இருந்தது. அவளை அரவணைத்து ஆறத்தழுவி முத்துக்குளிக்கும் பெற்றோர் இருவரும், ஆடி அடங்கி ஓய்ந்து போய் தங்கள் வயிற்றை நிரப்ப வேண்டுமே என்ற கட்டாயத்தில், கலை பிடுங்கி கையெல்லாம் அரித்து உடல் சீக்கு வந்த நிலையில் பொம்மையாக நடமாடுகின்றனர்.

இத்தனை வருடமும் மங்களகரமாக கழுத்தை நிறைத்திருந்த பொன்தாலியை பறிகொடுத்தவளின் மனம் முழுவதும் வெறுமை படர்ந்து, கால் போன போக்கில் செருப்பின்றி நடந்த நாயகியின் கால்கள் நின்றதோ, அவள் பிறந்த வீட்டில் தான்.

அரசல் புரசலாக அவள் தாய் தந்தையரும் விடயத்தை கேள்வி பட்டிருப்பர் போல, வீட்டின் முன்னே நிற்கதியாக வந்து நின்ற மகளை கட்டிக்கொண்டு அழுவதை தவிர வேறு என்ன செய்திட முடியும் அவளால்!

“சின்ன எறும்பு துரும்புக்கு கூட கேடு நெனைக்க மாட்டியேமா.. ஒனக்கா இப்டி ஒரு நெலம வரணும். ஐயோ..நாயகிஇஇ..” பெற்ற வயிற்றில் அடித்துக்கொண்டு அழுத அன்னை லட்சுமியை, கண்களில் நீர் திரள பார்த்து நின்றாள்.

“நானும் வரும்போதெல்லாம் படிச்சி படிச்சி சொன்னேனே, நமக்கு கிடைச்சுருக்க சம்மந்தம் எம்புட்டு பெருசுனு. மாப்பிள மனசு கோணாம கவனமா உன் வாழ்க்கைய மட்டும் பாருமானு. எம்பேச்ச கேட்டியா நீயி. வீணா அந்த புள்ள அமுதா காதல சேத்து வைக்கிறேன்னு உன் வாழ்க்கைய தொலைச்சிட்டு வந்துட்டியே. இனிமே நாங்க எப்டி தலை நிமிந்து நடப்போம்”

மூலையில் அமர்ந்து மாறி மாறி புலம்பி அழும் இருவரையும் உயிர்ப்பற்ற பார்வை பார்த்தாள் நாயகி.

“ஆக மொத்தம் இங்க யாருமே பொம்பளைங்க மனசையும், அவிங்க உணர்வுகளையும் புரிஞ்சிக்கல. மானம் மரியாதை போச்சுதுன்னா எப்டி ஊரார் முன்னாடி தலை நிமிந்து நடக்குறதுன்றது மட்டுந்தே இவிங்க கவலை” விரக்தியாக மனதில் நினைத்த நாயகி, மௌனமாக மூலையில் முடங்கிக் கொண்டாள்.

** ** **

தன் தோட்டத்து வீட்டை அடையும் முன்னவே, வழி தெருவில் பார்த்த பலரும், “என்ன ஆனந்தா, பட்டுனத்துல படிச்சிட்டு வந்த உன் தங்கச்சி, வயித்த நிரப்பிக்கிட்டு அசல் சாதிகார பயலோட ஓடி போய்டுச்சாமே!” நக்கலாக கேட்டு அவன் கோபத்திற்கு ஆளாகிட, அவர்களை எல்லாம் சும்மா விட்டு போக முடியுமா! கேட்ட வாய்க்கெல்லாம் இலவசமாக வெற்றிலை பாக்கு போட்டு விட்டு வரும் போதுதான் அக்காட்சி கண்ணில் பட்டது.

அந்த பக்கமாக இருந்த ஆற்றின் பாலத்தின் அருகே கோதையும், அவளுக்கு நேரெதிரே மற்றுமொரு புதியவனும் நின்று பேசிக்கொண்டிருக்கும் காட்சி அது.

என்ன பேசுகிறார்கள் என தூரத்தில் இருந்து பார்த்தால் ஒன்றும் கேட்காது. கோதையோ நிமிந்து அந்த புதியவன் முகத்தை பார்க்கவே இல்லை. அவன் மட்டும் ஏதேதோ பேசினான். கடைசியாக அவன் கேட்ட எதற்கோ, அவள் தலையை மட்டும் ஆட்டி விட்டு அங்கிருந்து சென்றாள். அவனும் தனது காரில் ஏறி பறந்து விட்டான்.

அதனை பார்த்த ஆனந்தபாலன், இகழ்ச்சியாக இதழ் வளைத்தாலும், முகமோ எக்கச்சக்க கோபத்தில் சிவந்து இறுகி இருந்தது.

அதே வேகத்தில் வந்தவன் தான், ஏற்கனவே அவனுக்காக காத்திருந்தவளை முதுகெலும்பு உடையும் அளவிற்கு அனுபவித்து துரத்தி அடித்த பின்னும் முகம் கனியாது இறுகி கிடந்தவன், அங்கிருந்த மேசையின் மீது கையால் துலாவி, கையில் மாட்டிய பொருளை, தன் கண்ணெதிரே தொங்க விட்டுப் பார்த்தான்.

அவன் கடனை அடைக்க வேண்டி, கோதை பயந்து பயந்து விற்ற நாயகியின் தங்கத்தோடு அது.

“என்னென்னலாம் சொல்லி என் காதுல பூ சுத்தின. கண்டுபுடிக்க மாட்டேன்னு அம்புட்டு தகிரியம்” அதனை பார்த்து கேலியாக நகைத்த ஆனந்தன்,

“ந்நா எப்போடா தொடுவேன்னு ஏங்கி போயி காத்திருக்கவளுங்க மத்தியில, என் தொடுகைய அருவருப்பா பாத்த ஒன்னைய எப்டி சும்மா விடுவேன்னு பாத்த. பணத்தை எங்கிட்ட குடுத்துட்டு போன அன்னைக்கே, நீ என்னென்ன தில்லுமுள்ளு பண்ணேன்னு எல்லாத்தையும் கண்டுபுடிச்சிட்டேன் டி.

அப்பகூட உண்மைய சொல்லாம எனக்கே சாபம் குடுத்து பூச்சாண்டி பயம் காட்டினேல்ல.. ஒனக்கு இனிதாந்டி நெறைய இருக்கு” பற்களை கடித்துக் கொண்டவன், அந்த தோட்டை பத்திரப்படுத்திக்கொண்டான்.

கோதை நகையை விற்ற அன்று, அவள் என்ன காரணம் சொல்லியும் நம்பாமல் இருந்தவனுக்கு, “எப்படி இவளிடம் இவ்வளவு பணம் வந்திருக்கும்” என தீவிர யோசனையில் தான் உழன்றான்.

மதியம் போல் மார்க்கெட் வீதியில் வளம் வந்த ஆனந்தை, எதார்த்தமாக பார்த்த அதே நகை கடைக்காரர் சந்தேகமாக அழைத்தார்.

“முதல்ல அந்த பொண்ணு வந்து, இந்த நகைய விக்கக் குடுக்கும் போது ந்நா சரியா கவனிக்கல சின்ன தம்பி. பொறவுதா பழைய தங்கத்த உருக்க தொடங்கும் போது நல்லா உத்து கவனிச்சேன். இதே டிசைன தேவா தம்பி எங்கிட்ட செஞ்சு வாங்குனதா நியாபகம். அதே குழப்பத்துல இருக்கும் போதுதே உங்களையும் நேர்ல பாத்துட்டேன். என்றார் சந்தேகமாக.

“ஏய்யா, இந்த டிசைன எங்க அண்ண ஒரு ஆள் மட்டுந்தா செஞ்சி வாங்கிருப்பானா. அவைன் வாங்கின பொறவு, இத்தையே அச்சிட்டு செஞ்சி, எம்புட்டு ஆளுங்ககிட்ட புது டிசைனுனு ஏமாத்தி வித்திருப்ப” அலட்சியமாக காதை குடைந்தபடி எழுந்து கொண்டான்.

“ஐய்யோ நிச்சயமா இல்ல தம்பி, தேவா தம்பி அது பொஞ்சாதிக்கு வாங்குற ஒவ்வொரு பொருளும், தனித்துவமானதா இருக்கணும்னு நினைக்கும். அதுவா ஒவ்வொரு டிசைனையும் ரசனையா யோசிச்சி, எப்டி அந்த பொருளை உருவாக்கணும்னு ஒவ்வொண்ணா பாத்து பாத்து அழகு படுத்த சொல்லும்.

முக்கியமா தம்பிக்கு செஞ்சி குடுக்குற அதே டிசைன வேற யாருக்கும் செஞ்சி விக்கக்கூடாதுனு, கடுமையா எச்சரிச்சிட்டுதா போவும். அதுனால ந்நா அடிச்சி சொல்றேன், இந்த பொருள மட்டும் இல்ல, தேவா தம்பிக்கு செஞ்சிகுடுத்த எந்த ஒரு பொருளையுமே, திரும்ப செஞ்சி வேற யாருக்கும் ந்நா விக்கல சின்ன தம்பி”

ஆணித்தரமாக அவர் அடித்துக் கூறியதும், விரல்களால் தாடையை தேய்த்தவன் பற்கள், கோதையை நினைத்து கோபத்தில் அரைப்பட்டது.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!