Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 10

வதைக்கும் அகிம்சையே! – 10

by Indhu

அத்தியாயம் – 10

சேவல் கொக்கரிக்கும் அதிகாலை பொழுதில், மார்கழி மாத குளிர் ஊசியாக உடலை துளைப்பதையும் தாண்டி, தலைவனின் தேகச்சூட்டில் புதைந்திருந்தவள், மெல்ல தனது நயனம் திறந்து அருகில் படுத்திருந்த கணவனை பார்த்தவளின் மெனிதழ்கள் பூரிப்பில் மலர்ந்தன.

இரவு உணவு வேண்டாம் என்று சினத்த தேவன் முதுகுக்காட்டி படுத்து விட, தட்டையும், அவன் முதுகையும் மாறி மாறி சிறிது நேரம் பார்த்த நாயகி, மீண்டும் அவனிடம் பேச்சிக்கொடுக்க பயந்தவளாய் தட்டை வைத்துவிட்டு, அவனுக்கு மறுபுறம் ஒருக்களித்துப் படுத்து உறக்கத்தை தழுவிய சில கணங்களில், அவள் மென்வயிற்றில் இதமாக பதிந்தது காளையின் கரம்.

“உடல்நிலை சரி இல்லாத இந்த நேரத்தில் கூடவா, இவரால் தனித்துப் படுக்க முடியாது” நடுக்கமாக உள்ளே அஞ்சி வேதனைகொண்ட இதயத்தை பிரமிக்க வைக்கும் விதமாக அடுத்தடுத்து தேவன் செய்த செயலும், சக்கரையான அவன் பேச்சும் கேட்டு, பெண்ணுள்ளம் நம்பமுடியாத ஆனந்த திகைப்பில் திண்டாடிப் போனது.

“இப்ப ஒடம்பு எப்டி இருக்கு டி. காய்ச்சல் பரவால்லையா..” எப்போதும் கடுகடுக்கும் குரல் தேனாய் தித்திக்க, மென்மையாக அவள் கழுத்தை தொட்டு பார்த்தவனை, “ஆத்தி இது நெசமாலுனே என் புருசன் தானா” என்ற அதிர்ச்சியில் இருந்து மீளாமல், அம்பகம் விரித்தவளை தன் பக்கம் திருப்பி, அவள் மென் கன்னத்தில் அதரம் பதித்தான் அமரதேவன்.

“மச்.. என்ன டி அப்டி பாக்குறவ. காய்ச்சல் இன்னும் குணமாவல ஆஸ்பத்திரி போவோமா!” வெல்லமாக அக்கறை காட்டிய தேவனை இன்னும் ஆச்சிரியத்தோடு பார்த்தவளை கண்டு, உதட்டுக்குள் புன்னகை பூத்தது காளையனுக்கு.

“என்ன?” அவன் விழிகளை ஏற்ற,

“ம்ம்ஹும்..” என வேகமாக தலையாட்டிய மனைவியின் இந்த அச்சத்தைக் காண கோடி கண்கள் வேண்டும்.

“ம்ஹும்னா என்னத்த டி புரிஞ்சிக்க” சலித்துக் கொண்டான், பொய்யாக.

“ஆ.ஆஸ்பத்திரிக்கு வேண்டாங்க, தூங்கி எந்திரிச்சா க்.காய்ச்சல் போய்டும்” லேசாக வீங்கிய இமைகள் படபடக்க, திணறிய நாயகியின் இந்த வாட்ட முகம் அவன் நெஞ்சை பிசைய்ந்தது.

“அப்ப சரி இங்கன படுத்துக்க, நான் முதுகை தட்டி குடுக்குறேன். ராவுல காய்ச்சல் அதிகரிச்சா எந்நேரம் ஆனாலும் பரவால்ல, ஆஸ்பத்திரி கூட்டிட்டு போய்டுறேன் சரியா” பரிவாக சொன்னவன், அவள் பதிலை எதிர்நோக்காமல் அவன் மார்பில் நாயகியின் முகத்தினை தானாக புதைத்து, சொன்னது போல் அவள் முதுகினை மென்மையாக தட்டிக்கொடுக்க, தன் கணவன் உடலில் பேய் ஏதாவது புகுந்து கொண்டதோ! என்ற அச்சத்தில் நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது.

“என்னாச்சி டி, எதுக்கு நெஞ்சி இப்டி படபடன்னு துடிக்குது” அவன் வயிற்றில் அழுந்தி இருந்த அவள் பஞ்சான நெஞ்சினை நீவி விட்டவாரு, குனிந்து மனைவியின் முகம் நோக்க, கணவனின் திடீர் பாசத்தை தாங்க முடியாமல் அம்பகத்தில் விழி நீர் தேங்கி நின்றது.

“ஏங்க நான் கனவு ஏதும் காணலையே! ந்.நெசமாலுமே நீங்கதா எங்கிட்ட இம்புட்டு அக்கறையா பாசத்தோட பேசுறதா” அவனிடமே பாவமாக கேட்டவளை ஆழ்ந்து பார்த்தான் தேவன்.

“பாசம் காட்டினா அனுபவி டி, ஆராயாத. பொறவு அப்டிக்கா திரும்பி படுத்திடுவேன், ஒழுங்கா கண்ண மூடிட்டு தூங்கு. அப்பவும் தூக்கம் வரலைனா சொல்லு, நாம வேணும்னா கசமுசா பண்ணலாம்” அக்கறையாக அவள் நெஞ்சி நீவிய கரம், கிறக்கத்தில் அழுத்தம் கொடுக்க,

“அச்சோ தூக்கம் வருதுங்க” பதட்டமாக சொன்ன நாயகி, பட்டென கண்களை மூடி அவன் நெஞ்சோடு ஒன்றிக்கொள்ள, தேவனின் அழுத்தமான அதரம் முகிழ்நகை கொண்டது.

“ஏய்..”

“ம்..”

“நடிக்காம தூங்கு டி” துடிக்கும் அவள் இமைகளை கண்டே அவள் தூங்காதிருப்பது அறிந்து, அவள் முதுகில் கையணைத்து தன்னோடு இறுக்கிக்கொண்டவன், குனிந்து அவள் தேனிதழில் மென்மையாக இதழ் தீண்டிட, சொல்ல முடியாத பேரானந்தத்தில் திக்குமுக்காடியவளின் நயனம் ஆனந்த களிப்பில் சொட்டு நீரை வெளியிட்டது.

இதுநாள் வரை தன் கணவன் பேசிய நஞ்சி நிறைந்த அனைத்து சொர்களையும் ஒரே நொடியில் அவள் நெஞ்சை விட்டு அகண்டிருக்க, அவனது இறுக்கிய இடையினை இறுகக்கட்டிக்கொண்டு கண்ணயர்ந்த தேன்வெல்லத்தை இமைக்காமல் பார்த்திருந்தான் அமரதேவன்.

அதிகாலையில் கண் விழித்த நொடியில் இருந்து, இரவு நடந்த அனைத்தும் நிஜம்தானா என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், தன்னவனின் சின்னஞ்சிறிய அக்கறையில் கூட இதுவரை அனுபவித்திடாத பேரின்பத்தில் மூழ்கி, தன்னை அணைத்திருந்த கணவனின் அருகாமையில் இருந்து எழுந்துகொள்ளவே மனமின்றி, அவன் கழுத்து வளைவில் முகத்தை புதைத்துக்கொண்டாள் வேதநாயகி.

மனைவியின் திடீர் திடீர் நெருக்கத்தில் தேகம் முறுக்கி தானும் மெதுவாக கண்விழித்த தேவன், அவளாகவே தன் கழுத்தை தழுவி வாசம் செய்திருப்பதை கண்டு ஆண்தேகம் சூடேறி, சேலை நழுவி இருந்த அவள் இடையினை பிணைந்தான்.

“ஸ்ஸ்..” என்ற மெல்லிய முணுகள் ஒலி எழுப்பிய நாயகி, கணவனின் புத்தி போகும் போக்கு அறியாதவளாக, ஊசி குத்தும் குளிருக்கு இதமாக மேலும் அவனோடு ஒன்றியவளுக்கு, கணவனின் கதகதப்பிலும், புதிதாக அவன் காட்டிய மென்மையிலும், அவள் மேனி கண்ட காய்ச்சல் எல்லாம் பின்னங்கால் பிடரியடிக்க ஓடோடி இருந்தது.

அதை தேவனும் நன்கு உணர்ந்தவனாக, ஒற்றை நாளே விரகதாபத்தில் வெந்து, காமம்கண்ட மேனி கொதிக்க மனைவியின் வாசத்தை உள்ளிழுத்தவன், “என்ன டி கசமுசா பண்ணலாமா..” கிறக்கமாக பேசும் போதே, அவன் கரங்கள் அவளை தோலுரிக்க தொடங்கியது.

தாமாக கணவனை நெருங்கினால் இப்படி ஒரு அர்த்தம் இருப்பதை தாமதமாகவே உணர்ந்து கொண்ட மங்கைக்கு, இத்தனை இனிப்பாக கணவன் தன்னிடம் நடந்துகொண்டால் தன்னை அள்ளிக் கொடுக்காமல் இருப்பாளா!!

மேக பஞ்சணையில் முகத்தை அழுத்தி “நீயா எடுத்து குடு டி” வெட்கமின்றி கட்டளையிட்ட கணவனுக்கு, நாணி சிவந்து தேன்கிண்ணத்தை அவன் வாயில் தூக்கி கொடுக்க, சொர்க்கத்தில் மிதந்தான் முரட்டுக் காளையன்.

“மச்.. இது மட்டுந்தானா, அத்த யாரு டி குடுப்பா” மோகத்தில் கடிந்து அவளிடம் வேலையை ஏவ, மருண்ட விழிகளுடன் தலைவன் சொன்னதை எல்லாம் கட்சிதமாக செய்து, அதிசயமாக பாராட்டு வேறு பெற்றாள் அவனிடம்.

இதமான உறவு முடிவுக்கு வந்தும் கூட தன்னை விட்டு விலகாது படுத்திருந்த மனைவியின் எழிலோவியத்தை அவன் விரல்கள் ஸ்பரிசித்து மோட்சம் பெற்றுகொண்டிருக்க, “ஏய்.. எந்திருக்க மனசு வரலையா.. இன்னும் எம்புட்டு நேரந்டி ஒன்னைய கொஞ்சிகிட்டே கெடக்குறது” மோகம் தீர்ந்ததும் கடுகடு குணம் வெளிவந்ததை உணர்ந்த நாயகி,

“இதோ எந்திரிச்சிட்டேங்க” பதறியடித்து எழுந்து குளியலறைக்குள் ஓடி விட, மனைவியின் மருண்ட முகத்தை பார்த்த திருப்தியில், விட்ட தூக்கத்தை இதமாக தொடர்ந்தான் தேவன்.

** ** **

எப்போதும் அதிகாலை பொழுதே சுறுசுறுப்பாக எழுந்துகொள்ளும் கோதை, அன்று என்னவோ தாமதமாக தான் எழுந்தாள். அதீத மனசோர்வே அவளை வாட்டி வதைத்திட, மெதுவாக வீட்டு வேலைகளை தொடங்கியவளை நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர், அவள் தங்கை தம்பி இருவரும்.

“அக்கா, ஸ்கூலுக்கு நேரமாச்சு, இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் வேற சாப்பாடு செஞ்சிட்டியா? சீக்கிரம் தலை சீவி விடு” தங்கை சீதா ஒருபுறம், கையில் ரிப்பனுடன் அவசரத்தில் நிற்க.

“அக்கா, சூசூ போற எடம் எரிச்சலா இருக்கு” தம்பி மதுரன் ட்ரவ்ஸரை பிடித்துக்கொண்டு ஓடிவர, அடுப்பில் வெந்துகொண்டிருந்த சாதம் வேறு பொங்கி ஊற்றி, மற்றொரு அடுப்பில் பயிர் வெந்து விசில் வந்துகொண்டிருந்தது.

“அப்பப்பா.. என்ன டி இது, ஒத்த மனுசியா அவ எம்புட்டு வேலைய பாப்பா.. ஏய் சீதா இங்கன வா நான் ஒனக்கு தலைய சீவி ரிப்பன் வச்சி விடுறேன். மதுரா நீயும் வா அம்மா என்னனு பாக்குறேன்” படுக்கையில் இருந்து மெல்ல அமர்ந்த செல்வி, இரு பிள்ளைகளையும் அழைக்க,

“போம்மா நீ கோணல் கோணலா பின்னல் போட்டு ஏத்த எறக்கமா ரிப்பன் வச்சி விடுவ, அக்காவே பின்னட்டும்” சீதா விடாப்பிடியாக நிற்க,

“சரி டி பின்னி விடுறேன், ஆனா மது என்ன சொல்றான்னு கேட்டுட்டு வர்றேன், இரு” தம்பியை தூக்க போன கோதையை விடாது, “அக்கா எனக்கு ரொம்ப லேட்டாச்சி, ப்ளீஸ் எனக்கு தலைவாரிட்டு அவனை பாரு. சாப்பாடு கூட நானே கட்டி எடுத்துட்டு போய்டுறேன்” வகுப்புக்கு நேரமானதால் சீதா கெஞ்ச, வேறு வழியின்றி வேக வேகமாக தங்கைக்கு தலைவாரி முடிப்பதற்குள்,

“ஆஆ.. அக்கா.. கு*சிமணி வலிக்குது” மதுரன் தரையில் பிரண்டு அழ தொடங்கி விட்டான்.

படுக்கையை விட்டு எழ முடியாமல் செல்வி தடுமாற, “அம்மா நானே பாத்துக்குறேன் நீ படு” பதறிய கோதை, குட்டி தம்பியை இடைக்கு தூக்கி அவரசமாக அவன் தொடை இடுக்கில் ஆராய, குட்டி முனை சிவந்து செதில் செதிலாக பெயர்ந்து புண்ணாகி இருப்பதை கண்டு பயந்த கோதை, செல்வியிடம் விபரத்தை சொல்ல,

“எண்ணெய் தேச்சி குளிப்பாட்டாம விட்டதுல சூட்ட கெளப்பி இருக்கும்னு நெனைக்கிறேன் கோத, நீ ஒடனே தேங்கா எண்ணைய எடுத்து தடவி விடு, வலி குறையிதான்னு பாப்போம்” என்றதும் தாமதிக்காமல் எண்ணெய் தேய்த்து பார்க்க, வலி குறைந்தால் தானே அழுகை நிற்க.

“இப்ப என்னமா பண்றது” மதுரன் வெட்டி வெட்டி துடிப்பதை கண்டு அக்காளுக்கும் கண்கள் கலங்கிப் போனது.

“புள்ள இந்த அளவுக்கு அழறான்னா ஆஸ்பத்திரி கூட்டிட்டு போறதுதே நல்லது கோத” தாயின் தவிப்புக்கு இணங்க, எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதையும் கேட்டறிந்த கோதை, மறக்காமல் கையில் இருந்த சொச்ச பணத்தையும் எடுத்துக்கொண்டு, அவசரமாக குழந்தைகள் நல மருத்துவமனை நோக்கி ஓடினாள்.

மருத்துவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி, மதுரனை பற்றி விபரமாக அனைத்தையும் சொன்னதும், உன்னிப்பாக கேட்டவர்,

“எத்தனை நாளா இந்த பிரச்சனை இருக்கு” மருத்துவர் கேள்விக்கு குழம்பியவள்,

“ஒரு வாரத்துக்கு முன்னாடி பாத்ரூம் போனா எரிச்சல் வருதுக்கானு சொன்னான் மேடம், ஆனா நான்தா, அவன் விளையாட்டா சொல்றானா என்னனு ஒன்னும் புரியாம, அதுவா சரியாகிடும்னு அலட்சியமா விட்டேன். அதோட இப்பதா வலி தாங்காம துடிச்சி அழுதான்” அவசரகதியில் பதில் அளித்ததும், மதுரனை பரிசோதித்தார் பெண் மருத்துவர்.

“என்னாச்சி மேடம் என் தம்பிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே!” மருத்துவர் வந்ததும் தவிப்பாக எழுந்து கொண்டாள்.

“சின்ன பையனுக்கு என்ன தெரியும், குழந்தைங்க சின்னதா ஒரு வலின்னு சொன்னாலும், அது உண்மையோ பொய்யோ! பெரியவங்க நாமதா கேர் எடுத்து உடனே பாக்கணும்.

சிறுநீர் கழிக்கிற இடத்துல நோய்தொற்று ஏற்பட்டு இருக்கு. அதை உடனடியாக குணப்படுத்தலைனா நாளுக்கு நாள் எரிச்சல் அப்புறம் கடினமான வலி கூடி, சிறுநீர் பை பாதிப்பு அடஞ்சிடும்” என்றதும் அதிர்ச்சியில் உறைந்து போனாள் கோதை.

“என்ன மேடம் சொல்றீங்க”

“அமா ம்மா, இது ஒரு மோசமான நோயா தீவிரமடையிரதுக்கு முன்னாடி சரி பண்ண பாருங்க. முறையான ட்ரீட்மென்ட் எடுத்தா எல்லாம் நார்மலாகிடும்” என்ற மருத்துவர் சிகிச்சை முறையினை பற்றி விளக்கமாக கூறி, மருந்து சீட்டினை கொடுக்க, “சரி” என தலையசைத்த கோதை, கையோடு மருந்துகளை வாங்கிக்கொண்டு வீடு நோக்கி நடந்தாள்.

“அக்கா ஊசி போட்டது வலிக்குது” வழியில் சிணுங்கிய மதுரனை, ஒரு கடையின் திட்டில் அமர வைத்த கோதை,

“வீட்டுக்கு போயி ஒத்தடம் குடுத்தா ஊசி வலி சரியாகிடும் மதுமா. குஞ்சாமணி எரிச்சல் எப்டி இருக்கு” வெகு தூரம் அவனை தூக்கி வந்ததில், கால் வலிக்கவே தானும் அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

“சூசூ சொட்டி சொட்டி வலிக்குதுக்கா, ஆனா முன்னைக்கு இப்ப தேவலாம்” என்றவனின் குட்டிக் கண்கள் எல்லாம், அந்த மளிகை கடையை தான் எரும்பாக மொய்த்தன.

“ம்.. பண்டம் ஏதாவது தின்கிறியா மது”  அவன் கண் போன திசையறிந்து கேக்க,

“அக்கா எனக்கு பண்டம் வேணா, பட்டாசு வாங்கி குடு. அதுவும் அந்த வெடிக்கிற பட்டாசுதா வேணும்” தீபாவளி நெருக்கத்தில் அநேக கடைகளில் எல்லாம், மத்தாப்பு வகைகள் மற்றும் மிளகாய் பட்டாசு வகைகள் என விதவிதமாய் இறக்கி இருக்க, சின்னவன் அடம்பிடிக்க தொடங்கி விட்டான்.

“சரி சரி மது, வாங்கி தரேன் அழாம இருடா” அவனை சமாதானம் செய்து, அவன் கேட்ட பட்டாசை வாங்கிக் கொடுத்ததும், உவகையில் பொறுமை இல்லை அவனுக்கு.

இளம் கன்று பயம் அறியாது, மிளகாய் பட்டாசை பற்ற வைத்து, மிக சாதாரணமாக கைகளாலே தூக்கி வீசி வழி நெடுக்க வெடித்துக்கொண்டே வர, கோதை தான் ஒவ்வொரு வெடிக்கும் அரண்டு மிரண்டு காதைப் பொத்திக்கொண்டு வந்தாள்.

“டேய், அதுக்குள்ள என்ன டா அவசரம் வீட்டுக்கு போயி வெடியேண்டா, பட்டாசு சத்தம் கேட்டாலே நெஞ்செல்லாம் திக்கு திக்கு தூக்குது பயத்துல” கடிந்து கொண்டே வந்த அக்காளை, பட்டாசு வெடிப்பது போல் கிட்டத்தில் காட்டி காட்டி பயமுறுத்தி விளையாட்டுக் காட்ட, சின்னவனின் விளையாட்டில் பெரியவள் ஒவ்வொரு முறையும் மிரண்டு, அவனுக்கு கேலி சிரிப்பை வரவழைத்தாள்.

“அக்கா இது சும்மா ஊசி பட்டாசு இதுக்கு போயி இப்டி பயப்படற, சீதா அக்காவே நேத்து இத்த கையாள வெடிச்சிது தெரியுமா. ஆனா நீதான் பட்டாசுனு பேர் சொன்னாலே பயந்து பயந்து போற” பொடியன் அவளை கிண்டலடித்து கெக்க பெக்கேவென சிரிக்க, கோதையின் முகம் சுருங்கியது.

“ரொம்ப பேசாதடா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும், குஞ்சாமணி வலிக்குதுனு எப்டி அழுது பொரண்ட. வலி போனதும் என்னையவே கிண்டல் பண்றியா” பொய் கோபத்துடன் அம்பகம் உருட்ட, பொடிப்பயல் விழுந்து விழுந்து சிரித்தது.

“அக்கா நான் பட்டாசு வெடிக்க கத்து தரேன், வா வெடி” மது அவள் கரத்திற்கு வத்தியை நீட்ட, “ஐயோ நான் மாட்டேன் டா” மிரண்டு இருக் கைகள் குவித்து நெஞ்சை பற்றிக்கொள்ள, பொடிசு விடுவதாய் இல்லை.

“பயப்படாம வாக்கா, நாந்தா கூடவே இருக்கேன்ல.. பொறவு எதுக்கு இம்புட்டு பயம்” பெரிய மனுசன் அக்காளுக்கு தைரியம் சொல்லி, வத்தியை கையில் திணிக்க, சின்னதில் இருந்து கம்பி மத்தாப்பு சுத்தவே அலறியடித்து ஓடும் கோதை, சின்ன தம்பியின் அதட்டலில் செய்வதறியாது விழித்தாள்.

“அந்தா திரிய பிச்சி, கல்லு மேல வச்சிருக்கேன் பாரு. அதுல வத்திய வச்சா பத்திக்கும்” தெளிந்த விளக்கத்துடன் அவள் கரம் பற்றி பட்டாசை நெருங்க, பயத்தில் கண்ணை மூடி நடுங்கியபடி பொடியன் இழுப்புக்கு சென்ற கோதை, பட்டாசை மிக கிட்டத்தில் நெருங்கப் போவதை உணர்ந்ததும், “அடி ஆத்தாடி.. யாத்தே..” வெடுக்கென கரத்தை இழுத்துக்கொண்டு பத்தடிக்கு பதறி ஓடிய அக்காளை முறைத்தான் மது.

“நீ ஒரு டம்மி பீசுக்கா, போ நானே வெடிச்சிக்குறேன்” அவனுக்கே சலிப்பு தட்டி, தானாக வெடித்து விளையாடத் தொடங்கி விட்டான்.

மது கையில் இருந்த பட்டாசு தீரும் வரை அதிர்ந்து அதிர்ந்து பார்த்து ஓரமாக நின்றிருந்தவளை, கொதிக்கும் கோரவிழிகளால் அங்கங்களை கூர்த்தீட்டி பொசுக்கிக் கொண்டிருந்தான் ஆனந்தபாலன்.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!