Home வதைக்கும் அகிம்சையே!வதைக்கும் அகிம்சையே! – 5

வதைக்கும் அகிம்சையே! – 5

by Indhu

அத்தியாயம் – 5

கதிரவனின் கதிரொளிகள் மெல்ல மெல்ல பூமியைத் தழுவி, அனைத்து உயிரிங்களையும் தட்டி எழுப்பும் இதமான காலை பொழுது.

காலை உணவு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக சமைக்கும் வேலையில் மும்பரமாக இருந்தாள் வேதநாயகி.

மாமனாருக்கு எண்ணெய் சேர்க்காமல் சப்பாத்தியும் குருமாவும். கொழுந்தனுக்கு தோசை காரசட்னி. கணவனுக்கு இட்லி காரம் அதிகம் இல்லாமல் சாம்பாரும் பொடியும் என ஆளுக்கு ஒன்றை அவர்களின் ருசிக்கும் உடலுக்கும் ஏற்றார் போல், பார்த்து பார்த்து சமைக்கவே ஒவ்வொரு காலையும் பரபரப்பாக செல்லும்.

மூன்று பெரிய ஆண்களுக்கு, மூன்று வேலையும் சுடசுட பிடித்த உணவு வகைகளை பார்த்து பார்த்து சமைப்பது எத்தனை பெரிய வேலை. கடந்த 15 ஆண்டுகளாக கொஞ்சமும் சலிக்காமல் அனைவருக்கும் தேவையானவற்றை பார்த்து பார்த்து செய்து வருபவளை, ஒருவேளையாவது “நீ சாப்பிட்டியா” என்று கேட்க ஒருவரும் இல்லை அவ்வீட்டினில்.

அடுப்பில் பருப்பும் இட்லியும் வெந்துகொண்டிருக்க, அதற்குள் கொல்லைக்கு ஓடி வந்த நாயகி, அழுக்கு துணிகளை பிரித்து ஒவ்வொரு டப்பிலும் அளவான பவுடர் போட்டு ஊரவைத்து கொண்டிருகையில், “அக்கா” என்றபடி தயக்கமாக வந்து நின்றாள் கோதை.

“அட கோத.. வா வா.. அம்மாக்கு இப்போ ஒடம்பு பரவால்லையா..” மிச்சமிருந்த துணியையும் டப்பில் போட்டு முக்கிவிட்டு எழுந்த நாயகி, அப்போது தான் கோதையின் முகத்தை பார்த்தாள்.

“என்ன கோத முகமெல்லாம் வீங்கி சிவந்து இருக்கு அழுதியா” ஈரக்கையை புடவையில் துடைத்துக் கொண்டு, தரைநோக்கிய அவள் முகத்தினை நிமிர்த்திப் பார்க்க, கண்கள் இரண்டும் கோவைபழம் போல சிவந்து வீங்கி இருந்தது.

“இ.இல்லக்கா கண்ணுல பூச்சி அடிச்சிடுச்சி. அதே” திக்கலாக சொன்ன கோதைக்கு இந்த வீட்டில் நிற்கவே உடல் கூசி அவமானத்தை தந்தது. வேறு எந்த வேலையும் தெரியாத பட்சத்தில், குடும்பத்தின் வயிற்று பசியை போக்க இங்கு வந்து தானே ஆக வேண்டும்.

கோதையின் ரணம் நாயகிக்கு புரியாமல் இருக்குமா! மேலும் தோண்டி துருவி அவளை சங்கடத்தில் ஆழ்த்த மனமின்றி, “சரி கோத மொகத்தை அளம்பிட்டு, வீட்டையெல்லாம் பெருக்கி சுத்தம் செஞ்சிடு. அதுக்கு முன்னாடி வா குடிக்க ஏதாவது போட்டு தரேன்” என்ற நாயகி, கோதை மறுக்க மறுக்க கையோடு இழுத்து சென்று டீ போட்டு கொடுத்தவள், அவள் குடிக்கும் வரை எங்கும் செல்லாது நின்றிருந்தாள்.

எங்கு நடக்கும் இப்படியொரு கூத்து. வீட்டுக்காரி வேலைக்காரியை அமர்த்தி டீ போட்டு கொடுத்து, அவள் குடிக்கும் வரை காத்திருப்பது எல்லாம். நாயகியை எண்ணி பெரும் மகிழ்ச்சி கொண்டாள் கோதை. அவள் இக்கட்டை தீர்க்க வழி செய்ததும் இல்லாமல், தன் மனம் நோகாமல் பேசி, தன்னை தங்கை போல் போதிக்கும் நாயகியை மிகவும் பிடித்துவிட்டது அவளுக்கு.

“சரி கோத, நீயி வேலைய பாரு, நான் போயி எல்லாருக்கும் டீ தண்ணி குடுத்துட்டு வரேன்” என்ற நாயகி கூடத்தில் அமர்ந்திருந்த மாமனாருக்கு சுடசுட டீயை நீட்டினாள்.

“என்னம்மா இம்புட்டு தாமதமா கொண்டார. இந்த ரவ டீக்காக எம்புட்டு நேரமா காத்திருக்குறது” காலையிலேயே சுல்லென விழுந்த மாமனாரை, சற்றே பயம் கலந்த பதட்டத்துடன் பார்த்த நாயகி,

“மன்னிச்சிக்கோங்க மாமா.. நாளைல இருந்து சீக்கிரமாகவே கொண்டாந்துடறேன்” பணிவாக சொன்ன நாயகி, சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரத்தில் வேகமாக நேரத்தை பார்த்தாள். காலை ஏழு மணிதான் ஆகிறது. அதற்கே இப்படி ஒரு பேச்சை வாங்க வேண்டி இருக்கிறது.

“தேவாக்காவது குடுத்தியா இல்லையா” ஏலக்காய் இஞ்சி தட்டிப் போட்ட நறுமணம் நாசியை தீண்ட, சப்புகொட்டி அதனை பருகியபடி கேட்டவருக்கு, ஒருநாளும் நாயகியின் கைப்பக்குவத்தை பாராட்டி பேச மனம் வந்ததில்லை. ஆனால் வேளாவேளைக்கு அவள் கையால் உண்ண அனைவரும் ஆஜர் ஆகிவிடுவர்.

“இன்னும் இல்லைங்க மாமா. குளிச்சிட்டு இருக்காவ வந்ததும் குடுத்திடறேன்”

“சரி சரி.. அந்த ஆனந்து பைய வந்தா என்னைய பாக்க வர சொன்னேன்னு சொல்லு. ராத்திரி முழுக்க வீட்டுக்கே வராம தோப்பு வீட்ல கூத்தடிக்கிறதே வழக்கமா போச்சி.

தரகர் சில நல்ல நல்ல வரண்களை சொல்லி, போட்டோவும் குடுத்துட்டு போனாரு. இந்த தரம் கண்டிப்பா அதுல ஒன்ன தேர்ந்தெடுத்து எப்டியாவது அவனுக்கு கால்க்கட்டு போட்டுடனும்” மகனை சாடியபடி எழுந்துகொள்ள,

“சரிங்க மாமா” என தலையாட்டிக்கொண்ட நாயகியின் மனதில், ஆனந்தால் கலங்கப்பட்டுப் போன கோதையின் எண்ணங்கள் தான் அலையாய் அலைக்கழித்தது.

கோதையும் நல்ல பெண் தான், அமைதியானவளும் கூட, திருமணமாகி கணவனோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடங்கும் முன்னமே, கற்பை பறிகொடுத்தவளுக்கு பேசாமல் ஆனந்தையே ஏன் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்ற யோசனை அவள் மனதை அரிக்க,

“நடப்பதை பேசு டி கூருகெட்டவளே” மனசாட்சியே அவள் தலையில் கொட்டியது.

“ஆமா ஆனந்து அத்தானுக்கு கோதைய கட்டி வச்சா பாவம் அவளை மிரட்டி மிரட்டியே ஒருவழி பண்ணிபுடுவாக. இவளும் நம்மள மாதிரிதே சரியான பயந்தாங்கோலி, யாராவது லேசா அதட்டினா கூட சின்ன புள்ள மாறி மெரண்டு போறா. அவைய மிரட்டி நாலு வச்சா.. ஆத்தே அம்புட்டுதே!” நெஞ்சில் கைவைத்து பெருமூச்சி விட்ட நாயகி,

” ஆனாலும் அத்தானுக்கு கோத பொருத்தமா இருப்பால்ல” என்ற ஆசையில் கண்கள் மின்னாமல் இல்லை.

இருந்தும் ஆனந்தின் முரட்டு குணத்திற்கு, பூவான கோதை தாக்குபிடிப்பது மிகவும் கடினமான ஒன்றாயிற்றே!

தான் கம்மல் கொடுத்து உதவியதை ஆனந்து கண்டறியும் முன்பு, எப்படியாவது கோதைக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து விட வேண்டும் என்று மனதார வேண்டியவளுக்கு தான் ஆனந்தின் முழு குணம் தெரியுமே!

விடயம் அவன் காதுக்கு சென்றால் கோதையின் நிலையும் மோசமாக மாறும். அதைவிட தன் கணவனுக்கு அந்த செய்தி தெரிய வந்தால் சொல்லவே வேண்டாம் தன் நிலையும் தலைகீழாக மாறிவிடும் என்ற பதற்றத்துடன், கணவனுக்கு தேநீரை கொண்டு வந்தாள்.

குளித்து முடித்து தலையை துவட்டியபடி வெளியே வந்த அமரதேவன், தான் வந்தது கூட தெரியாமல், ஏதோ யோசனையில் நின்றிருந்த நாயகியை ஒரு பார்வை பார்த்தவனாக,

“ஏய்.. என்ன டி காலையிலேயே நின்னுகிட்டே கனவு காணுறவ” கடுப்பாக கத்திய தேவனை, தேக அதிர்வோடு நிமிர்ந்து பார்த்தாள் நாயகி.

“ஒ.. ஒண்ணுமில்லைங்க சும்மாதே நின்னுட்டுருந்தேன், இந்தாங்க டீ” அவசரமாக அவனிடம் நீட்டிட, அவளை பார்வையால் அளந்துகொண்டே டீயை வாங்கி பருகிய தேவன், மறுக்கையால் தலையை துவட்டிக்கொண்டதை பார்த்ததும், தாமாக அவனிடமிருந்த துண்டை வாங்கி பூவைபோல மென்மையாக அவன் தலையினை அவள் துவட்டிவிட, சொர்கம் தோற்றுவிடும் அவன் மனைவியின் மென்மையில்.

நாயகியின் ஒவ்வொரு அசைவையும் நுண்ணியமாக கண்ணாடி வழியே கண்ட தேவனின் புருவம் இடுங்கியது.

“என்னடி இன்னைக்கு ஒருமார்க்கமா திரியிரவ. வேலையெல்லாம் முடிஞ்சிதா” குழப்பம் படிந்த அவளின் பளிங்கு முகத்தினை உற்று நோக்கியபடி டீயை உறிஞ்சினான் தேவன்.

“ம்.. முடிஞ்சிதுங்க. இனிமே மதியத்துக்கு வேண்டிய சாப்பாட்டு வேலையதே தொடங்கணும்” என்ற நாயகி, ஈரமான துண்டினை ஓரம் வைத்தாள்.

“ஓஹ்..அப்போ கால வேலையெல்லாம் முடிஞ்சிது அப்டிதானே..” கடுமை மாறிய ஆண் குரல் மனைவியின் மீதுள்ள ஆசையில் தாபமாக மாறியதை கவனிக்காமல் விட்டாள்.

“இல்லைங்க இனிமேதே வேலையே கெடக்கு. மூணு அண்டா துணிய ஊர வச்சிட்டு வந்திருக்கேன். அதை துவைச்சு முடிச்சி காய வச்ச கையோட சமையல் வேலைய தொட்டாதே சரியா இருக்கும்” அப்படி அவள் சொல்லும் போதே, டீ தம்புலர் சுவற்றில் அடித்து வீசப்பட்டதில் திடுக்கிட்ட நாயகி, மூச்சை உள்ளிழுத்து வாய்ப்பொத்தி விழித்தாள்.

“எப்பப்பாரு துணி தொவைக்கணும், சாமானை தேய்கனும், தோசை ஊத்தனும்னு என்னத்தையாவது சொல்லி, சேலை கசங்காம நோகாம நோம்பு கும்பிடதே வசிதியபாத்து என்னைய கட்டிக்கிட்டியா டி..” விஷமாக கக்கிய வார்த்தையில், ஏன் இந்த திடீர் கோபம் என்று ஒன்றும் புரியாமல் பார்த்தாள் கண்கள் கலங்கிய நிலையில்.

“புருசனை கவனிச்சி, அவனுக்கு வேண்டியதை சொல்லாமலே தெரிஞ்சி வச்சிக்கிட்டு தானா முன்வந்து செய்து குடுக்க தெரியாது. வேலை முடிஞ்சிதான்னு எதுக்கு டி கேப்பாங்க.. இம்புட்டு வருசமா என்னத்த டி குடும்பம் நடத்தி கிழிக்கிற..”

அதீத கோபத்தில் கத்திய தேவன், அவளை எரிச்சலாக பார்த்தபடி இடையில் கட்டி இருந்த துண்டினை கழட்டி தூரம் வீசியதில், அதுவரை பேந்த பேந்த விழித்து நின்ற நாயகி தன்னையே நொந்து போனாள்.

இத்தனை வருடங்கள் ஆகியும், கணவனின் கண் பார்வையின் அர்த்தம் கூட புரியாமல் அவனோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அவன் குரல் எப்போது குழையும் எப்போது எகுறும் இப்படி எதையுமே பிரித்துப் பார்க்க தெரியாத அப்பாவி மங்கை தான், தேவன் விழித்திருக்கும் தைரியமாக நிமிர்ந்து அவன் முகத்தினை கூட பார்த்ததில்லையே! இதில் எங்கிருந்து இப்படியான மாறுதல்களை கண்டறிய.

காலையிலேயே மிகவும் உக்கிரமாக மாறிய தேவன், சட்டென அவள் சேலை உருவ, செய்வதறியாது பாவமாக விழித்த நாயகி, கணவனின் வன்தீண்டலில், ஸ்ஸ்.. என்ற முணுகள் ஒலியோடு இமைகளை மூடிக்கொண்டாள்.

“என்ன டி சும்மா தொட்டதுக்கே, ஸ்ஸுன்ற.. அம்புட்டு வேகமா பிடிச்சிட்டேனா..” அழுத்தமாக பற்றி இருந்த மென்னிடையில் சட்டென் கரத்தின் வன்மையை தளர்த்தி நிமிர்ந்து அவள் முகம் காண, அவசரமாக “இல்லை” என்று தலையாட்டிவளின் செயல் மழலையை மிஞ்சி விடும்.

ரவிக்கையின் மீது கொத்தாக தொங்கிய அவன் சூடிய மாங்கல்ய சரடு, மங்கையின் கழுத்தை சுற்றி, மார்புக்குழி வரை கோவில் விக்ரகம் போல் அலங்கரித்து இருக்க, அதனை ஒவ்வொரு முறையும் தவறாது கண்களில் நிரப்பிக்கொள்ளும் தேவன், எத்தனை முறை அவள் மாங்கல்யம் தொட்ட இடத்தில் முத்தமிட்டானோ! நெஞ்சிக்குழியே கன்றி இருக்கும் அவன் மீசை குத்தி.

“ஏய்.. இன்னைக்கு வேற சோப்பு போட்டியா டி, வாசனை மயக்குது” பஞ்சி போன்ற கழுத்து வளைவில் முத்தமிட்டு கலசம் கசக்க,

“இ.இல்லைங்க, எப்பவும் போடற சோப்புதா” கணவனின் உடும்பு பிடியில் மூச்சி வாங்கியது.

“நல்லா இருக்கு டி. இந்த வாசனை” கிறங்கி அவள் நெஞ்சிக்குழியில் பதுங்கிக் கொள்ளும் கள்ளனுக்கு தெரியாதா, அவள் என்ன சோப்பு போடுவாள், என்ன ஷேம்பு தலைக்கு தேய்ப்பாள் என்று.

இத்தனைக்கும் அவனும் அவள் உபயோகிக்கும் அதே வழலையை தான் தேய்த்து குளிக்கிறான். இருந்தும் தாபம் முத்தும் போது அவள் வாயால் கேட்பது ஒரு தனி போதை தான்.

வீட்டில் அணிவதற்கு ஏகுவாக வேலைபாடுகள் இல்லாமல், உடலை உருத்தாது கச்சிதமாக தைத்து போட்டிருந்த மெரூன் நிற பட்டுபார்டர் வைத்த ரவிக்கையின் கொக்கியினை, ஒவ்வொன்றாக கழட்டியவனின் கூர் பார்வை, இப்போதும் முதல் ராத்திரியில் பார்த்த அதே தங்கசிலை போல, கட்டுக்கோப்பு குலையாது மின்னும் மனைவியின் அழகுகளை கொத்தித் தின்றது.

இவன் முறைக்கிறானா அல்லது ரசிக்கிறானா இப்படி எதுவும் அறியாத மங்கையோ, ஆணவனின் விரல்பட்ட இடமெங்கும் கூசி, தனங்கள் மட்டும் ஏறி இறங்கி உடல் அசையாமல் அமர்ந்திருந்தவள், “அச்சோ ஏங்க” என்ற அலறலுடன் சட்டென அவன் விரல்களை பிடித்துக் கொண்டாள்.

“இப்ப என்னடி பண்ணனும்” கடுப்பாக கேட்டவனை பாவமாக பார்த்த நாயகி,

“அ.அடுப்புல சாம்பாரை கொதிக்க வச்சிட்டு வந்தேங்க. நிறுத்த மறந்துட்டேன். வெரசா ஓடிபோயி நிறுத்திட்டு வந்திடவா..” 

மருண்ட விழிகள் உருல, கபடமில்லாத பால் முகம் அவன் உதடு தீண்டி நன்றாக சிவப்பேறி இருக்க, அவனுக்கோ தாபபோதை ஏறியது.

“கோத வந்துட்டா போல. பேச்சி சத்தம் கேட்டுச்சு. அவளே பாத்து அடுப்பை நிறுத்திப்பா, நீ என்னைய அணைச்சிக்கோ டி” விரகதாபத்தில் பிதற்றி, மீதம் இருந்த கொக்கியினை ஆவேசமாக கழட்டிய தேவன், மனைவியின் கோபுர அழகில் கண்சொக்கி வாய் முட்ட, கீழ் உதட்டை அழுந்த கடித்து நெஞ்சி புடைத்தவள், மறுப்பு சொல்ல வழியின்றி கணவனோடு இசைந்து போனாள்.

“ஏங்க அந்த பக்கம் வேணாம், ஏற்கனவே கடிச்சி காயமா போச்சி” அவசரமாக அவன் தலையை தூக்கிப் பிடிக்க, சொல் பேச்சை கேட்கும் ரகமா அவன். வேண்டுமென்றே வேண்டாம் என்ற இடத்தில் முட்டி, இதமாக எச்சில் ஒத்தடம் இட்டு நாவை சுழட்ட, கணவனின் அணுகுமுறையில் கண்கள் சொருகியது நுண்ணிடையாளுக்கும்.

“கைய எதுக்கு டி சும்மாவே வச்சிருக்க, ஒவ்வொரு தரமும் சொல்லனுமா.. என் முதுகை அழுத்தி புடிச்சிக் கட்டிகோ டி” அதரம் கொண்டு பெண் தேகத்தில் ஊர்வலம் வந்தவனை ஆதரிக்கத் தெரியாத அவள் கரங்களை எடுத்து, தாமாகவே அவனது முதுகோடு அணைத்துக் கொண்டு மோகத்தில் உருமிய தேவன், மனைவியின் மஞ்சள் வாசத்தில் கிறங்கிக் கரைந்தான்.

“ஏய் நாயகி இங்கன என்னத்த டி வசிய மருந்து வச்சிருக்க. ஒன்னைய தொட்ட நாளுல இருந்து என்னைய பித்தேத்தி சொக்க வைக்கிது” வளர்ந்த காளை அதீத பசியில் கருகமணியை விட்டுவிட்டு கவ்வ, தேகம் சிலிர்த்து அடங்கியவளின் முகம் வெட்கத்தில் திளைத்து.

ஒருநேரம் கடுகடுவென எரிந்து விழும் தேவன், மனைவியின் மீது அதீத ஆசை பெருக்கெடுத்து விட்டால் மட்டும், அவனையும் அறியாது இப்படிதான் அவளை ராணியாக கொண்டாடி அங்குலம் அங்குலமாக வர்ணிப்பான்.

இதெல்லாம் எப்போதாவது நடக்கும் அதிசயம் என்றாலும், நாயகிக்கு அற்ப சந்தோஷத்தை அளிப்பது இதுமாதிரியான சில நிகழ்வுகள் தானே! கணவனின் அன்பு முழுதாக இப்படியான கூடலில் தெரிகிறதோ இல்லையோ, தன் கணவன் தன்னை தவிர வேறு எந்த பெண்ணையும் மனதால் கூட எண்ண மாட்டான் என்பதை மட்டும் உறுதியாக நம்பினாள், அந்த பூ உள்ளம் கொண்டவள்.

“எ.ஏங்க ப்.போதுமே, நேரம் ஆச்சி. மாமா அத்தான் எல்லாரும் சாப்பிட வந்திடுவாக” மென்தேகம் அலையாய் குலுங்க அவன் ஊஞ்சலின் வேகம் குறைக்காமல், மேலும் கால் ஊன்றி வேகமெடுத்ததில் துவண்டு போனவளின் கவலையெல்லாம், மாமனாரும் ஆனந்தும்

உண்ண வருவதற்குள், மீண்டும் குளித்து முடித்து வேறு புடவைக்கட்டிக் கொண்டு, பரிமாற செல்ல வேண்டுமே என்பதில் தான்.

“மச்.. இரு டி.. இன்னும் கொஞ்ச நேரந்தே.. அதுக்குள்ள என்ன அவசரம்” பற்களை கடித்துக்கொண்டு உருமியவன், இதோடு பத்துமுறை சொல்லிவிட்டான், இதோ அதோ என்று. ஆனால் அவன் வேகத்தின் அளவு வாலிபனையே மிஞ்சியது என்று நாயகி அறியாததா!

“ஏங்க மாமா திட்டுவாக” விட்டால் அழுது விடும் நிலையில் அவனுக்கடியில் பாவமாக உதட்டை பிதுக்க, பிதுங்கிய உதட்டை தன் வாயில் வெற்றிலையாக அதக்கிக்கொண்ட தேவன், உர்.. உர்.. என்ற உருமளுடன் மூச்சிறைக்க பெண்நெஞ்சில் தலைசாய்த்து கண்மூடினான்.

“ஏங்க நான் போகட்டுமா” பள்ளி மாணவி போல் அனுமதி கேட்டு தேகம் களைத்து படுத்திருந்தவளை நொடியில் உதறித் தள்ளி விட்டு அவன் எழுந்துகொள்ள, அவள் மனமும் சேர்ந்தே உதிரியானது.

கூடலில் எந்த அளவிற்கு அவளை பூஜிக்கிறானோ, கூடல் முடிந்து எழும்போது முகத்தில் அடிக்கும் அவனின் இத்தகைய செயலில் தான், ஒவ்வொரு முறையும் துடித்துப் போகிறாள் வேதநாயகி.

தொடரும்.

இந்த கதைல நாயகனை தேடாதீங்க drs, நாயகிகளை மட்டும் போக்கஸ் பண்ணுங்க. ஏன்னா இவன்தான் நாயகன்னு எவனை சொன்னாலும் கண்டமேனிக்கு கழுவி ஊத்துவீங்க.

போக போக யாரை நாயகனா உங்க மனசு ஏற்குதோ அவனையே நாயகனா வச்சிக்கோங்க.

Related Posts

Leave a Comment

error: Content is protected !!