Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 9

வதைக்கும் அகிம்சையே! – 9

by Indhu

அத்தியாயம் – 9

அனல் காய்ச்சல் அடிப்பதை கூட உணராத நிலையில், வாடி வதங்கி பரிதாபமாக படுத்திருந்த மனைவியை கண்டு இந்நேரம் ஆண் நெஞ்சம் துடித்திருக்க வேண்டுமா?

ஆனால் இவன் தான் கல்நெஞ்சனாச்சே! கண்கள் சுருக்கி சிறிது நேரம் அவளையே பார்த்திருந்த தேவன், வேகமாக அவள் தோளைப் பற்றி உளுக்கினான்.

இமைகளுக்குள் நீராவி கொதித்து ஆவி பறப்பதை போன்ற கனத்துடன், கண்களை திறக்க முடியாமல் கடினப்பட்டு திறந்த நாயகி, உக்கிரமாக நின்ற தேவனைக் கண்டதும் அடித்துப் பதறி எழுந்தமர கூட உடலில் சக்தி இல்லை.

“எ.எப்போ வந்தீங்க” முடிந்து மட்டும் வேகமாக எழ முயற்சித்த நாயகியின் நளிந்து ஒலித்த குரலில் என்ன உணர்ந்தானோ!

“காய்ச்சல்னா போன் போட்டு சொல்ல தெரியாது..” சீற்றத்தில் பற்களை கடித்தவனை நடுக்கமாக கண்ட நாயகி, “காய்ச்சலா..” உதடுகள் முணுமுணுத்து, தன் கழுத்திலும் நெற்றியிலும் அவசரமாக தானே கை வைத்து சோதித்துப் பார்த்தவளுக்கு, அவள் மீதிருந்து வீசிய தழலை அப்போதே உணர்ந்தவள், கணவன் முகம் பாராது தலை தாழ்த்திக்கொண்டாள்.

“ஒடம்பு அலுப்பா இருந்துச்சேன்னு கொஞ்ச நேரம் படுத்து கண்ண மூடினேன் அம்புட்டுதே தெரியும். காய்ச்சல்னு தெரியலைங்க” சட்டென துளிர்த்த கண்ணீருடன் தலை நிமிராது சொன்ன நாயகி, அறையை விட்டு வெளியேறப் போக,

“ஏய் இந்தா டி.. சோத்தையோ கஞ்சியையோ முழுங்கிட்டு இத்த போட்டுக்கோ, காய்ச்சல் போய்டும். ராத்திரிக்கு சாப்ட்டு முடிக்கிறதுக்குள்ள காய்ச்சல குறைச்சிட்டு வா” கடுமையாக மொழிந்த தேவன், தனக்காக வைத்திருந்த பாராசிட்டமால் மாத்திரை ஒன்றினை எடுத்து அவள் கையில் திணித்து, “எல்லாம்  என் தலையெழுத்து.. வக்கத்தவளுக்கு என்னென்ன சேவையெல்லாம் செய்ய வேண்டி கெடக்கு” அவள் செவி படவே கடுகடுத்து சட்டையை கழட்டி ஆங்கரில் மாட்ட, நெஞ்சி விம்மியது அவன் சொல்லில்.

காய்ச்சல் கண்ட உடல் தளர்ந்து போக, தன் வேதனையை விழுங்கிக்கொண்டு, உணவை விழுங்க முடியாமல் தவித்த நாயகி, தேவனின் சொல்லை மீற முடியாத கட்டாயத்தில் இரண்டு கைப்பிடி சாதத்தில் தண்ணீர் ஊற்றி பிசைந்து உண்டு, மாத்திரையையும் விழுங்கியவள், ஏற்கனவே கோதை செய்து வைத்திருந்ததில் இருந்து, தட்டில் நான்கு இட்லியை வைத்து எடுத்துக்கொண்டு மெதுவாக அமுதாவின் அறைக்கு வந்தாள்.

** ** **

இங்கோ, பெண்ணவளை வதைக்க வதைக்க இதழ் முத்தத்தில் திளைத்து, அவள் பூதேகம் முழுக்க பஞ்சாக அழுத்தி இம்சித்த முரட்டுபாலனை, விலக்க முடியாமல் தவித்து போன கோதையின் கண்களில் சுரந்த உவர் நீர், கன்னம் கன்னமாக வழிந்து அதுவும் அவன் அதரமே புசித்து மேலும் அவள் இதழை இச்சிக்க, ஆனந்தின் மடியில் உயிரை வெறுத்து சோர்ந்து கிடந்தாள் பூம்பாவை.

அதிலும் அவன் வாயில் இருந்து வரும் மதுவின் நாற்றம் குடலை பிரட்டி, மூச்சடைக்கும் நிலையில் கருவிழிகள் மேல் நோக்கி படபடக்க, எண்ணையால் மினுமினுத்த அவனது தோள்ப்பட்டை, கழுத்து, முகம் என்று பாராமல், தன் அளவான நகங்கள் கொண்டு கீறி அடிக்கத் தொடங்கியதும், காட்டானுக்கு அப்போதும் உறைக்காமல், அவள் இடை எலும்பை நொறுக்கியப் பின்னே பூவுட்டை மட்டும் விட்டான்.

இதழை விட்டதும் அவன் நெருக்கத்தில் இருந்து விடுபட திமிறியவளின் இரு கரங்களையும் அடக்கிப் பிடித்தவன் அழுத்தத்தில், தேக நடுக்கத்துடன் ஏறிட்ட கோதையின் வீங்கி சிவந்த முகத்தினை உக்கிரப் பார்வையால் தாக்கினான்.

“எம்புட்டு தகிரியம் டி ஒனக்கு எம்மேல கை வச்சி அடிக்கிற அளவுக்கு. இந்த ஒத்த முத்தத்துக்காக தானே இம்புட்டு அலம்பலும்” கடுமையாக பற்களை கடித்தவன், அவள் இன்னதென உணரும்முன் மெத்தையில் சரித்து, தொடைக்கு மேல் கீழாடையை தூக்கி இருக்க, அச்சத்தில் உடல் அதிர்ந்து இதயம் உறைந்து போனது அவனது செயலில்.

“கேக்க நாதி இல்லைனு ஒரு பொண்ணோட உணர்வுகளை துச்சமாக்கி, இக்கட்டான நிலைல நிறுத்தி, என் உடம்பை வதைக்கிறதா நினைச்சி, என் மனசை கொடூரமா கொன்னு, இப்டி மோசமா நடந்துக்குற உங்களுக்கு, என்னைக்காவது ஒருநாள் நிச்சயமா அந்த கடவுள் கொடுமையான தண்டனைய குடுப்பான்.

அன்னைக்கு நீங்க என்ன மன்னிப்பு வேண்டி கண்ணீர் விட்டு கதறினாலும், யார் வந்து ஆறுதல் சொன்னாலும், அந்த மோசமான தண்டனைல இருந்து வெளியவர முடியாம துடிச்சி போவீங்க. இது இந்த அபலையோட சத்தியம்” தன் பூக்காட்டில் புதைந்து வன்மையாக தேனை உறிஞ்சும் வஞ்சகனை தடுக்க நாதியற்ற நிலையில், பொங்கி வழிந்த கண்ணீரோடு தேகம் நடுங்கினாலும் திடமாக சொன்னவளை, தலை நிமிர்ந்து கேலியாக பார்த்தான்

“எப்டி எப்டி எனக்கு கடவுள் தண்டன குடுத்து நான் கண்ணீர் விட்டு கதறுவேனா.. அதுவும் மோசமான தண்டன.. ஏன்டி மூடா இருக்க நேரத்துல இப்டி தமாசு பண்ணிட்டு இருக்க.

அதுவும் நீ என்ன பத்தினியா! எனக்கு சாபம் குடுக்க. இதுல சத்தியம் வேற. ஏதோ நல்ல குணத்துல இருக்குறதால இம்புட்டு நேரமும் அடி வாங்காம தப்பிச்சிட்டு இருந்த, இனிமே மூச்சி காத்து வெளிய வந்துது அப்டியே நசுக்கி, மொத்தமா மூச்ச நிறுத்திப்புடுவேன் பாத்துக்க.

இவ பெரிய உலக அழகி, இவ ஒடம்ப பாத்து மயங்கி கெடக்க. ஒன்னைய விட அழகிய எல்லாம் எம்புட்டோ பாத்தாச்சி டி.

நீ என்ன எனக்கு சாபம் குடுக்குறது, எங்கிட்ட நீ குடுத்த பணம் எப்டி என் கைக்கு வந்து சேந்துச்சின்னு கண்டு புடிச்ச பொறவுதே ஒனக்கு இருக்கு கச்சேரி. ச்சீ.. பே..”

உக்கிரமாக அவளை உதறித் தள்ளிவிட்டு எழுந்தவன், இடுப்பில் கட்டி இருந்த வேட்டியை உருவி தரையில் வீசிவிட்டு, இரும்பு தொடை அதிர மொட்டைக்கட்டையாக குளியலறைக்கு சென்றவனை கண்ணீர் மல்க பார்த்த கோதையின் இதயம், அதீத அச்சத்தில் துடிக்க மறந்தது. ஆனந்தபாலனின் கடைசி வார்த்தைகளை எண்ணி.

நாயகி, அமுதாவின் அறைக்குள் சென்ற அதே நேரம், கோதையும் தனது மனவேதனையை அடக்கிக்கொண்டு அவ்வீட்டை விட்டு வெளிவந்து இருந்தாள்.

இருளில் ஒத்தையாக நடந்தாலே தெருநாய்களின் மீது பயம் கொண்டு, மருண்ட விழிகளை சுழட்டி அங்குமிங்கும் பார்த்து செல்லும் பேதை, ஆனந்தனின் மிரட்டலில் நாயாவது பேயாவது அதை அனைத்தையும் விட அவன்தான் மிகப்பெரிய கொடிய மிருகம் என்று உணர்ந்தாள் போலும்.

கண்ணீர் மட்டும் நிற்காமல் கன்னம் தீண்ட வேகமாக வீட்டை நோக்கி நடந்த கோதை, வீட்டின் அருகில் வந்ததும் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

“வாம்மா கோத.. என்னாச்சி இன்னைக்கு இம்புட்டு தாமதமா வந்திருக்க!” அவளை வரவேற்ற செல்வி, மணி எட்டை கடந்திருக்கவே, கோதையை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

“அ.. அது ம்மா, நாயகி அக்காக்கு கொஞ்சம் ஒடம்புக்கு முடியல. அதே அவையல ஓய்வு எடுக்க சொல்லிட்டு, இருந்த வேலையெல்லாம் முடிச்சிட்டு வர தாமதமாகி போச்சி” அவள் அன்னைக்கு சந்தேகம் தோன்றாதவாரு, வந்ததும் மாவை எடுத்து தோசை ஊற்றியபடியே சமாளித்தவளுக்கு, குற்றவுணர்ச்சியில் அவளையே அருவருத்துப் போனாள்.

“அச்சச்சோ.. நாயகிக்கு என்னாச்சிம்மா.. தலைவலினா கூட கொஞ்ச நேரம் கீழ படுக்காதே.. எப்பவும் புருசனை கவனிக்கணும். மாமனார் ஒடம்ப பாக்கணும். கொழுந்தன் கேக்குறத செஞ்சி போடணும்னு எல்லாருக்கும் பாத்து பாத்து செய்வா. ஆனா அத்த கவனிக்க அங்க யாருக்கும் அக்கறை இல்ல. பாவம் தனியா என்ன அவதி படுதோ” அவளோடு சில வருட காலமாக பழகிய செல்விக்கு, நாயகியை எண்ணி கவலையாகி போனது.

“அமுதா இருக்கால்ல ம்மா, அவ அவைல பாத்துப்பா. நீ எதையும் நெனச்சி கவலபடாம சாப்ட்டு படும்மா..” அன்னைக்கு சமாதானம் சொல்லி, தோசையை கொடுத்தவள், தம்பி தங்கைக்கும் உணவு கொடுத்து அவர்களை உறங்க வைத்துவிட்டு இவள் படுப்பதற்குள் மனதளவில் பெரும்பாடு பட்டுவிட்டாள்.

இத்தனை கொடுமைகளை அனுசரித்து நிச்சயம் அங்கு தான் இனி வேலைக்கு செல்ல வேண்டுமா? அந்த அரக்கனின் முகத்தில் மீண்டும் முழிக்க வேண்டுமா? என்ற வேதனையில் உழன்ற கோதை, இந்த வேலையை விட்டுவிட்டால் தன் குடும்பத்தின் நிலை என்ன? முக்கியமாக தன் அன்னைக்கு என்ன பதில் சொல்வது? என்ற எண்ணங்களும் அவள் மனதை அரிக்க, இதற்கு தீர்வு தேடும் வழி அறியாமல், இரவெல்லாம் தூங்கா இரவாக கழித்த பேதையின் கண்களில் மட்டும், உப்பு நீர் கோர்த்த வன்னமே இருந்தது.

** ** **

“அமுதா” என்று மெல்லிய குரலில் அழைத்தபடி கதவை திறந்த அண்ணியை, சிரித்த முகமாக பார்த்தவளின் கண்கள் சட்டென சுருங்கியது.

“அண்ணி என்னாச்சி பாக்கவே டல்லா தெரியிறீய. ஒடம்பு எதுவும் சரி இல்லையா..” அவசரமாக ஓடி வந்த அமுதா, அவளை தொட்டு பரிசோதிக்க, அவள் உடலில் உள்ள வெப்பமே அது காய்ச்சல் தான் என தெளிவாக உணர வைத்தது.

“அச்சோ அண்ணி காய்ச்சல் அடிக்கிது போல. எப்பத்துல இருந்து இம்புட்டு காய்ச்சல் வந்துச்சி, மதியம் எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்த போது கூட நல்லா தானே இருந்தீங்க” பதட்டத்தில் கலங்கிய அமுதா, நாயகியை அமர வைத்தாள்.

“திடீர்னு வந்த காய்ச்சல் அமுதா, நீ பயப்படாதே, உன் பெரியண்ண இப்பதே மருந்து கொடுத்தாக. ராத்திரி தூங்கி எந்திரிச்சா சரியாகிடும்” அவளுக்கு ஆறுதல் சொன்னபடியே இட்லியை பிட்டு வாயருகே நீட்ட,

“நானே சாப்பிடுறேன் அண்ணி, நீங்க இங்கேயே படுத்து ஓய்வு எடுங்க. கீழ போனா யாரும் உங்க ஒடம்பை பத்தி கவலை படாம செக்குமாடு மாதிரி வேலை வாங்கதா பாப்பாங்க. நானும் ஊருக்கு வந்த அசதில இன்னைக்கெல்லாம் நல்லா படுத்து தூங்கிட்டேன். இல்லைனா அப்பவே உங்கள வந்து பாத்திருப்பேன் அண்ணி.

இப்பதா நான் வந்துட்டேன்ல, அப்பாவும் அண்ணனுங்களும் சாப்பிட வந்தா நானே பரிமாறி அவங்கள அனுப்பி வைக்கிறேன்” என்ற அமுதா, நாயகியின் பதிலை எதிர்பார்க்காமல் வேகவேகமாக உண்டு முடித்து கீழே வந்துவிட்டாள்.

முதலில் உண்ண அமர்ந்த கண்ணாயிதம், நீண்ட நாட்களுக்கு பிறகு மகளை பார்த்தும் எந்த சலனமும் இல்லாமல், “சப்பாத்திய வையி” அதட்டலாக சொல்லிட, “சரி ப்பா..” என்றவாறு அவசரமாக அவர் தட்டை நிரப்பும் போதே, தேவனும் வந்து விட்டான்.

“அண்ணா உங்களுக்கு தோசை வைக்கவா?” கேள்வியாக அவன் முகம் பார்க்க,

“அவ எங்கே?” யார் அவன் அருகில் இருந்தாலும் தேவனின் தேடல் மொத்தமும் அவள் ஒருத்தியாகவே இருந்தது.

“அண்ணிக்கு உடம்புக்கு முடியலண்ணா, அதுனால என் ரூம்ல படுத்து ஓய்வு எடுக்க சொல்லிட்டு வந்தேன்” என்றபடி அவன் தட்டில் தோசையை வைக்க, வைத்த வேகத்தில் தோசையோடு தட்டை நகர்த்திவிட்டு எழுந்து கொண்டவனை அச்சத்துடன் நோக்கினாள் அமுதா.

“ஒடம்புக்கு முடியிதோ இல்லையோ, புருசன் உக்காந்து சாப்பிடற நேரத்துல அவனை கவனிச்சிக்க அவளுக்கு தெரியாது..” கடுமையாக கடுகடுக்க, நாயகியின் நிலையை எண்ணி கவலையில் ஆழ்ந்தாள் அமுதா.

“அண்ணா இன்னைக்கு ஒருநாள் மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடுங்களேன். நாளைல இருந்து அண்ணியே வந்துடுவாங்க” மெதுவாக சொல்லி அவனுக்கு புரிய வைக்க முயற்சிக்க, அவன் மனைவி முகம் பாராது உடலில் உள்ள ஒரு அணுவும் அசையாத அவனது உணர்வுகளை எப்படி விளங்க வைப்பது. முதலில் அவனே அதனை முழுதாக அறியத் தவறிப் போனானே!

“ஒரு மண்ணும் வேணா, நீயே கொட்டிக்கினு ஒழுங்கா அவளை அறைக்கு அனுப்பிவிடு. அப்புறம் இருக்கு அவளுக்கு” சிடுசிடுத்து விட்டு சென்ற தமையனை கலங்கிய விழிகளுடன் பின் தொடர்ந்தாள்.

“என் புள்ளைய சாப்பிட விடாம துரத்தி விடசொல்லி, அந்த ஊமைகுசும்பி சொல்லிக் குடுத்து அனுப்பினாளா.. அவளையே வந்து என் புள்ளைய சமாதானம் செஞ்சி வயித்த நிரப்ப சொல்லு” அவனுக்கு மேல் எரிச்சல்ப்பட்ட கண்ணாயிதம், வார்த்தைக்கு கூட நாயகியின் உடல் நலத்தைப்பற்றி அக்கறை பேசவில்லை.

“மச்.. இன்னும் அங்கன என்ன வேடிக்க. சப்பாத்திக்கு குருமா பாத்தலை பாரு ஊத்து. ஒவ்வொன்னையும் சொல்லி சொல்லி தரணுமா..!

வீட்டுக்கு வாழ வந்ததுதே ஒரு புள்ளைய பெத்து போட கூட துப்பில்லாதவளா இருக்கான்னா, நான் பெத்தது சரியான தண்டமா வளந்து நிக்குது” நாயகியை மட்டுமின்றி அமுதாவையும் கரித்து கொட்டியப்படியே கை கழுவிவிட்டு எழுந்து செல்ல, இவ்வீட்டின் ஆண்களின் நாய் குணத்தை எண்ணி சோர்ந்து போனாள் அமுதா.

ஆனந்தன், கோதையிடம் வரம்பு மீறி வம்பு செய்தே வயிற்றை நிரப்பிக்கொண்டவன், அந்நேரத்தில் தயாராகி தோட்டத்து வீட்டிற்கு செல்லவிருக்க,

“அண்ணா சாப்பிடலையா” சற்றே பயந்த குரலால் கேட்ட தங்கையை பார்த்த பார்வையில் சற்றும் கனிவில்லை.

“அறிவில்ல ஒனக்கு, வெளிய பொறப்படும் போதுதே நிறுத்தி கேப்பியா. வெளிய போறவன் திங்காமையா போவான்” இவனும் அவர்களுக்கு மேல் கத்திவிட்டு செல்ல, நீண்ட நாட்களுக்கு பிறகு மூவரின் மூர்ககுணத்தையும் அடுத்தடுத்து கண்டு மலைத்து போனது அந்த சின்னகுட்டி.

“என் அண்ணி என்ன பாவம் பண்ணாங்களோ இப்டி ஒரு கொடுமைகள அனுபவிக்க. நானாவது இன்னைக்கு இல்லைனாலும் என்னைக்காவது ஒருநாள் இந்த வீட்டை விட்டு என் புகுந்த வீட்டுக்கு போய்டுவேன். ஆனா அண்ணி காலத்துக்கும் இவங்க அடிமையாவே இங்க சிறை இருக்கணும்.

கடவுளே நீதா என் அண்ணிக்கு எந்த ஒரு நிலையிலயும் உறுதுணையா அவங்க கூடவே இருக்கணும்” கடவுளிடம் வேண்டிக்கொண்டு நாயகியை எழுப்பி அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தவளுக்கு, தேவனை நினைத்து தூக்கம் தூர விலகியது.

அத்தனை சோர்விலும் கணவன் உண்ணவில்லை என்றதும், அவனுக்கான உணவை எடுத்துக்கொண்டு, பதட்டமாக உள்ளே வந்த மனைவியை சினத்துடன் பார்த்த தேவனின் பார்வையில், சர்வமும் அடங்கியது மங்கைக்கு.

“வேணும்னு செய்யலைங்க, ஒடம்பு சோர்வா இருக்கவே அமுதாவ அனுப்பிவிட்டேன். இனிமே நானே வந்திடறேங்க, தயவுசெய்து வெறுவயித்தோட இருக்காமா இத சாப்பிடுங்க” கெஞ்சலாக மொழிந்து தட்டோடு அவனிடம் நெருங்கிய மனைவியை பார்த்த பின்புதான், உண்மையாவே அவன் வயிறு நிறைந்தது என்ற விடயம், பாவம் பாவைமயிலுக்கு தெரியாதே!

“எனக்கு வயிறு சரி இல்ல. இப்ப உண்டா முடியாம போவும். போய் தட்ட வச்சிட்டு வந்து படு” கட்டளையிட்டு முதுகுகாட்டி படுத்தவனுக்கு பசி எடுக்குமா! அவளது வாடிய முகம் கண்டு.

நாயகி தெளிந்த நீரோடையாக இருந்தால் தான் நாயகனின் கண்களுக்கு குளிர்ச்சி.

அவளே கலங்கிய குட்டையாக தேங்கி நின்றால், மாயவனின் கல்நெஞ்சமும் கலங்கி தவிக்கும் என்பது அவன் சரிபாதியே இதுநாள் வரை உணர்ந்திடாத, நேசத்தின் உச்சம்.

தொடரும்.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!