அத்தியாயம் – 6
மஞ்சள் வண்ண பருத்திப்பட்டில், ஈரத் துண்டினை தலையில் சுற்றியபடி புதுப் பெண்ணை போல அறையில் இருந்து வெளியே வந்த வேதநாயகியை கண்ட கோதை, மௌனமாக தனக்குள் சிரித்துக்கொண்டதை கண்டு சங்கடமாகிப் போனது.
“என்னக்கா டீ குடுக்க போனவக, டீயிலே குளிச்சிட்டு வந்துடீய போலையே” நமட்டு சிரிப்புடன் கிண்டலடித்த கோதை, கழுவுத்தொட்டியில் கிடந்த பாத்திரங்களை தேய்க்க, நாயகி தான் பெரிதாக திணறி நின்றாள்.
“கோத அது.. ஆ.. சாம்பாரை அடுப்புல போட்டு போனேனே நிறுத்திட்டியா?” கோதையின் முகம் பாராமல் அடுப்பை எட்டி பார்த்து நோட்டம் விட,
“அதெல்லாம் அப்பவே நிறுத்தியாச்சு க்கா.. ஒருமணி நேரமா அடுப்புல இருந்திருந்தா இந்நேரம் சாம்பாரு கருகி இருக்குமே!” மீண்டும் அவள் நமட்டு சிரிப்பு சிரிக்க, திருமணமான வயது பெண்ணை போல அப்படி ஒரு செம்மை, நாயகியின் முகத்தில் படர்ந்தது.
“அட போ கோத, சும்மா ஏதாவது சொல்லி கேலி பேசிகிட்டு” சங்கோஜமாக அவளை தவிர்த்துவிட்டு மாமனாருக்கு சப்பாத்தியை வைக்க, தேவனும் அவரோடு அமரவும், கூச்சத்தில் கணவன் முகம் பாராமல் அவனுக்கும் இட்லியை வைத்தாள்.
“இது என்ன, மாட்டுக்கு தீவனம் வைக்கிற மாறி, வறவறன்னு இருக்க சப்பாத்திய எனக்கு வச்சே சாவடிக்கிற” தண்டாயுதபாணியின் சுடு வார்த்தையில் கையில் வைத்திருந்த பாத்திரம் ஆடியது.
“இல்லைங்க மாமா உங்களுக்கு எண்ணெய் சேக்காத சாப்பாடுதே குடுக்கணும். ஏற்கனவே ரத்த அழுத்தம் இருக்கு எண்ணெய் சேத்தா உடம்புக்கு நல்லது இல்லைனு டாக்டர் சொன்னதா, இவையதே எங்கிட்ட சொன்னாக”
நாயகி அவனை கை காட்டியதும், இருபது இட்லியை சாம்பாரில் பிசைந்து, பொடியில் உருட்டி மும்புரமாக வாயில் அதக்கியபடியே நிமிர்ந்த தேவன், மனைவியை ஒரு பார்வை பார்த்தவனாக, “போன முறை நெஞ்சி வலின்னு ஆஸ்பத்திரில இருந்தீயலே நியாபகம் இருக்கா..! இஷ்டத்துக்கும் சாப்பாட்டுல எண்ணெய சேர்த்திக்கிட்டதால வந்த வெனை. கொஞ்சம் சாப்பாடு விசயத்துல கண்ட்ரோலா இருங்கப்பா.. நாயகி சரியாதே செய்றா. அவ எப்டி சாப்பாடு குடுக்குறாளோ அதன்படியே சாப்பிடுங்க”
காரர் குரலில் சொல்லி, அவர் வாயை அடக்கிவிட்டு மீண்டும் இட்லியை விழுங்க, இன்ப சாரல் அவள் இதயத்தில் வீசியது.
அப்பப்பா.. என்ன ஒரு அதிசயம். தன் கணவன் தனக்கு ஆதரவாக பேசுவது எல்லாம் மிகமிக அரிதான விசயமாயிற்றே! அவ்வப்போது இதுபோன்ற சிறிய ஆனந்தத்தை அவளுக்கு தர மறுத்ததில்லை அவன்.
அதே சந்தோசத்துடன், மேலும் இரண்டு மூன்று இட்லிகளை அவன் தட்டில் வைத்தாள். வளவி குலுங்கும் மங்களகரமான மென்கரம் இட்லிக்கு போட்டியாக வைக்க வைக்க, அவள் பௌர்ணமி வதனத்தை பார்வையால் விழுங்கியபடியே இட்லியை உண்டான் தேவன்.
முதலில் உண்டு முடித்த தேவன், ஊராட்சி மன்ற அலுவலுக்கு கிளம்பி இருந்தான். மக்களுக்காக ஓடி ஓடி உழைத்து பல நன்மைகளை செய்தவன், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஊராட்சி மன்ற தலைவனாகி, சிறப்பாக தனது பணியை செய்து வருகிறான்.
எந்த ஒரு களத்திலும் போட்டியும் பொறாமையும் இல்லாமல் போனால் தான் ஆச்சிரியம். தேவனுக்கும் அப்படி பல எதிரிகள் உண்டு. தொடர்ந்து அவன் பதவியில் இருப்பதை பார்க்க பார்க்க எதிர்கூட்டணிகள் பயங்கர வெறியில் இருக்க, இவன் அது எதையும் கண்டுகொள்ளாமல் தூசி போல் தட்டிவிட்டு செல்கிறான்.
அவனை தொடர்ந்து தண்டாதபாணியும் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு விரைந்திட, அதன்பிறகு ஆடி அசைந்து உள்ளே வந்தான் ஆனந்தபாலன்.
“தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்..
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி..
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது
சாமி.. சாமி.. சாமி..
சாரயத்தை ஊத்து..
ஜன்னலைத்தான் சாத்து..
சாரயத்தை ஊத்து..
ஜன்னலைத்தான் சாத்து..” வரும் போதே புட்டியை கையில் பிடித்துக்கொண்டு துள்ளளாக பாடலை பாடியபடி உண்ண அமர்ந்தான். தினமும் நடக்கும் அக்கப்போர் தானே என்று நாயகி இயல்பாக இருந்தாலும், அவன் செயல் உள்ளூர வருத்தத்தையே தந்தது.
சுட சுட தோசை வார்த்து தட்டில் அடுக்கிய நாயகி, “உங்கள மாமா பாக்கணும்னு சொன்னாக அத்தான். பஞ்சாயத்து கூடத்துக்கு போறீயலா” என்றவளை போதை ஏறிய சிவந்த கண்களால் நிமிந்து பார்த்தான் ஆனந்த்.
“எதுக்கு வர சொன்னாரு, ஓங்கிட்ட சொல்லையா?” நைசாக இருந்த முழு தோசையை, நல்ல செவசெவன்னு இருந்த காரமான சட்னியில் முக்கி எடுத்து வாயில் அதக்கிக்கொள்ள, திருத்திருவென முழித்தாள் அவள்.
“உனக்கு பெண் பார்த்து தேர்ந்தெடுக்க தான்” என்ற உண்மையை சொன்னால், தோசை தட்டு எட்டு ஊரை தாண்டி பறக்கும். சொல்லவில்லை என்றால் பார்வையாலே ஊசி போல் துளைப்பான் இப்போது என்ன செய்வது என்ற யோசனையில் கையை பிசைந்தவளை புருவம் இடுங்க பார்த்தான்.
“குடிச்சிருக்க நானே சும்மா கின்னுனு ஸ்டடியா இருக்கேன், உன் கையி எதுக்கு இந்த ஆட்டம் ஆடுது. என்ன நீயும் குடிச்சிருக்கியா..?” நக்கலாக கேட்டிட, பதட்டத்தில் “ம்..” என்றவள் “ம்ஹும்..” என வேகமாக தலையாட்டிட, ஆனந்தின் உதட்டில் புன்னகை மலர்ந்தது.
“ம்.. சொல்றியா இல்ல ம்ஹும் சொல்றியா” அப்படி அவன் கேட்டதும் பதறியவள்,
“ஐயோ அத்தான் அப்டிலாம் எதுவும் இல்ல. மாமா என்ன விசயத்துக்கு கூப்டாகன்னு தெரியல. நீய வந்தா நியாபகமா பாக்க சொல்லுன்னு சொன்னாக அம்புட்டே. வேற எதுவும் எங்கிட்ட சொல்லல” பதட்டமாக ஒரே மூச்சில் சொல்லிட, போகிறேன் போகமாட்டேன் எதுவும் சொல்லாமல் அடுத்தடுத்த தோசைகளை மென்று விழுங்குவதில் குறியாக இருந்தான் ஆனந்தபாலன்.
வெளியே எப்படியோ! வீட்டில் அண்ணன் மனைவி நாயகியை மதிப்போடு தான் பார்த்து வருகிறான். வயதில் சிறியவள் என்றாலும் பெரிய அளவில் மரியாதை அவள் மீது உள்ளது. ஆனால் என்ன வெளியில் தான் காட்டத்தெரியாது. காட்டவும் கூடாது. மீறி காட்டினால் பெண்களின் அதிகாரம் தலைத்தூக்கி, ஆண்கள் அவர்களுக்கு அடிமையாகி விடுவோம் என்பது கண்ணாய்தபாணியின் வழிகாட்டல்.
அடிக்கடி அவளை இப்படி சீண்டிப் பார்த்து பயம்கொள்ள வைப்பது ஜாலியான பொழுதுபோக்கு.
அனைவரும் உண்டு முடித்த பாத்திரங்களை கழுவுதொட்டியில் போட்ட நாயகி, காய்ந்த துணிகளை எடுத்துக்கொண்டு அவள் அறைக்கு சென்றாள். அதனை கையோடு மடித்து வைக்க.
நாயகி சென்று சிறிது நேரம் கழித்து குளிப்பதற்காக அறைக்கு செல்ல எத்தனித்த ஆனந்தபாலனின் போதை ஏறிய கண்கள் ஓரிடத்தில் மையலிட்டது. கொல்லை கதவு திறந்திருக்க, வெளியே மாட்டு தொழுவத்தை பெருக்கி சுத்தம் செய்துகொண்டிருந்த கோதையை பார்த்தான்.
சற்றே பூசிய தேகம் கொண்டவளின் சதைப்பற்றான இடையில் நிற்காமல் சுருட்டிக் கிடந்த புடவையில், வியர்வை மொட்டுகள் அரும்ப, முட்டிக்கு மேல் தூக்கி சொருகிய கொசுவத்தில் கெண்டைக்கால் பளிச்சென்று தெரிய, கவர்ச்சி சிற்பம் போல் இருந்தவளின் தேக அமைப்பு ஒவ்வொன்றையும் அங்குலம் விடாது அளந்தபடி, அடிமேல் அடிவைத்து சத்தமில்லாது சென்றவன், அவள் பின்னோடு இறுகி அணைத்த வேகத்தில் கத்தாமல் இருக்க, அவள் வாயையும் பொத்தி இருந்தான்.
என்ன நடந்தது என யூகிக்க முடியாத அதிர்ச்சியில், கருவிழிகள் இரண்டும் உருல, அப்பட்டமான பயத்துடன் ஆனந்தின் இறுகிய பிடியில் திமிரிக் கொண்டிருந்த கோதைக்கு மற்றொரு பேரதிர்ச்சி, அவன் குரல் கேட்டு ஆனந்தபாலன் என்று தெரிய வந்ததும்.
“ஏய் சும்மா திமிராத டி. அமைதியா நில்லு” காதுக்குள் கேட்ட கடுங்குரலில் சட்டென இதயம் நின்று துடித்தது. இரும்பு பிடியில் இருந்து வெளிவர முடியாத நிலையில் அப்பட்டமான தேக நடுக்கத்தில் இருந்த கோதை, நாயகி எங்கே என பரிதவிப்பாக தேட, அம்மணி உள்ளே பிஸி.
“என்ன டி கண்ண உருட்டி உருட்டி பாக்குற. நாயகி காப்பாத்த வருவான்னா!” கேலியாக கேட்டவன் கரம், தயிர்கட்டி போல் வெண்மையாக தளதளத்த வயிற்றில் பதிந்து கசக்கிப் பிடிக்க, மூச்சிமுட்டும் திகைப்பில் உறைந்து நின்றாள் கோதை.
“அப்டியே அவ வந்தாலும், என்னைய மீறி உன்னைய காப்பாத்திடுவாளா..” மிதப்பாக சிரித்த ஆனந்த், “சும்மா சொல்ல கூடாது டி, சோத்துக்கே வழி இல்லைனாலும் பாக்க நல்லா பளபளன்னுதே இருக்க. வெண்ணக்கட்டில கைய வச்ச மாறி எங்கே தொட்டாலும் சும்மா சர்ரு.. சர்ருன்னு வழுக்கிட்டு போவுதே! என்னத்த தின்னு டி இம்புட்டு பாலிசா இருக்க”
புட்டியின் போதை தெளிந்து குட்டியின் போதை ஏறியது அவனுக்கு. அதில் அவள் வாய் பொத்தி இருந்த கரமும் தளர்ந்திருப்பதை உணர்ந்து, அவசரமாக அவனிடமிருந்து விலக முயற்ச்சித்தவளின் சேலை தலைப்பு அவன் கையில் சிக்கி, ரகசிய பஞ்சணையை மூடிமறைத்த திரை விலகி, போதையானவன் கண்களுக்கு மேலும் போதை ஏற்றியது.
“ஐயோ கடவுளே” பதறி போய் கரங்கள் இரண்டையும் தன் நெஞ்சில் அணைக்கட்டி மறைத்து, அச்சத்துடன் நிமிர்ந்தவளின் கண்களில் திரையிட்டு மறைத்தது கண்ணீர்.
“அய்யடா.. இப்பதா மொத தரம் பாக்குறேன் பாரு பதறிட்டு மூடிக்க. எப்டி பாத்தாலும் பணத்துக்கு படுத்தவ தானே டி நீயி” வார்த்தையில் ஈட்டி வைத்து சுருக்கென அவள் இருதயத்தில் குத்த, கரையில் ஒதுங்கிய மீனை போல துடிதுடித்து போனது பெண் மனது.
“வாயிருக்கேன்னு அபாண்டமா பேசாதீங்க நாக்கு அழுகிடும். அன்னைக்கு என் இயலாமைய பயன்படுத்தி, என் கர்ப்பை கலங்கடிச்சி என்னைய நடைபிணமா மாத்தினது போதாதா.. உங்க பணத்தைதா வட்டியும் முதலுமா சேர்த்து மொத்தமா கொடுத்துட்டேனே! பொறவு எதுக்கு எங்கிட்ட கேவலமா நடந்துக்குறீய”
தக்காளி பழமாக சிவந்த முகம் கண்ணீரில் மூழ்கி, அவன் கையில் சுருட்டடி வைத்திருந்த சேலையை உருவ முயன்றவளின் கரத்தை அழுத்தமாக பற்றி இழுத்தவனை, நெஞ்சி துடிக்க கண்டாள்.
“என்னது நாக்கு அழுகுமா அதுசரி. பணத்துக்காக கர்ப்ப விக்கிற நீயெல்லாம் சொல்ற பாரு அதுதே தமாசா இருக்கு. இந்நேரம் ஆம்பள எவனாவது எங்கிட்ட இப்டி பேசி இருந்தா அடிச்சி வாயகீய எல்லாம் ஒடச்சி இருப்பேன். என்ன பண்றது நீ பொண்ணா போய்ட்டியே!..”
பெருமூச்சு விட்டவன், கோதை பேசியதற்கு தண்டனையாக, அவள் தேகக்கூட்டில் ஒளிந்திருக்கும் உணர்ச்சி வெள்ளம் பொங்கும் இடமெல்லாம், நூலாடை விளக்காமலேயே சுகம் கண்டு, அவள் துடிக்கத் துடிக்க அலசி ஆராய்ந்து விட்டான்.
கண்ணீரும் கம்பளையுமாக சேலையினை அள்ளி தேகத்தில் சுற்றியவளின் ரவிக்கை மொத்தமும் அவன் எச்சில்ப்பட்டு நனைந்திருக்க, தேகம் நடுநடுங்க நிலைகுலைந்த நிலையில் தேம்பி அழுதவளை திமிராக பார்த்தான்.
“பணத்த திருப்பிக் குடுத்துட்டா பத்தினியாகிட முடியாது டி.
பொண்ணா போனதாலதே இம்புட்டுக்காண்டி சின்ன சீண்டலோட முடிஞ்சுது. இனிமே எங்கிட்ட பாத்து பக்குவமா பேசி பழகு. மீறி ஏடாகூடம் பண்ண அதே எடத்துல குழி தோண்டி பொதச்சிப்புடுவேன்” நாக்கை மடித்துக் கடித்து கடுகடுத்தவன்,
“சரி சொல்லு. ஏதோ சீட்டு போட்ட பணம்னு காத்தால குடுத்தியே, எந்த எடத்துல யாராண்ட சீட்டு போட்டது? எப்ப எடுத்தது? முழு விபரத்தையும் சொல்லு” நெருங்கி நின்று அவளை உற்று நோக்க, திடுக்கிட்டு நிமிர்ந்தவளுக்கு பயத்தில் அள்ளு இல்லை.
“எ.எனக்கு அதைப்பத்தி எதுவும் தெரியாது” வார்த்தை திக்கியவளுக்கு, எங்கே நகையை விற்றது கண்டுபிடித்து விட்டானோ என்ற கலக்கத்தில், பயப்பந்து இஷ்டத்துக்கும் உருண்டது அவள் அடி வயிற்றில்.
“ஓ.. ஒனக்கே தெரியாதா. ஆனா எடுக்கும் போது மட்டும் தெரிஞ்சிருக்கு அப்டித்தானே!” கண்ணீர் பளபளக்கும் அவள் முகத்தினை சந்தேகமாக பார்த்தவனுக்கு, அவள் பேச்சை நம்பும்படியாக இல்லை என்பதே மெய்.
“இ.இல்ல.. எனக்கு எடுக்கும் போதும் தெரியாது. எதார்த்தமா அம்மாகிட்ட பேசும் போதுதே தெரிஞ்சிது, பணத்த எடுத்து வச்ச விசயம்” கோர்வையாக ஒரு பொய்யினை பேசி முடிக்க படாதபாடு பட்டவளின் இதயக்கூடு, படபப்பாக அடித்துக்கொண்டதை அவள் உணர்ந்தாளோ இல்லையோ! அவள் தேகம் உரசி நின்றிருந்த முரடன், நன்றாக உள் வாங்கிக்கொண்டான்.
“பணத்த குடுத்துட்டதா மிதப்புல திரியாத டிஇ.. ஏற்கனவே உன் ஒடம்புல ருசி பார்த்த அறுசுவையும் இன்னுமும் என் நாக்குல நடனம் ஆடுது. அப்பப்போ தேவைனா கூப்பிடுறேன் வந்து கம்பனி குடு. அதுக்கு ஈடா பணத்தை தூக்கிப் போடறேன் பொருக்கிக்கோ என்ன..” கண்ணீரில் பிசுபிசுத்த அவள் கன்னத்தை தட்டி, நக்கலாக சிரித்தபடி அவ்விடம் விட்டு சென்றவனை, ஜீவன் வெறுக்க கண்டாள், பூங்கோதை.
** ** **
“ஏப்பா தேவா.. அந்த எதிர் கூட்டணி சக்கரபாண்டியன் இருக்கானே, வர போற கவுன்சிலர் எலக்சன்ல எப்டியாவது ஜெயிச்சுடணும்னு ஊர்க்கார பொம்பளைளுக்கு எல்லாம் பொடவை, மூக்குத்தி, அரிசி பருப்பு, பித்தளை குத்துவிளக்குனு குடுத்து அசதிட்டு இருக்காய்யா.
இந்த மொற நீயி என்னபா செய்ய போற? ஒரு உப்பு பாக்கெட்டையும் சக்கர பாக்கெட்டையும் குடுத்துபுட்டு வெறுங்கைய தூக்கி கும்பிட்டா இந்த தரமும் ஜெயிச்சிடலாம்னு தப்பு கணக்கு போட்டுடாதய்யா?”
கவுன்சிலர் ஆலோசனை கூடத்தில் அமர்ந்திருந்த பெரியவர், நையாண்டியோடு கேள்வி எழுப்ப, நடு இருக்கையில் அமர்ந்திருந்த அமரதேவன் அமைதியாக பார்த்தான் அவரை.
“யோவ் பெருசு யாரப்பாத்து என்னய்யா கேக்குற. தேவா தம்பி கவுன்சிலர் பதவில இல்லாத நாளுல இருந்தே இந்த ஊருக்காக பல நல்லதை செஞ்சிருக்கு. தேவா தம்பிக்கு முன்னாடி கண்ணாய்தபாணி ஐயாவும் இந்த ஊருக்காக பல இன்னல்கள சந்திச்சி இருக்காரு.
தேவா தம்பி பதவிக்கு வந்த பொறவு, நடக்கக்கூட வழி இல்லாம சேரும் சகதியுமா பேருந்து வசதி இல்லாத இருந்த ஊருக்கு, சந்து பொந்து விடாம ரோடு போட்டு, பஸ் ஸ்டாண்டு அமைச்சு கொடுத்து, நாள் தவறாம நேராநேரத்துக்கு பஸ்ஸு வர ஏற்பாடு பண்ணி இருக்கு.
வீட்டுக்கு வீடு தண்ணி வசதி, வடிகால் வசதி, தெருவிளக்கு வசதினு ஊர்க்கார மக்களுக்கு அடிப்படையான தேவைகளை பூர்த்தி பண்ணதும் இல்லாம, யார் எந்த நேரத்துல உதவின்னு வந்து நின்னாலும், அவங்க குறைகள பொறுமையா கேட்டறிஞ்சி நிறைவா நிவர்த்தி பண்ணி அனுப்பும்.
அப்டிப்பட்ட தம்பிய பாத்து வெறுங்கைய தூக்கி கும்பிட்டா ஜெயிக்க மாட்டேன்னு சொல்ற” ஆரம்ப காலத்தில் இருந்தே தேவனை பற்றி நன்கு அறிந்த ராஜாகண்ணு ஆதங்கமாக பொங்கிட, அப்போதும் அந்த பெரியவர் அமைதியாகவில்லை.
“நீ பேசுறது எல்லாம் அந்த காலத்து நடைமுறை தம்பி. தங்களோட தேவையை தாண்டி பிரதிபலனை எதிர்பாக்காத மக்களும் தலைவர்களும் இருந்தாங்க. ஆனா இப்போ உள்ள மக்களுக்கு என்னதே பாத்து பாத்து நல்லது செஞ்சாலும், தேர்தலுக்கு முன்னாடி எந்த பக்கம் அதிகமா வருதோ அந்த பக்கம் மயங்கிப்புடுவாய்ங்க.
இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே புடிச்சிட்டு இருக்காம, சக்கரபாண்டியன மிஞ்சுற அளவுக்கு மக்களுக்கு தங்கம் வெள்ளினு அள்ளிக் குடுத்து ஆசையக்காட்டி, சீட்டு வாங்கி ஜெயிக்கிற வேலையப் பாருங்கப்பா” என்ற பெருசுக்கும் தேவாவே இந்த முறையும் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அதிகம் உள்ளது.
அமரதேவனுக்கு முன் கவுன்சிலராக இருந்த சக்கரபாண்டி, சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு நல்லதையும் ஊர் மக்களுக்காக செய்திருக்கவில்லை.
இம்முறை அவர் ஜெயித்து விட்டால், இப்போது சுபயோகமாக இருக்கும் ஊர், எப்படி மாறுமோ! என்ற எண்ணம் தேவனுக்கும் தோன்றாமல் இல்லை.
அதற்காக மக்களின் ஆசையை தூண்டி விட்டு ஜெயிக்க வேண்டுமா? என்ற கேள்வியும் ஒருசேர எழ, அழுத்தமாக அனைவரையும் பார்த்தவன், மக்களுக்கு முக்கிய தேவை என்னவோ! அதனை மட்டுமே மேம்படுத்த நினைத்தான்.
தொடரும்.